Blog

பாரதியார்

Bharathiyar 1
Old Syllabus

பாரதியார்

ஆசிரியர் குறிப்பு

இயற்பெயர் சுப்பிரமணியன், எனினும் சுப்பையா
பெற்றோர் சின்னசாமி ஐயர்  – இலக்குமி அம்மையார்
ஊர் தூத்துக்குடி (எட்டயபுரம்)
காலம் 11.12.1882 –  11.09.1921
துணைவியார் செல்லம்மாள்

வாழ்க்கைக் வரலாறு 

இவரின் தாயார் இலக்குமி அம்மாள் 1887ஆம் ஆண்டு மறைந்தார். அதனால் பாரதியார் தனது பாட்டியான பாகீரதி அம்மாளிடம் வளர்ந்தார். பாரதி தனது 11-ம் வயதில் பள்ளியில் படித்து கொண்டு இருக்கும் போது கவிபுனையும் ஆற்றலை அவர் வெளிப்படுத்தினார். இவருடைய கவித்திறனை பாராட்டி இவருக்கு பாரதி என்ற பட்டம் எட்டப்ப நாயக்கர் மன்னரால் எட்டயபுரம் அரசசபையால் வழங்கப்பட்டது. 1897ஆம் ஆண்டு தனது 13ஆம் வயதில் செல்லம்மாளை மணந்தார்.  இவர் செய்துவந்த தொழிலில் ஏற்பட்ட நட்டத்தினால் வறுமை நிலையினை அடைந்தார். இதனை எட்டயபுரம் மன்னருக்குத் தெரிவித்து பொருளுதவி வழங்குமாறு கடிதத்தில் கேட்டுக்கொண்டார். இதனால் இவருக்கு எட்டயபுரம் அரண்மனையில் பணி கிடைத்தது. ஆனால் அப்பணி பிடிக்காமல் சிறிது காலங்களிலேயே அப்பணியை விடுத்து காசி பயணம் மேற்க்கொண்டார். 1898 முதல் 1902 வரை அங்கேயே தங்கியிருக்க. பின்னர் எட்டயபுரத்தின் மன்னரால் அழைத்து வரப்பட்டு அரண்மனை ஒன்றினில் பாரதி வாழ்ந்தார்., 1904 ஆம் ஆண்டு பாரதி மதுரையில் எழுதிய பாடல் ‘விவேகபானு’ இதழில் வெளியானது. அவர் வாழ்நாள் முழுதும் பல்வேறு தருணங்களில் பத்திரிகை ஆசிரியராகவும், பள்ளியில் தமிழாசிரியராகவும் பணியாற்றியுள்ளார். பாரதிக்கு தமிழ், ஆங்கிலம், இந்தி, சமற்கிருதம், வங்காள மொழி ஆகியவற்றில் புலமை பெற்றவர். இவரின் சமகாலத்தைய மனிதர்கள் மகாத்மா காந்தி, பால கங்காதர திலகர்,   உ. வே. சாமிநாதையர்,  வ. உ. சிதம்பரம் பிள்ளை மற்றும் மகான் அரவிந்தர் ஆகியோர்.

சுதேச மித்திரன், இந்தியா, சக்கரவரித்தினி, விஜயா முதலிய இதழ்களின் ஆசிரியராக இருந்துள்ளார். கர்மயேகாகி, பாலபாரத், சூர்மயோதயம் போன்ற வேற பத்திரிக்கைகளையும் நடத்தினார்.

சாதி இரண்டொழிய வேறில்லையென்ற தமிழ்மகள் சொல்லிய சொல் அமிழ்தமென்போம் என்று முழங்கியவர் பாரதியார் ஆவார். இவர் மிகச்சிறந்த போராட்ட வீரர். பாரதியாரின் கவிதைகள் 20ஆம் நூற்றாண்டில் அரும்பிய மறுமலர்ச்சிக்கு வித்தாக அமைந்தன. இவர் தேசியக்கவிஞர் எனப்பாராட்டப் பெற்றவர். மன்னர்களை மட்டுமே மகிழ்வித்து வந்த கவிதை மரபை மாற்றி, எளிய மக்களை நோக்கிக் கவிதை கருவியைத் திருப்பி அமைத்த பெருமை பாரதியைச் சாரும். மக்கள் மேம்பாட்டை அடியொற்றியே அவரது கவிதைகள் அமைந்துள்ளன. தேசிய ஒருமைபாட்டின் உயர்வினை விளக்கும் வகையில் அவரது கவிதை அமைந்திருக்கும். மதுரை சேதுபதி உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றினார்.

பாரதியார் இறப்பு:

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் யானை 1921 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இவரை தாக்கியதால் நோய்வாய்ப்பட்டார். பிறகு 11.09.1921-ல் மரணமடைந்தார்.

பாரதியார் – புனைப் பெயர்கள்

  • காளிதாசன்
  • காசி
  • ரிஷி குமாரன்
  • சக்திதாசன்
  • சாவித்திரி
  • ஓர் உத்தம தேசாபிமானி
  • நித்திய தீரர்
  • ஷெல்லிதாசன்

பாரதியார் சிறப்பு பெயர்கள்

  • புதுக் கவிதையின் முன்னோடி
  • பைந்தமிழ்த் தேர்பாகன்(பாவேந்தர் பாராட்டினார் )
  • சிந்துக்குத் தந்தை, செந்தமிழ்த் தேனீ, புதிய அறம் பாட வந்த அறிஞர், மறம் பாட வந்த மறவன் (பாவேந்தர் பாராட்டினார் )
  • நீடு துயில் நீக்கப் பாடிவந்த நிலா(பாவேந்தர் பாராட்டினார் )
  • காடு கமழும் கற்பூரச் சொற்கோ(பாவேந்தர் பாராட்டினார்)
  • பாட்டுக்கொரு புலவன் பாரதி(கவிமணி பாராட்டினார்)
  • தற்கால இலக்கியத்தின் விடிவெள்ளி
  • சென்னையின் தமிழ்க் கவிஞன் (ஆங்கில பத்திரிகையாளர் நெவின்சன் பாராட்டினார்)
  • தேசியக்கவி
  • விடுதலைக்கவி
  • உண்மைக் கவிஞன், உணர்ச்சிக் கவிஞன், உரிமைக் கவிஞன், குழந்தைக் கவிஞன், புதுயுகக் கவிஞன், கண்டனக் கவிஞன், காதற் கவிஞன், சுதந்திர கவிஞன், தெய்வக் கவிஞன்.
  • அமரக்கவி
  • முன்னறி புலவன்
  • மகாகவி
  • உலககவி
  • தமிழ்க்கவி
  • மக்கள் கவிஞர்
  • வரகவி
  • முண்டாசுக்கவி

பாரதியார் இயற்றிய நூல்கள் – உரைநடை

  • ஞானரதம் (தமிழின் முதல் உரைநடை காவியம், பாரதிதாசன் = “ஞானரதம் போல் ஒரு நூல் எழுதுவதற்கு நானிலத்தில் ஆளில்லை” என்றார்)
  • தராசு
  • சந்திரிகையின் கதை
  • மாதர்
  • கலைகள்
  • பதஞ்சலியோக சூத்திரம்
  • ஹிந்து தருமம் (காந்தி உபதேசங்கள்)

ஆங்கில நூல்

THE FOX WITH THE GOLDEN TAIL

கவிதை நூல்கள்

  • கண்ணன் பாட்டு
  • குயில் பாட்டு
  • பாஞ்சாலி சபதம்
  • காட்சி(வசன கவிதை)
  • பாப்பா பாட்டு
  • பாரதமாதா திருப்பள்ளியெழுச்சி
  • பாரததேவியின் திருத்தசாங்கம்
  • விநாயகர் நான்மணிமாலை
  • சுதேச கீதங்கள் (முதல் கவிதை தொகுப்பு)
  • ஜன்மபூமி (2-வது கவிதை தொகுதி)

நீதி நூல்

  • புதிய ஆத்திச்சூடி

சிறுகதைகள்

  • திண்டிம சாஸ்திரி
  • பூலோக ரம்பை
  • ஆறில் ஒரு பங்கு
  • ஸ்வர்ண குமாரி
  • சின்ன சங்கரன் கதை
  • பொன்வால் நரி
  • நவதந்திரக்கதைகள்
  • கதைக்கொத்து(சிறுகதை தொகுப்பு)
  • சின்னஞ்சிறு கிளியே

மொழிபெயர்ப்பு நூல்

  • புதிய கட்சியின் கோட்பாடுகள் (திலகருக்கு ஆதரவாக)
  • பஞ்ச வியாசங்கள் (தாகூர் கவிதைகள்)
  • ஜீவவாக்கு (ஜகதீஸ் சந்திர போஸ் பற்றியது)

நாடகம்

  • ஜெகசித்திரம்

வசனகவிதை

  • காட்சி

விடுதலைப் போராட்டத்தில் பாரதியின் பங்கு :

இந்திய சுதந்திரப் போரில், பாரதியின் பாடல்கள் உணர்ச்சி பொங்கும் வகயில், காட்டுத்தீ போன்று, தமிழ்நாட்டை விடுதலைக்காக வீறுகொள்ளச் செய்தது. பாரதியார் “இந்திய பத்திரிக்கையின்” சுதந்திர பாடல்கள் மற்றும் கட்டுரைகள் மூலம் மக்களிடையே விடுதலை உணர்வை தூண்டும் வகையில் எழுதினார். இதனால் தமிழ்நாட்டில் பலத்த ஆதரவு மக்களிடம் கிடைத்தது, இதைக் கண்ட பிரிட்டிஷ் ஆட்சி “இந்தியா பத்திரிக்கைக்கு” தடை விதித்து பாரதியாரை கைது செய்து சிறையிலும் அடைத்தது.

பாரதியார் பற்றிய குறிப்புகள்

  • எட்டப்ப நாயக்கர் மன்னர் இவருடைய கவித்திறனை மெச்சி,“கலைமகள்”எனப் பொருள்படும் “பாரதி” என்ற பட்டம் வழங்கினார்
  • தம்மை “ஷெல்லிதாசன்” என்று அழைத்துக்கொண்டார்
  • தம் பூணூலை கனகலிங்கம் என்ற ஆதி திராவிடற்கு அளித்தவர்
  • தம் பாடல்களுக்கு தாமே மெட்டு அமைத்த கவிஞர்
  • 1905இல் சக்கரவர்த்தினி என்ற மகளிர் மாத இதழ் தொடங்கினார்
  • டிசம்பர் 1909-1910 கர்மயோகி, பாலபாரத் ஆகிய இதழை நடத்தினார்
  • மே 1906 – செப்.1906, புதுச்சேரி: 10.11.1908-17.05.1910, இந்தியா என்ற வார
  • இதழில் பணியாற்றினார்.
  • பிப்.1910 ”தர்மம்”என்ற இதழ்களிலும் ”பாலபாரதா ஆர் யங் இண்டியா என்ற ஆங்கில இதழிலும் பாரதியார் ஆசிரியராகப் பணியாற்றினார்.
  • 1904 முதல் ஆகஸ்ட் 1906 வரை மற்றும் ஆகஸ்ட் 1920 முதல் செப்டம்பர் 1920 வரை பாரதியார் சுதேசி மித்திரன்”  என்ற இதழின் துணையாசிரியர் ஆக பணிப்புரிந்தார் தம் வாழ்நாளின் இறுதிவரை பணியாற்றினர்.
  • ”இந்தியா”  என்ற இதழின் ஆசிரியராகப் பணிபுரிந்தார்
  • சென்னை ஜனசங்கம் என்ற அமைப்பைத் தொடங்கினார்
  • நிவேதிதா தேவியைச் சந்தித்த பின் தீவிரவாதி ஆனார்
  • இவரின் ஞானகுரு = நிவேதிதா தேவி
  • இவரின் அரசியல் குரு = திலகர்
  • பதினான்கு மொழிகள் அறிந்தவர்
  • இவர் “தம்பி” என அழைப்பது = பரலி சு நெல்லையப்பர்
  • பாரதியார் பாடல்களை முதன் முதலில் மக்களுக்கு அறிமுகம் செய்தவர் பரலி நெல்லையப்பர்
  • பாரதியார் பாடல்களை முதலில் வெளியிட்டவர் = கிருஷ்ணசாமி ஐயர்
  • பாரதியின் படத்தை வரைந்தவர் “ஆர்ய என்ற பாஷ்யம்”
  • பாரதிக்கு “மகாகவி” என்ற பட்டம் கொடுத்தவர் வ.ரா(ராமசாமி ஐயங்கார்)
  • பாரதி சங்கத்தை தொடங்கியவர் = கல்கி
  • மதுரை சேதுபதி உயர்நிலைப்பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணிபுரிந்தார்
  • இவரின் முதல் பாடல் வெளிவந்த இதழ் = விவேகபானு(1904, தலைப்பு = தனிமை இரக்கம்)
  • பாரதியின் முதல் கவிதை தொகுதி = சுதேச கீதங்கள்
  • இவர் கீதையை தமிழில் மொழிபெயர்த்துள்ளார்
  • பதஞ்சலி சூத்திரத்திற்கு உரை எழுதி உள்ளார்
  • தாகூரின் சிறுகதைகள் 11ஐத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்
  • பாரதியார் நெல்லையப்பருக்கு எழுதிய கடிதத்தில், “தமிழை விட மற்றொரு பாஷை சுகமாக இருப்பதைப் பார்க்கும் பொது எனக்கு வருத்தம் உண்டாகிறது. தமிழனை விட மற்றொரு சாதி அறிவிலும் வலிமையிலும் உயர்ந்திருப்பது எனக்குச் சம்மதமில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்
  • உரைநடை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு, “கூடிய வரை பேசுவது போலவே எழுதுவது தான் உத்தமம் என்பது என்னுடைய கட்சி” என்கிறார்
  • தமிழில் முதன் முதலில் கருத்துப்படங்கள் வெளியிட்டவர் இவரே
  • தமிழ் பத்திரிகை உலகில் முதன் முதலில் கார்ட்டூன்களை அறிமுகப்படுத்தியவர் பாரதி. இந்தியா (1905) பத்திரிகைக்கே அந்தப் பெருமை சேரும்.
  • முதன்முதலில் தமிழ்ப் பத்திரிகையில் தமிழ் ஆண்டு மாதம் குறித்தவர் (இந்தியா, விஜயா பாரதியே. விஜயா இதழில் தமிழ் எண்களையும் பயன்படுத்தி புரட்சி செய்தவர் பாரதி
  • மகாத்மா காந்தி இந்தியாவில் அறியப்படுவதற்கு முன்னரே 1909ல் காந்திபசு என்ற கருத்துப் படத்தை இந்தியாவில் வெளியிட்டவர் பாரதி.
  • ஹிந்து ஜனத்தொகை குறைவதன் அபாயத்தையும், தீண்டாமை அரக்கனின் கொடிய விளைவையும் தயவு தாட்சண்யமின்றி சுட்டிக் காட்டியவர் பாரதி
  • “புவியனைத்தும் போற்றத் தமிழ்மொழியைப் புகளில் ஏற்ற, கவியரசன் இல்லை என்ற குறை என்னால் தீர்ந்தது; நமக்குத் தொழில் கவிதை! நாட்டிற் குழைத்தல்! இமைப்பொழுதும் சோராதிருத்தல்” என்று அறிவித்தார்
  • “சுவை புதிது! பொருள் புதிது! வளம் புதிது! சொல் புதிது! சோதிமிக்க நவகவிதை! எந்நாளும் அழியாத மாகவிதை என் கவிதை” என்று சூளுரைத்தார்
  • மரணத் தருவாயில் பாரதி எழுத நினைத்த கட்டுரை = அமானுல்லா கான் பற்றியது
  • பாரதியின் இறப்பிற்கு பின்னர் மயானத்தில் இறுதியாக இரங்கல் உரை நிகழ்த்தியவர் = கிறித்துவப் பாதிரியார் சுரேந்திரநாத் ஆர்யா ஆவார்.
  • அமர கலா விலாசினி சபை = மகாகவி பாரதிக்கு அவர் மறைவிற்கு பின் முதல் இரங்கல் கூட்டத்தை நடத்தி வரலாற்றுப் பணியை நிகழ்த்தியது “அமர கலா விலாசினி சபை” ஆகும்.

பாரதியார் – சிறப்பு

  • “புரட்சி, பொதுவுடைமை” என்ற வார்த்தையை முதன் முதலில் பயன்படுத்தியவர் = பாரதியார்
  • முதன் முதலில் தமிழ்க்கவிதைகளில் புதிய முயற்சிகளை மேற்கொண்வர் = பாரதியார்.
  • அவரின் கவிதை வடிவம் தமிழின் மரபான செய்யுள் வடிவமும் நாட்டார் பாடல்களின் ஓசை வடிவமும் கலந்தது.
  • தமிழில் புதுமையான வடிவத்தில் அமைந்த முதல் வசன கவிதை நூல் = பாரதியாரின் “காட்சி”.
  • கவிதையில் சுயசரிதம் எழுதிய முதல் கவிஞர் இவரே
  • பாரதியாரின் நூல்கள் தமிழ்நாடு மாநில அரசினால் 1949-ஆம் ஆண்டில் நாட்டுடைமை ஆக்கப்பட்டன. இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமை ஆக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையதாகும்
  • பரலி நெல்லையப்பர் = பாரதியார் ஒரு அவதாரப் புருஷர், இவர் நூலைத் தமிழர் வேதமாகக் கொள்வார்களாக
  • நாமக்கல் கவிஞர் = பாரதியை நினைத்திட்டாலும் சுதந்திரத்தின் ஆவேசம் சுருக்கென்று ஏறும்; இந்தியன் நான் என்றிடும் நல் இறுமாப்பு உண்டாம்
  • கவிமணி = பாட்டுக்கொரு புலவன் பாரதி
  • கவிமணி = இவரின் பாப்பா பாட்டில் நெஞ்சை பறிகொடுத்தேன்
  • பாரதியின் சுயசரிதமே தமிழின் முதல் சுயசரிதம்
  • அவனுக்கு (பாரதி) நந்தனார் சரித்திரக் கீர்த்தனை மெட்டும் தெரியும்; ஜப்பானிய ஹைக்கூ லாவகமும் புரியும். தாகூரையும் அறிவான்; வால்ட் விட்மனின் புதுக்கவிதை ஒளியையும் உணர்வான். காளிதாசனான அவன் ஷெல்லிதாசனாகவும் தன்னை அறிவித்துக் கொண்டவன். சுதந்திரத்தையும் பெண் உரிமையையும் புதுயுகக் கனவுகளையும் நவநவமான மொழிகளில் பேசியவன்” என்கிறார்.
  • அனைவரும் தாய்நாடு எனக் கூற பாரதி மட்டும் தந்தையர் நாடு எனக் கூறியவர்
  • வையாபுரிப்பிள்ளை = இவருடைய பாடல்களில் கருத்தாழமும், ஆற்றலும், எளிமையும், இசை நயமும், தொடர் இன்பமும் ஒருங்கு அமையக் காண்கிறோம். இவ்வளவு சிறந்த கவிஞர் தமிழுலகில் சில நூற்றாண்டுகளாகத் தோன்றவில்லை
  • Dr.H.Cousins = அழகின் தூய – வாய்மையான வடிவத்தை பாரதி கவிதையிலே காண இயலும்
  • Dr.H.Cousins = இந்தியாவின் நான்கு குறிப்பிடத்தக்க கவிஞர்கள் தாகூர், அரவிந்தர், சரோஜினி நாயுடு மற்றும் பாரதியார் ஆவர்
  • வ.ரா = பாரதியார் எதிர்காலத்தில் பல நூறு ஆண்டுகள் பெருமையுடன் மதிக்கப்படப் போகின்ற கவிஞர்களின் சிரோஸ்டமானவர். பாரதியாரின் கவிதை உள்ளம், நவரசங்கள் வழியாக வழிந்தோடி வெள்ளப் பெருக்கெடுத்திருப்பதை அவருடைய பாடல்களில் காணலாம். அவர் ஒரு சர்வக்கவி; அதாவது உலகக்கவி. இந்த ஸ்தானம் அவருடைய கவிதைக்கு கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை
  • வ.ரா = பாரதியாரின் கவிதை ஆளாம் கரையும் காண முடியாத கடலாகும்; பாரதியாரை போகியும் போற்றுவான்; யோகியும் போற்றுவான்; ஆகாயத்தில் இருந்து விழும் நீர்த்துளிகள் யாவும் எப்படியோ கடலுக்குப் போய்ச்  சேர்ந்து விடுவது போல, பல்வேறு தன்மைகள் கொண்ட மனித உள்ளங்கள் மகாகவி என்ற அலையிலாப் பெருங்கடல் உள்ளத்தில் போய் அடங்கி விடுகின்றன. ஆகவே மகாகவி எல்லோருக்கும் சொந்தம்”
  • கண்ணதாசன் = தமிழகமே, பாரதியைக் கொண்டாடு. அதன்மூலம் பாரதத்தை நீ கொண்டாடுகிறாய்; தேசபக்தியைக் கொண்டாடுகிறாய்; தமிழ் மொழியைக் கொண்டாடுகிறாய்; பாரதியைக் கொண்டாடாதவனுக்கு தமிழன் என்று சொல்லிக் கொள்ள அருகதை இல்லை
  • 2021 முதல் தமிழக அரசின் சார்பில் “செப்டம்பர் 11” ஆம் தேதி “மகாகவி நாள்” ஆக ஆண்டு தோறும் கடைபிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
  • வ.உ.சி = பாரதியை “அறிவின் சிகரம்” என்றார்
  • வ.உ.சி = தன்னை சோழனாகவும், பாரதியை கம்பனாகவும் கருதி மகிழ்ந்தவர் வ.உ.சி
  • வ.உ.சி = பாரதியை மாமனாகவும், தண்ணிய மருமகனாகவும் உறவு கொண்டாடியவர் வ.உ.சி ஆவர்.
  • வ.உ.சி = “மாமா இவ்வுலகை விட்டுப் போய்விட்டாலும் அவருடைய தேசிய கீதங்களும் மற்றைய பாடல்களும் கதைகளும் இவ்வுலகம் உள்ள அளவும் நிலைத்து நிற்குமென்பதில் ஐயம் இல்லை. அவருடைய பெயர் தேசாபிமானிகளுடைய சரித்திரத்தில் மட்டுமல்லாமல் கவிகளுடைய சரித்திரத்திலும் முதன்மையான இடத்தைப் பெரும்”
தெரிந்து தெளிவோம் 
 

உரைநடையும் கவிதையும் இணைந்து யாப்புக் கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும். விதை வடிவம் வசன கவிதை எனப்படும். ஆங்கிலத்தில் Prose Poetry என்பர். தமிழில் பாரதியார் இதனை அறிமுகம் செய்தார்சான்று

“இல்வுலகம் இனியத, இதிலுள் வான் இனிமை
யுடையது காற்றும் இனிது”.

உணர்ச்சி பொங்கக் கவிதை படைக்கும் இடங்களில் யாப்பு, தடையாக இருப்பதை உணர்ந்த பாரதியார் இவ்வடிவத்தை இலகுவாகக் கையாண்டுள்ளார்.

இவ்வசன கவிதையே புதுக்கவிதை என்ற வடிவம் உருவாகக் காரணமாயிற்று..

பாரதியை பற்றி பாவேந்தர்

பைந்தமிழ்த் தேர்ப்பாகன்
செந்தமிழ்த் தேனி
சிந்துக்குத் தந்தை
குவிக்கும் கவிதைக் குயில்
இந்நாட்டினைக் கவிழ்க்கும் பகையைக்
கவிழ்க்கும் கவிமுரசு
நீடு துயில் நீக்கப் பாடிவந்த நிலா
காடு கமழும் கற்பூரச் சொற்கோ
கற்பனை ஊற்றாம் கவிதையின் புதையல்
திறம் பாட வந்த மறவன் புதிய
அறம் பாட வந்த அறிஞன்
என்னென்று சொல்வேன் என்னென்று சொல்வேன்
தமிழால் பாரதி தகுதி பெற்றதும்
தமிழ் பாரதியால் தகுதி பெற்றதும் 

பாரதியார் உலககவிஅகத்தில் அன்பும்
பரந்துயர்ந்த அறிவினிலே ஒளியும் வாய்ந்தோர்
ஒரூர்க்கொரு நாட்டுக்குரிய தான
ஓட்டைச் சாண் நினைப்புடையார் அல்லர் 

தமிழுக்கும், தமிழுக்கு உயர்வளிக்கும் தலைவனை எண்ணித் தவம் கிடக்கையில் இலகு பாரதிப் புலவர் தோன்றினார்

 

பாரத தேசம்‌

ஆயுதம்‌ செய்வோம்‌ நல்ல காகிதம்‌ செய்வோம்‌

ஆலைகள்‌ வைப்போம்கல்விச்‌ சாலைகள்‌ வைப்போம்‌

ஒயுதல்‌ செய்யோம்தலை சாயுதல்‌ செய்யோம்‌

உண்மைகள்‌ சொல்வோம்பல வண்மைகள்‌ செய்வோம்‌.

குடைகள்‌ செய்வோம்‌உழு படைகள்‌ செய்வோம்‌

கோணிகள்‌ செய்வோம்‌இரும்‌ பாணிகள்‌ செய்வோம்‌

நடையும்‌ பறப்புமுணர்‌ வண்டிகள்‌ செய்வோம்‌

ஞாலம்‌ நடுங்கவரும்‌ கப்பல்கள்‌ செய்வோம்‌.

காவியம்‌ செய்வோம்‌ நல்ல காடு வளர்ப்போம்‌

கலை வளர்ப்போம்‌ கொல்லர்‌ உலைவளர்ப்போம்‌

ஒவியம்‌ செய்வோம்நல்ல ஊசிகள்‌ செய்வோம்‌

உலகத்‌ தொழிலனைத்தும்‌ உவந்து செய்வோம்‌.

சாதி இரண்டொழிய வேறில்லை யென்றே

தமிழ்மகள்‌ சொல்லியசொல்‌ அமிழ்தமென்போம்‌

நீதி நெறியினின்று பிறர்க்குதவும்‌

நேர்மையர்‌ மேலவர்‌; கீழவர்‌ மற்றோர்‌.

– மகாகவி பாரதியார்‌

Class 1 Bharathiyar Read more

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories