பாரதியார் (மேலும்)
August 10, 2023 2025-01-11 13:56பாரதியார் (மேலும்)
பாரதியார் (மேலும்)
மேற்கோள் பாரதியின் சிறந்த தொடர்கள்
“யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிப்போல்
இனிதாவது எங்கும் காணோம்”
“சொல்லில் உயர்வு தமிச் சொல்லே – அதைத்
தொழுது படித்திடடி பாப்பா”
“ஏழை என்றும் அடிமை என்றும் எவனும் இல்லை சாதியில்”
“உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின்”
“வாக்கினிலே ஒளி உண்டாம்”
“தருமத்தின் வாழ்வுதனைச் சூது கவ்வும்”
“முப்பதுகோடி முகமுடையாள் உயிர்
மொய்ம்புற ஒன்றுடையாள்
“ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு”
“மாந்தர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம்”
“எல்லோரும் இந்நாட்டு மன்னர்”
“ஓடி விளையாடு பாப்பா”
“வெள்ளிப் பனிமலையின் மீது உலாவுவோம்”
“தண்ணீர் விட்டா வளர்த்தோம், கண்ணீரால் காத்தோம்”
” பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழில் மொழி பெயர்தல் வேண்டும்”
” இரவாதா புகழுடயை புதுநூல்கள் தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும்”
” காக்கை குருவி எங்கள் ஜாதி – நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம் “
” ஆயிரம் உண்டிக்கு ஜாதியெனில் அந்நியர் வந்து புகழ் என்ன நீதி “
” பாருக்குள்ளே நல்ல நாடு நாமிருக்கும் நாடு நமது என்பதரிந்தோம்”
” ஆடுவோமே பள்ளு படுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்துவிட்டோமென்று “
” காசிநகர் புலவன் பாடும்வரைதான் உரைத்தான் காஞ்சியில் கேட்பதர்கோர் கருவி செய்யவோம் “
” வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர் செய்வோம்”
” வாழிய செந்தமிழ் வாழ்க நற்றமிழர் “
” செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே “
” தேமதுர தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும் “
” பாரத பூமி பழம்பெரும் பூமி நீர்தன் புதல்வர் இன்நினைவ அகற்றாதீர்”
” தெருவெல்லாம் தமிழ் முழக்கம் செழிக்கசெய்வீர்”
“சொல்லின் தமிழ்சொல்லே “
” வயிற்றுக்கு சொறிடவேண்டும் – இங்கு வாழும் மனிதருக்கெல்லாம் “
” உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் “
“எல்லோரும் ஓர் குலம் ; எல்லோரும் ஓர் இனம் “.
” தமிழ்திரு நாடு தன்னை பெற்ற – எங்கள் தாயென்று பாப்பா “
” ஏழையென்றும் அடிமையென்றும் எவனுமில்லை ஜாதியில் “
” சுவை புதிது, பொருள் புதிது, வளம் புதிது, சொல் புதிது சோதிமிக்க நவக்கவிதை “
” நெஞ்சு பொருகுதில்லையே – இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால் “
” என்று தணியும் இந்த சுதந்திர தாகம் “
” பக்தி செய்வீர் ஜெகத்தீரே பயனுண்டு பக்தியினால் “
” நல்லதொர் வீணை செய்தே “
” கொட்டு முரசே கொட்டு முரசே “
” எண்ணிய மொழிதல் வேண்டும் நல்லதே எண்ணல் வேண்டும் “
” நாடும் மொழியும் நமதிரு கண்கள் “
” தண்ணீர் விட்டா வளர்த்தோம் கண்ணீறால் காத்தோம் “
” வள்ளுவன் தன்னை உலகினுக்கு தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு “
” நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் என்றொரு மணியாரம் படைத்த தமிழ்நாடு “
” கல்வியில் சிறந்த தமிழ்நாடு – புகழ் கம்பன் பிறந்த தமிழ்நாடு “
” காவேரி தென் பண்ணை பாலாறு – தமிழ் கண்டத்தோர் வையை பொருநை நதி “
” ஒண்டுபாட்டால் உண்டு வாழ்வு “
” வந்தே மாதரம் எண்போம் எங்கள் மாநிலத் தாயை வணங்கு என்போம் “
” யாமரிந்த புலவரிலே கம்பனை போல் பூமிதனில் எங்கேனும் பிறந்ததில்லை “
” உன் கண்ணில் நீர் வழிந்தால் என் நெஞ்சில் உத்திரம் கொட்டுதடி “
” தர்மத்தின் வாழ்வுதனை சூதுக்கவும் தர்மம் மறுபடியும் வெல்லும் “
” பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனி சிறந்தனவே “
” ஊண் மிக விரும்பு, கைத்தோழில் போற்று, தையிலை போற்று, (மகளிரை போற்று)”
“அச்சம் இல்லை அச்சம் இல்லை” அச்சம் என்பதில்லையே!
உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும்
“அச்சம் இல்லை அச்சம் இல்லை” அச்சம் என்பதில்லையே!இது வெறும் பாடல் மட்டும் இல்லை, இதனை கேட்டவர்கள் மனதில் எல்லாம் வீரத்தினை வெறி கொண்டு எழச் செய்யும் பாடல். ஆண்டவனையும், அரசனையும் வாழ்த்தி பாடிய காலகட்டத்தில் தமிழ் வாழ்க! தமிழர் வாழ்க! என முதலில் கவி பாடியவர் சுப்பிரமணிய பாரதி ஆவார்.
“அக்கினி குஞ்சொன்று கண்டேன்”…
- அதை ஆங்கோர் மரத்திடை பொந்தினில் வைத்தேன்…
- வெந்து தணிந்தது காடு…
- தளிர் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டொ……
இந்த பாடல் ஒவ்வொரு மனிதனின் உள்ளத்திலும் வீரத்தினை தூண்டக்கூடியது, அன்றைய காலக்கட்டத்தில் பாரதிக்கு இணையாக வேறு யாரும் அவ்வாறு பாடல்கள் எழுதியது இல்லை..மக்களிடம் தேசிய உணர்வை தூண்டும் வகையில் தேசப் பாடல்கள் இவர் எழுதியதால் இவர் “தேசிய கவியாக” அனைவராலும் போற்றப்பட்டார்.
“தனி ஒருவனுக்கு உணவு இல்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம்”
இந்தியாவில் உள்ள தனிப்பட்ட ஒவ்வொரு மனிதனையும் பாரதி எண்ணினான், அவன் வ்றுமையில் இருப்பது அவனால் பொறுக்க முடியாமல் குரல் கொடுத்தான்.சாதிக்கு எதிராக “காக்கை குருவி எங்கள் சாதி” என்று பாடினார். இவர் பாரதியார் என்றும், மகாகவி என்றும் அழைக்கப்பட்டார். இவர் ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிக்கையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி, பெண் விடுதலைக்காக பாடுப்பட்டவர், சாதி சம்பர்தாயத்தினை, மூடப் பழக்கத்தினை அறவே எதிர்த்தவர் என பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர்.
கிளிக்கண்ணிகள்
நெஞ்சில் உரமுமின்றி நேர்மைத் திறமு மின்றி,
வஞ்சனை சொல்வா ரடீ! – கிளியே!
வாய்ச் சொல்லில் வீரரடி.
கூட்டத்தில் கூடிநின்று கூவிப் பிதற்ற லன்றி,
நாட்டத்தில் கொள்ளா ரடீ! – கிளியே!
நாளில் மறப்பா ரடீ
சொந்த அரசும்புவிச் சுகங்களும் மாண்பு களும்
அந்தகர்க் குண்டாகு மோ? – கிளியே!
அகலிகளுக் கின்ப முண்டோ ?
கண்கள் இரண்டிருந்தும் காணுந் திறமை யற்ற
பெண்களின் கூட்டமடீ! – கிளியே!
பேசிப் பயனென் னடீ
யந்திர சாலை யென்பார் எங்கள் துணிகளென்பார்,
மந்திரத் தாலே யெங்கும் – கிளியே!
மாங்கனி வீழ்வ துண்டோ !
உப்பென்றும் சீனி என்றும் உள்நாட்டுச் சேலை என்றும்
செப்பித் திரிவா ரடீ! – கிளியே!
செய்வ தறியா ரடீ!
தேவியர் மானம் என்றும் தெய்வத்தின் பக்தி என்றும்
நாவினாற் சொல்வ தல்லால் – கிளியே!
நம்புத லற்றா ரடீ!
மாதரைக் கற்பழித்து வன்கண்மை பிறர் செய்யப்
பேதைகள் போலு யிரைக் – கிளியே
பேணி யிருந்தா ரடீ!
தேவி கோயிலிற் சென்று தீமை பிறர்கள் செய்ய
ஆவி பெரிதென் றெண்ணிக் – கிளியே
அஞ்சிக் கிடந்தா ரடீ!
அச்சமும் பேடி மையும் அடிமைச் சிறு மதியும்
உச்சத்திற் கொண்டா ரடீஸ்ரீ – கிளியே
ஊமைச் சனங்க ளடீ!
ஊக்கமும் உள்வலியும் உண்மையிற் பற்று மில்லா
மாக்களுக் கோர் கணமும் – கிளியே
வாழத் தகுதி யுண்டோ ?
மானம் சிறிதென் றெண்ணி வாழ்வு பெரிதென் றெண்ணும்
ஈனர்க் குலகந் தனில் – கிளியே!
இருக்க நிலைமை யுண்டோ ?
சிந்தையிற் கள்விரும்பிச் சிவசிவ வென்பது போல்
வந்தே மாதர மென்பார்! – கிளியே!
மனத்தி லதனைக் கொள்ளார்
பழமை பழமை யென்று பாவனை பேச லன்றிப்
பழமை இருந்த நிலை! – கிளியே!
பாமர ரேதறி வார்!
நாட்டில் அவமதிப்பும் நாணின்றி இழி செல்வத்
தேட்டில் விருப்புங் கொண்டே! – கிளியே!
சிறுமை யடைவா ரடீ!
சொந்த சகோ தரர்கள் துன்பத்திற் சாதல் கண்டும்
சிந்தை இரங்கா ரடீ! – கிளியே!
செம்மை மறந்தா ரடீ!
பஞ்சத்தும் நோய்க ளிலும் பாரதர் புழுக்கள் போல்
துஞ்சத்தும் கண்ணாற் கண்டும் – கிளியே!
சோம்பிக் கிடப்பா ரடீ!
தாயைக் கொல்லும் பஞ்சத்தைத் தடுக்க முயற்சி யுறார்
வாயைத் திறந்து சும்மா – கிளியே!
வந்தே மாதர மென்பார்!
காற்றே, வா.
எமது உயிர் – நெருப்பை நீடித்துநின்று நல்லொளி தருமாறு
நன்றாக வீசு.
சக்தி குறைந்துபோய், அதனை அவித்துவிடாதே.
பேய்போல வீசி அதனை மடித்துவிடாதே.
மெதுவாக, நல்ல லயத்துடன், நெடுங்கா லம்
நின்று வீசிக் கொண்டிரு.
உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம்.
உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்.
உன்னை வழிபடுகின்றோம்.
மகரந்தத்தூளைச் சுமந்து, மனதை மயக்கும் வாசனையுடன் வா, இலைகள் மற்றும் நீரலைகள் மீது உராய்ந்து வா
உயிர் வளியைக் கொடு. ஆனால் பேய்போல் வீசி உயிராகிய நெருப்பை அணைத்து விடாேத
நீடித்து நின்று நன்றாக வீசு, உன் சக்தி குறைத்து எம் உயிரை அவித்து விடாதே!
உம்மை நாம் பாடுகிறோம், புகழ்கிறோம், வழிபடுகிறோம் என்றெல்லாம் பாரதி, காற்றே வா என்ற பாடலில் பாடுகிறார்
“உனக்குப் பாட்டுகள் பாடுகின்றோம்.
உனக்கு புகழ்ச்சிகள் கூறுகிறோம் உன்னை வழிபடுகின்றோம்” |
இயற்கையொலிகளை உணர்வுடன் வெளிப்படுத்தும் கவிதை
“திக்குகள் எட்டும் சிதறி – தக்கத் தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிட தீம்தரிகிடபக்க மலைகள் உடைந்து வெள்ளம் பாயுது பாயுது பாயுது – தாம்தரிகிடதக்கத் ததிங்கிட தித்தோம் – அண்டம் சாயுது சாயுது சாயுது – பேய்கொண் டுதக்கை யடிக்குது காற்று – தக்கத் தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட தாம்தரிகிட” |
“காணி நிலம் வேண்டும் – பராசக்தி
காணி நிலம் வேண்டும் – அங்குத்
தூணில் அழகியதாய் – நன்மாடங்கள்
துய்ய நிறத்தினதாய் – அந்தக்
காணி நிலத்திடையே – ஓர் மாளிகை
கட்டித்தரவேண்டும் – அங்குக்
கேணி அருகினிலே – தென்னைமரம்
கீற்றும் இளநீரும்
பத்துப் பன்னிரண்டு – தென்னைமரம்
பக்கத்திலே வேணும் – நல்ல
முத்துச் சுடர் போலே – நிலாவொளி
முன்பு வரவேணும் – அங்குக்
கத்துங் குயிலோசை – சற்றே வந்து
காதில் படவேணும் – என்றன்
சித்தம் மகிழ்ந்திடவே – நன்றாய் இளம்
தென்றல் வரவேணும்.”
காணி அளவு நிலம் வேண்டும் அங்கு ஒரு மாளிகை கட்டித்தர வேண்டும். அழகான தூண்களையும், தூய நிறமுடைய மாடங்களையும் அது கொண்டிருக்க வேண்டும். நல்ல நீரையுடைய கிணறும் அங்கு இருக்க வேண்டும். இளநீரும், கீற்றும் தரும் தென்னை மரங்கள் வேண்டும்.
இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர் பாரதியார். பாரதியின் பாடல்களில் நாட்டுப்பற்று நிரம்பவே இருக்கும். பெண் விடுதலையைப் பற்றிய பாடல்கள் உணர்வுடன் கூடியதாக இருக்கும். மொழிப்பற்று விஞ்சி நிற்கும். பாரதியைக் கொண்டாட ஆரம்பித்தால் நாளெல்லாம் கொண்டாடிக் கொண்டே இருக்கலாம்.பாரதியின் பாடல் வரிகள் தமிழ்க் கவிதையின் மந்திர சொற்கள் மந்திரத்தை நாளெல்லாம் உச்சரித்துக் கொண்டே இருந்தாலும் இன்பம் தருவதாகவே இருக்கும்.
” என் எழுத்தும் தெய்வம்;
என் எழுதுகோலும் தெய்வம் “ எனக் கூறியவர் பாரதி.
“பாட்டுக்கொரு புலவன் பாரதியடா _ அவன்
பாட்டைப் பண்ணோடு ஒருவன் பாடினானடா
கேட்டுக் கிறுகிறுத்துப் போனேனடா! _அந்தக்
கிறுக்கில் உளறுமொழி பொறுப்பாயடா “
என்றார் கவிமணி.
மீசை என்றாலும் முண்டாசு என்றாலும் அது மகாகவி சுப்பிரமணிய பாரதியாரை தவிரவேறு யாரையும் நம் நினைவில் கொண்டுவராது. இது உலகம் அறிந்த செய்தி.இவரை முண்டாசு கவி என்றும் கூட அழைத்தார்கள், எனக்குத் தெரிந்த வகையில் தமிழ் இலக்கிய உலகில் 12 நூற்றாண்டில் வாழ்ந்த கம்பனுக்கு பிறகு19 ஆம் நூற்றாண்டின் இறுதியிலும்,20 நூற்றாண்டின் முற்பகுதியிலும் வாழ்ந்த பாரதியே பெரும் புகழ் பெற்றவனாவான்..அதன் பிறகு கண்ணதாசன் வேண்டுமானால் இந்த புகழுக்கு ஈடாகலாம். கற்றவர்களில் சிறந்தவர்கள் மட்டுமே புரிந்து கொள்ளும் வகையில் எழுதப்பட்டு வந்த இலக்கிய நடைமுறையினை மாற்றி கல்லாதவரும் செவியால் கேட்டே புரிந்து கொள்ளும் வகையில் இலக்கியங்களை எழுதியவன் அதை ஏற்று கொள்ளாத பழமைவாதிகள் இவரை பைத்தியம் என்று வர்ணித்தார்கள்.ஆனால் காலம் அந்த பைத்தியக்காரனைத்தான் மகாகவியாக மாற்றியது.மற்றவர்களை கணக்கிலே கூட எடுத்து கொல்லவில்லை.Class 1 Bharathiyar Read more 2