Blog

தருமு சிவராமு

22
Old Syllabus

தருமு சிவராமு

தருமு சிவராமு
பிறப்பு: 1939-1997
இயற்பெயர்‌: சிவராமலிங்கம்
புனைபெயர்‌: பிரமிள்‌, பானுசந்திரன்‌, அரரூசிவராம்‌
அடிக்கடி தம் பெயரை மாற்றிப் புதுப்பித்துக் கொண்டேயிருந்தவர்.
மற்ற பெயர்கள்
லக்ஷ்மிஜோதி, இலக்குமி, இளங்கோ, கெளரி, பூம்பொழில் வேலவன், பூம்பொற்கொடி இளங்கோ, குகேந்திர அமுதன், டி.சி.ராமலிங்கம், பிருமிள், பிரமின், பிரமிள்பானு, ஜீவராம், அஜீத்ராம் பிரமிள், பிரமிள் பானு சந்திரன், பானு அரூப் சிவராம், விக்ரம் குப்தன் பிரமிள், ராம் தியவ் விபூதி பிரமிள், தர்மு சிவராம்
ஊர்‌: திரிகோணமலை (இலங்கை கிழக்கு மாகாணம்‌)
குறிப்பு
  • தமிழகத்து எழுத்தாளர். தமிழின் முதன்மையான கவிஞர், விமர்சகர், சிறுகதையாசிரியர், ஓவியர். புதுக்கவிதை முன்னோடிகளுள் முக்கியமான ஒருவராக இவர் கருதப்படுகிறார்.
  • இவர் பானுசந்திரன், அரூப் சீவராம், பிரமிள் போன்ற பல புனைபெயர்களில் எழுதினார்.
  • ஆன்மிகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தவர்.
  • படிம கவிஞர்‌, ஆன்மீகக்‌ கவிஞர்‌
  • படிமச்‌ சிற்பி: யுனிக்‌ இமேஜிஸ்ட்‌ என்று சி.சு.செல்லப்பா இவரை குறிப்பிடுவார்‌.
  • “கைப்பிடி அளவு கடல்‌” என்னும்‌ புகழ்பெற்ற கவிதைத்‌ தொகுப்பைத்‌ தந்துள்ளார்‌.
  • புதுக்கவிதையில்‌ அறிவியலைப்‌ புகுத்தியவர்‌.
  • “கவிதைக் கோட்பாடுகளும் பாரதி கலையும்” என்ற தலைப்பில் பாரதியார் பற்றி மதிப்பீடு செய்து மிகச் சிறந்த கட்டுரை ஒன்றை எழுத்துவில் எழுதினார்.
விருதுகள்‌
  • நியூயார்க்‌ விளக்கு அமைப்பு இவருக்கு “புதுமைப்பித்தன்‌” விருது வழங்கியது.
  • கும்பகோணம்‌ சிலிக்குயில்‌ “புதுமைப்பித்தன்‌ வீறு” என்ற விருது வழங்கியது.
நூல்கள்
  • ஆயி பிரசன்னம்‌, லங்காபுரிராஜா – குறுநாவல்‌
கவிதைத்‌ தொகுதிகள்‌
  • கண்ணாடியுள்ளிருந்து
  • கைப்பிடியளவு கடல்‌
  • பிரமிள்‌ கவிதைகள்‌
  • மேல்‌ நோக்கிய பயணம்‌
சிறுகதைகள்‌
  • காடன்‌ கண்டது
  • நீலம்‌
  • பாறை
  • அசரீரி
  • கோடாரி
  • சந்திப்பு
  • சாமுண்டி
  • கிசுகிசு
  • கருடனூர்‌ ரிப்போர்ட்‌
  • அங்குலிமாலா
நாடகம்‌
  • நட்சத்திரவாசி

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories