Blog

ஈரோடு தமிழன்பன்

4567
Old Syllabus

ஈரோடு தமிழன்பன்

ஈரோடு தமிழன்பன்
குறிப்பு
இயற்பெயர்: ஜெகதீசன்
பெற்றோர்:  நடராஜன், வள்ளியம்மாள்
ஊர்: கோவை மாவட்டம் சென்னிமலை
இவர் பாரதிதாசன் பரம்பரையினர்
மூத்த மகனுக்குப் பாப்லோ நெருதா என்றும் இளைய மகனுக்குப் பாரதிதாசன் என்றும் பெயர் சூட்டினார்.
தமிழாேவியம்
 காலம் பிறக்கும் முன் பிறந்தது தமிழே!
காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே!
ஈரோடு தமிழன்பன் எழுதிய “தமிழோவியம்” என்னும் நூலில் இடம்பெற்றுள்ள கவிதை இது.
இக்கவிதை குறித்துக் கவிஞர் முன்னுரையில் “ஒரு பூவின் மலர்ச்சியையும் ஒரு குழந்தையின் புன்னகையையும் புரிந்து கொளள் அகராதிகள் தேவைப்படுவதில பாடலும் அப்படித்தான்! என்று குறிப்பிட்டுள்ளார்.
ஈரோடு தமிழன்பன் சிறுகதை, புதுக்கவிதை முதலிய படைப்புகள் வெளியிட்டுள்ளார்
ஹைக்கூ, சென்ரியு, லிமரைக்கூ புது வடிவங்களில் கவிதை நூல்களில் தந்துள்ளார்.
இவரது “வணக்கம் வள்ளுவ” கவிதை நூலுக்கு 2004-ம் ஆண்டுக்கான சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது.
“தமிழன்பன் கவிதைகள்” தமிழக அரசின் பரிசு பெற்ற நூல்.
இவரது கவிதைகள் இந்தி, உருது, மலையாளம், ஆங்கில் உள்ளிட்ட மொழியில் மொழி பெயர்க்கப்ட்டுள்ளன.
சிறப்புப் பெயர்கள்
  • மரபில் பூத்து புதுமையில் கனிந்தவர்
  • ஆயிரம் அரங்கம் கண்ட கவியரங்கக் கவிஞர்
  • ஈரோடு தமிழன்பன் புனைபெயர்
  • விடிவெள்ளி
  • தமிழன்பன்
  • மலையமான்
ஈரோடு தமிழன்பன் புதினம்
  • நெஞ்சின் நிழல்
ஈரோடு தமிழன்பன் சிறுகதைகள்
  • கவி பாடின காவலர்
  • கரும்புச்சுவை கதைகள்
  • ஒரு மழை நாளில்
ஈரோடு தமிழன்பன் பாடல்கள்
  • குறை ராட்டினம் (குழந்தைப் பாடல்கள்)
  • கொடி காத்த குமரன் (சிறார் வில்லுப்பாட்டு)
  • வள்ளிச்சந்தம் (சிறார் பாடல்கள்)
ஈரோடு தமிழன்பன் கட்டுரைகள்
  • பாரதிதாசனோடு பத்து ஆண்டுகள்
  • கலையா! கைவினையா!
  • பாப்லோ நெருதா பார்வையில் இந்தியா
  • தாயின் மணிக்கொடி
  • சிகரங்கள் மேல் விரியும் சிறகுகள்
  • இலக்கிய பயன்
  • கவிதை சிந்தனைகள்
  • புரட்சிக் கவிஞர் கவிதைகளில் தமிழ், தமிழன், தமிழ்நாடு
  • வீரத்துறவி விவேகானந்தரும் மனோன்மணியம் சுந்தரனாரும் ஒரு சந்திப்பில்
  • சிலிர்ப்புகள்
  • தோணி வருகிறது (முதல் கவிதை)
  • விடியல் விழுதுகள்
  • தீவுகள் கரையேறுகின்றன
  • நிலா வரும் நேரம்
  • கண்ணுக்கு வெளியே சில கனாக்கள்
  • என் வீட்டிற்கு எதிரே ஒர் எருக்கஞ் செடி
  • நடை மறந்த நதியும் திசை மாறிய ஓடையும்
  • ஓலைச்சுவடியும் குறுந்தகடும்
  • கருவறையில் இருந்து ஒரு குரல்
  • உன் வீட்டிற்கு நான் வந்திருந்தேன். வால்ட் விட்மன் (தமிழ்ப் புதுக்கவிதையிலான பயண நூல்)
  • நாமிருக்கும் நாடு
  • ஊர் சுற்றி வந்த ஓசை
  • கிழக்குச் சாளரம்
  • பனி பெய்யும் பகல்
  • இன்னும் சில வினாக்கள்
  • திசை கடக்கும் சிறகுகள்
  • மாற்று மனிதம்
  • சொல்ல வந்தது
  • புத்தகம் என்பது
  • தத்துபித்துவம்
  • அணைக்கவா என்ற அமேரிக்கா
  • கஜல் பிறைகள் (முதல் தமிழ்க் கஜல் கவிதைத் தொகுதி)
  • ஒரு கூடைப் பழமொன்ரியு (பழமொழி, சென்ரியு இணைந்த முதல் தமிழ்க் கவிதைத் தொகுதி)
  • அன்னை மடியே உன்னை மறவேன்
  • பூக்களின் விடைகள் புலரி கைகளில்
  • சிறுசிறு சூரியர்கள்
  • இசை அமைக்கும் இமை அசைப்புகள்
  • ஒரு கவளம் சோறும் ஒரு கவிதையும்
  • நட்பூ
  • இன்னிசை அளபெடைச்சென்னிமலை
  • ஞாபகச் சாளரம்
  • இன்னும் இசை உண்டு இந்த வீணையில்
  • முகமொழி 100
  • ஒளியின் தாயகம் ஒப்பிலா நாயகம்
  • காலத்தால் மறையாத கருப்புச் சூரியன்
  • மூன்று பெயர்களும் என் முகவரிப் புத்தகமும்
  • tamil thahu
  • சூரியப் பிறைகள் (ஹைக்கூ கவிதைகள்)
  • இடுகுறிப் பெயரில்லை இஸ்லாம்
  • ஊமை வெயில்
  • புதுநெறி காட்டிய புரட்சிக் கவிஞர்
  • திரும்பி வந்த தேர்வலம்
  • அந்த நந்தனை எரித்த நெருப்பின் மிச்சம்
  • காலத்திற்கு ஒருநாள் முந்தி
  • சென்னிமலை கிளியோபாத்ராக்கள் (முதல் தமிழ் லிமரைக்குக் கவிதைத் தொகுதி)
  • வார்த்தைகள் கேட்ட வரம்
  • ஒருவண்டி சென்ரியு (முதல் தமிழ் சென்ரியுக் கவிதைத் தொகுதி)
  • பரணி பாடலாம்
  • தமிழோவியம்
  • என் அருமை ஈழமே!
  • கதை முடியவில்லை
  • கனவில் சில பக்கங்கள்
  • சொல்ல வந்தது
  • இவர்களோடும் இவற்றோடும்
  • கனாக்காணும் வினாக்கள் (வினாக்களாலான முதல் தமிழ்க் கவிதைத் தொகுதி)
  • மின்னல் உறங்கும் போது
  • கதவை தட்டிய பழைய காதலி
  • விடியல் விழுதுகள்
  • கவின் குறு நூறு
  • வணக்கம் வள்ளுவ (சாகித்ய அகாதமி விருது)
  • தமிழன்பன் கவிதைகள் (தமிழக அரசு பரிசு)
  • பொதுவுடைமைப் பூபாளம்
  • மின்மினிக்காடு
  • சிகரங்கள் மேல் விரியும் சிறகுகள்
சிறப்புகள்
  • ஆயிரம் அரங்கம் கண்ட கவியரங்கக் கவிஞர்
  • சென்ரியு கவிதைகளை தமிழில் முதல் முதலாக அறிமுகப்படுத்தியவர்  – ஈரோடு தமிழன்பன் ஆவார்.
  • தமிழில் வெளிவந்த முதல் சென்ரியு கவிதை நூல் – ஈரோடு தமிழன்பன் அவர்களின் “ஒரு வண்டி சென்ரியு” (2001) என்னும் கவிதை நூல் ஆகும்.
  • தமிழில் முதன் முதலில் லிமெரைக்கூ கவிதையை எழுதியவர் – ஈரோடு தமிழன்பன்.
  • தமிழின் முதல் லிமரைக்கூ கவிதை நூல் – ஈரோடு தமிழன்பனின் ”சென்னிமலை கிளியோபாத்ராக்கள்” நூலாகும்.
  • தமிழில் அதிக அளவில் கவிதைத் தொகுதிகளை – 60க்கும் மேற்பட்ட தொகுதிகளையும்- 6 பெருந்தொகுதிகளையும் வெளியிட்ட முதல் கவிஞர் இவரே.
  • ‘உன் வீட்டிற்கு நான் வந்திருந்தேன். வால்ட் விட்மன்! ‘(1998) எனும் கவிதைத் தொகுதிமூலம் புதுக்கவிதையில் முதல் பயண இலக்கியம் படைத்த முதல் கவிஞர் அவர்.
  • 2000இல் எழுதி 2004ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதெமி விருது பெற்ற வணக்கம், வள்ளுவ! என்னும் கவிதைத் தொகுதிவழிப் புதுக்கவிதையிலான முதல் திறனாய்வு நூலை எழுதிய முதல் கவிஞர் அவர்.
  • ஒரு வண்டி சென்ரியு (2001) எனும் கவிதைத் தொகுதிவழி ஜப்பானியக் கவிதை வடிவங்களுள் ஒன்றான சென்ரியுவைத் தமிழில் அறிமுகப்படுத்திய முதல் கவிஞர் அவர்.
  • ஜப்பானியக் கவிதை வடிவங்களுள் ஒன்றான ஹைக்கூவைத் தமிழில் பிரபலப்படுத்திய முதல் கவிஞர் அவர்.
  • லிமெரிக், ஹைகூ ஆகிய கவிதை வடிவங்களை இணைத்து டெட் பாக்கர் அறிமுகப்படுத்திய கவிதை வடிவமான லிமெரைக்கூவைச் சென்னிமலைக் கிளியோபாத்ராக்கள் (2002) என்னும் கவிதைத் தொகுதி வாயிலாகத் தமிழில் படைத்த முதல் கவிஞர் அவர்.
  • 2009இல் நிகழ்ந்த ஈழப்போரில் கொத்துக்கொத்தாய்த் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டபோது அந்த இனப் படுகொலையைக் கண்டித்துத் தமிழகத்தில் பலரும் எழுத முன்வராத நிலையில் நெஞ்சுரத்துடன் என் அருமை ஈழமே! (2009) என்னும் கவிதைத் தொகுதியைத் துணிச்சலாய் எழுதி வெளியிட்ட முதல் கவிஞர் அவர்.
  • 2012இல் வெளிவந்த கஜல் பிறைகள் வாயிலாகப் பாடதக்க கஜல் கவிதைத் தொகுதியைப் படைத்த முதல் கவிஞர் அவர்.
  • சென்னைப் பல்கலைக்கழகத்தால் இரண்டு முறை தேசியக் கருத்தரங்கு நடத்தப்படப் பொருண்மைக்களமாக விளங்கிய கவிதைகளைப் படைத்த முதல் கவிஞர் அவர்.
  • ஒரு கூடைப் பழமொன்ரியூ (2014) வழியாகப் பழமொழியையும் சென்ரியூவையும் இணைத்துப் பழமொன்ரியு எனும் கவிதை வடிவத்தை முதன்முதல் உருவாக்கி அறிமுகப் படுத்திய முதல் கவிஞர் அவர்.
  • பாப்லோ நெருதா எழுதிய Book of Questions என்னும் வினாக்களாலான கவிதைத் தொகுதியை முன்மாதிரியாகக் கொண்டு கனாக் காணும் வினாக்கள் (2004), இன்னும் சில வினாக்கள் (2015) எனும் வினாக்களாலான கவிதைத் தொகுதிகள் இரண்டு இயற்றிய முதல் கவிஞர் அவர். பிறப்பால் ஆங்கிலேயராகவும், வாழிடத்தால் சீனராகவும் வாழும் முறையால் தமிழராகவும் வாழ்ந்துவருபவரும் – இங்கிலாந்தில் பிறந்து ஹாங்காங்கில் வாழ்ந்துவருபவருமான பேராசிரியர் கிரிகோரி ஜேம்ஸ் இவ்விரு நூல்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து Poems of Questions என்னும் பெயரில் ஒரே நூலாக வெளியிட்டுள்ளார். இப்படி ஆங்கிலத்தைத் தாய்மொழியாகக் கொண்ட ஒருவரால் இக்காலக் கவிதை ஆங்கிலத்தில் முதன்முதலில் ஒரு மொழிபெயர்ப்புக் காண மூலநூல் தந்த முதல் கவிஞர் அவர். இதே நூலுக்குப் பேராசிரியர் கிரிகோரி ஜேம்ஸ் அவர்களும் லொரைன் போக் (Loraine Bock) என்னும் ஸ்பானியப் பெண்மணியும் இணைந்து Poemas de Preguntas என்னும் மகுடம் தாங்கிய ஸ்பானிய மொழிபெயர்ப்பு வெளிவந்துள்ளது. இக்காலத் தமிழ்க் கவிதை ஸ்பானிய மொழியில் முதன்முதலில் ஒரு மொழிபெயர்ப்புக் காண மூலநூல் தந்த முதல் கவிஞர் அவர்.
  • 2017 நவம்பர் 8இல் அமெரிக்காவில் டல்லாஸ் நகரிலுள்ள மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் கவிஞர் தி. அமிர்தகணேசன் முயற்சியால் ஈரோடு தமிழன்பனின் 1000 கவிதைகளை வாசிக்கும் கவிதைத் திருவிழா நடைபெற்றது. அமெரிக்காவில் நடைபெற்ற முதல் கவிதைத் திருவிழா மட்டுமன்றி இப்படியொரு திருவிழா எடுக்கப்பட்ட முதல் கவிஞரும் ஈரோடு தமிழன்பனே ஆவார்.
  • 2019 செப்டம்பர் 28இல் வட அமெரிக்க வானொலியில் தமிழன்பன் பிறந்தநாள் வானலையில் அமெரிக்கத் தமிழர்கள் பலர் தமிழன்பன் கவிதை வாசிப்பு நிகழ்த்திக் கொண்டாடினர். இப்படியொரு பிறந்தநாள் திருவிழா எடுக்கப்பட்ட முதல் கவிஞரும் ஈரோடு தமிழன்பனே ஆவார்.

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories