Blog

6th BOOK BOX POINTS

Class 29 சொல்லகராதி

6th BOOK BOX POINTS

ஒலைச்சுவடிகள்‌ பாதுகாக்கப்படும்‌ இடங்கள்‌: 1. கீழ்த்திசை சுவடிகள் நூலகம், சென்னை 2. அரசு ஆவணக் காப்பகம், சென்னை 3. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை 4. சரஸ்வதி மகால் நூலகம், தஞ்சாவூா்

நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின் – தொல்காப்பியர்

– நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் ஐந்தும் கலந்தது இவ்வுலகம் என தொல்காப்பியர் தமது தொல்காப்பியம் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர்
நாழி முகவாது நால் நாழி – ஒளவையார்

– திரவப் பொருள்களை எவ்வளவு அழுத்தினாலும் அவற்றின் அளவைச் சுருக்க முடியாது என்ற அறிவியல் கருத்தினை ஔவையார் கூறியுள்ளார்.

உலக உயிர்களை ஓரறிவு முதல் ஆறறிவு வரை வகைப்படுத்தியவர்– தொல்காப்பியர்

கடல்நீர் முகந்த கமஞ்சூழ் எழிலி – கார் நாற்பது கடல் நீர் ஆவியாகி மேகமாகும். பின்னர் மேகம் குளிர்ந்து மழையாகப் பொழியும். பழந்தமிழ் இலக்கியங்களான முல்லைப்பாட்டு, பரிபாடல், திருக்குறள், கார்நாற்பது திருப்பாவை முதலிய நூல்களில் இந்த அறிவியல் செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.

நெடு வெள்ளூசி நெடு வசி பரந்த வடு – பதிற்றுப்பத்து

– வீரர் ஒருவரின் காயத்தை வெண்ணிற ஊசியால் தைத்த செய்தி பற்றி பதிற்றுப்பத்து குறிப்பிடப்பட்டுள்ளது.

தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட
பனையளவு காட்டும்  –  திருவள்ளுவமாலை

– தொலைவில் உள்ள பொருளின் உருவத்தை அருகில் தோன்றச் செய்ய முடியும் அறிவியல் கருத்தினை கபிலர் கூறியுள்ளார்.

கோட்சுறா எறிந்தெனச் சுருங்கிய
நரம்பின் முடிமுதிர் பரதவர் – நற்றிணை – சுறாமீன் தாக்கியதால் ஏற்பட்ட புண்ணை, நரம்பினால் தைத்த செய்தி பற்றி நற்றிணை கூறுகிறது.

அப்துல்கலாம் அவர்களின் வாழ்க்கைக்கு வலுசேர்த்த திருக்குறள் 

அறிவுஅற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும்
உள்ளழிக்கல் ஆகா அரண்

அப்துல்கலாம் அவர்களுக்கு லிலியன் வாட்சன் எழுதிய, விளக்குகள் பல தந்த ஒளி (Lights from many lamps) என்னும் நூலை மிகவும் பிடிக்கும்.

காமராசரின் சிறப்பு பெயர்கள் : படிக்காதமேதை, பெருந்தலைவர், கர்மவீரர், கருப்புக்காந்தி, ஏழைப்பங்காளர், தலைவர்களை உருவாக்குபவர்.

காமராசரை கல்விக் கண் திறந்தவர் என மனதாரப் பாராட்டியவர் – தந்தை பெரியார்.

காமராசர் கல்வி பணி – இலவசக் கட்டாயக் கல்வி, மத்திய உணவுத்திட்டம், சீருடைத் திட்டம்.

ஆசியக் கண்டத்தின் மிகப்பெரிய நூலகம் உள்ள இடம் – சீனா.

இந்திய நூலகவியலின் தந்தை – இரா. அரங்கநாதன். சிறந்த நூலகர்களுக்காக வழங்கப்படும் விருது – டாக்டர் ச. இரா. அரங்கநாதன் விருது.

நூலகத்தில் படித்து உயர்நிலை அடைந்த தலைவர்கள் – அறிஞர் அண்ணா, அண்ணல் அம்பேத்கர், ஜவஹர்லால் நேரு, காரல் மார்க்ஸ்.

பழையன கழிதலும் புதியன புகுதலும்” (நன்னூல் நூற்பா-462).

தமிழ்நாட்டின்‌ தலைசிறந்த துறைமுகமாகப்பூம்புகார்‌ விளங்கியது. துறைமுக நகரங்கள்‌ பட்டினம் என்றும்‌ பாக்கம்‌ என்றும்‌ குறிக்கப்பட்டன.

“பொன்னொடு வந்து கறியொடு பெயரும்”  – அகநானூறு – 149

பொன்னுடன் வந்து மிளகுடன் செல்லும் வளம்

“பாலொடு வந்து கூழொடு பெயரும்” –குறுந்தொகை-221
ஆடுகளை மேய்க்கும் இடையர்கள் மாலையில் பாலைக் கறந்து கொண்டுவந்து வீடுகளில் கொடுத்துவிட்டு, உணவைப் பெற்றுக்கொண்டு சென்று இரவு நேரத்தில் ஆட்டு மந்தையுடன் தங்குவது வழக்கம்.
“தம் நாட்டு விளைந்த வெண்ணெல் தந்து
பிற நாட்டு உப்பின் கொள்ளை சாற்றி
நெடு நெறி ஒழுகை நிலவு மணல் நீந்தி
அவண் உறை முனிந்த ஒக்கலொடு புலம் பெயர்ந்து
உமணர் போகலும்”  – நற்றிணை -183
தம் நாட்டில் விளைந்த நெல்லைத் தந்து, பிற நாட்டில் விளைந்த உப்பைப் பண்டமாற்றுச் செய்துகொண்டனர்.
அக்கால வணிகர்கள்‌ நேர்மையாகத்‌ தொழில்‌ செய்தனர்‌ என்பதைத்‌ தமிழ்‌ இலக்கியங்கள்‌ எடுத்துக்காட்டுகின்றன.
“வாணிகம்‌ செய்வார்க்கு வாணிகம்‌ பேணிப்‌
பிறவும்‌ தமபோல்‌ செயின்‌” – திருக்குறள்‌ – 120
என்னும்‌ திருக்குறள்‌ வணிகரின்‌ நேர்மையைப்‌ பற்றிக்‌ கூறுகிறது.
“கொள்வதும்‌ மிகை கொளாது
கொடுப்பதும்‌ குறைபடாது”பட்டினப்பாலை
வணிகர்கள்‌ பொருளை வாங்கும்பொழுது உரிய அளவைவிட அதிகமாக வாங்க மாட்டார்கள்‌. பிறருக்குக்‌ கொடுக்கும்‌ பொழுது அளவைக்‌ குறைத்துக்‌ கொடுக்கமாட்டார்கள்‌.
“நடுவு நின்ற நன்னெஞ்சினோர்” என்று பட்டினப்பாலை பாராட்டுகிறது.
சமன்செய்து சீர்தூக்கும்‌ கோல்போல்‌ அமைந்தொருபால்‌
கோடாமை சான்றோர்க்கு அணி  –  திருக்குறள்‌

 

தமக்கென முயலா நோன்றாள்‌ – பிறர்க்ககன

மூயலுநர்‌ உண்மையானே  (புறநானூற்று-182)

உலகம் வாழ்கிறது எதனால் என்று தெரிந்துகொள்வோம். தனக்கென முயலாமல் பிறருக்கு உதவுதற்காக முயலும் மிகப்பெருந் தாளாண்மை உடையவர் உலகில் வாழ்வதால்தான்

 வள்ளலார்‌

“வாடிய பயிரைக்‌ கண்ட போதெல்லாம்‌ வாடி னேன்‌”- வள்ளலார்‌.

வடலூரில்‌ சத்திய தருமச்சாலையைத்‌ தொடங்கி எல்லாருக்கும்‌ உணவளித்தார்‌. 

அன்னை தெரசா

வாழ்க்கை என்பது நீ சாகும்‌ வரை அல்ல

மற்றவர்‌ மனதில்‌ நீ வாழும்‌ வரை – அன்னை தெரசா

மக்களுக்குச்‌ செய்யும்‌ பணியே இறைவனுக்குச்‌ செய்யும்‌ பணி என்று வாழ்ந்தார்‌. அதனால்‌ அமைதிக்கான நோபல்‌ பரிசு அவரைத்‌ தேடி வந்தது.

 கைலாஸ்‌ சத்யார்த்தி

குழந்தைகளைப்‌ பாதுகாப்போம்‌ என்னும்‌ இயக்கத்தைத்‌ தொடங்கினார்‌

 குழந்தைகளைத்‌ தொழிலாளர்களாக மாற்றுவது மனிதத்‌ தன்மைக்கு எதிரான குற்றம்‌. உலகத்தைக்‌ குழந்தைகளின்‌ கண்‌ கொண்டு பாருங்கள்‌. உலகம்‌ அழகானது. – கைலாஷ்‌ சத்யார்த்தி.

அன்னை தெரசாவிற்கு அடுத்து அமைதிக்கான நோபல்‌ பறிசு பெற்ற இந்தியர்‌ கைலாஷ்‌ சத்யார்த்தி.

1. வள்ளலார் பசிப்பிணி போக்கியவர்
2. கைலாஷ் சத்யார்த்தி குழந்தைகள் உரிமைக்குப் பாடுபட்டவர்
3. அன்னை தெராசா நோயாளிகளிடம் அன்பு காட்டியவர்

தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு – அங்கே
துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி
அம்மா என்குது வெள்ளைப்பசு – உடன்
அண்டையில் ஓடுது கன்றுக்குட்டி
நாவால் நக்குது வெள்ளைப்பசு – பாலை
நன்றாய்க் குடிக்குது கன்றுக்குட்டி          – கவிமணி தேசிக விநாயகனார் (இயல்பு நவிற்சி அணி)

திருப்பதி மலைக்குத் தெற்கில் வாழும் மக்கள் பேசும் மொழி ‘தமிழ்’. இதனை
“வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத்
தமிழ் கூறும் நல்லுலகம்”                       என நன்னூல் இயற்றிய பவணந்தி முனிவர் குறிப்பிட்டுக் கூறியுள்ளார்.

ஆங்கிலேயர் ஆட்சியில் தென்னாட்டின் பெரும்பகுதி சென்னை மாகாணம் என்று அழைக்கப்பட்டது. நாடு சுதந்திரம் பெற்றபின் தமிழ்மொழி பேசப்படும் மாநிலம் தனியாகப் பிரிக்கப் பட்டது. அதற்கு 1967 ஆம் ஆண்டில் முதலமைச்சராக அமர்ந்த அறிஞர் அண்ணா அவர்களால் ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டப்பட்டது.

 

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories