Blog

கடற்பயணங்கள்

கப்பல்கள்
Old Syllabus

கடற்பயணங்கள்

தமிழரின் கப்பற்கலை
பயணம் வகைகள்
  • தரைவழிப் பயணம்
  • நீர்வழிப் பயணம்
  • வான்வழிப் பயணம் என மூன்று வகைப்படும்.
நூல்களிலேயே மிகவும்‌ பழமையானது தொல்காப்பியம்‌. அந்நூல்‌ முந்நீர்‌ வழக்கம்‌ என்று கடற்பயணத்தைக்‌ குறிப்பிடுகிறது. எனவே, தொல்காப்பியர்‌ காலத்திற்கு முன்பே தமிழர்கள்‌ கடல்‌ பயணம்‌ செய்துள்ளனர்‌ என்பதை அறியலாம்‌.

கடலோடா கால்வல் நெடுந்தேர் கடலோடும்
நாவாயும் ஓடா நிலத்து. (குறள்‌ 496)

வலிய சக்கரங்களையுடைய பெரியத் தேர்கள் கடலில் ஓடமுடியாது, கடலில் ஓடுகின்ற கப்பல்களும் நிலத்தில் ஓடமுடியாது. என்னும்‌ திருவள்ளுவர்‌ காலத்திலேயே பெரிய கப்பல்கள்‌ இருந்தன என்பதற்குச்‌ சான்றாகும்‌.
பூம்புகார்‌ துறைமுகத்திலிருந்து கப்பல்கள்‌ மூலம்‌ பொருள்கள்‌ ஏற்றுமதியும்‌ இறக்குமதியும்‌ செய்யப்பட்டன என்பதைப்‌ பட்டினப்பாலை விரிவாக விளக்குகிறது.
உலகு கிளர்ந்தன்ன உருகெழு வங்கம். (பாடல்‌ 255) என்று பெறிய கப்பலை அகநானூறு குறிப்பிடுகிறது.

“அருங்கலம்‌ தரீஇயர்‌ நீர்மிசை நிவக்கும்‌
பெருங்கலி வங்கம்”‌. –  (பாடல்‌ 52) பதிற்றுப்பத்து.

சேந்தன் திவாகரம் என்னும் நிகண்டு நூலில் பலவகையான கப்பல்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. இதன் மூலம் தமிழர்கள் கப்பல் கட்டும் தொழிலில் பரந்துபட்ட அறிவு பெற்றிருந்தார்கள் என்பதை உணரலாம்.
எடை குறைந்த பெரிய மரங்களின் உட்பகுதியைக் குடைந்து எடுத்து விட்டுத் தோணியாகப் பயன்படுத்தினான். உட்பகுதி தோண்டப்பட்டவை என்பதால் அவை தோணிகள் எனப்பட்டன.
சிறிய நீர்நிலைகளைக் கடக்கத் தமிழர்கள் பயன்படுத்திய ஊர்திகளின் பெயர்கள்
  • தோணி
  • ஓடம்
  • படகு
  • புணை
  • மிதவை
  • தெப்பம்
கடல்களைக் கடக்கத் தமிழர்கள் பயன்படுத்திய ஊர்திகளின் பெயர்கள்
  • கலம்
  • வங்கம்
  • நாவாய்
சோழர்களில்‌ இராசராச சோழனும்‌, இராசேந்திர சோழனும்‌ பெரிய கப்பற்படையைக்‌ கொண்டு பல நாடுகளை வென்றனர்‌ என்பதை வரலாறு பகர்கிறது.
கப்பல்‌ கட்டும்‌ கலைஞர்கள்‌ கம்மியர்‌ என்று அழைக்கப்பட்டனர்‌.

கலஞ்செய் கம்மியர் வருகெனக் கூஉய்  – (காதை 25, அடி 124) என்னும்‌ மணிமேகலை அடியால்‌ அறியலாம்‌.

கண்ணடை என்பது இழைத்த மரத்தில்‌ காணப்படும்‌ உருவங்கள்‌ ஆகும்‌.
தச்சுமுழம்‌ என்னும்‌ நீட்டலளவையால்‌ கணக்கிட்டனர்‌.
கரிமுக அம்பி
  • பெரிய படகுகளில் முன்பக்கத்தை யானை தலையை போன்று வடிவமைப்பதாகும்
பரிமுக அம்பி
  • பெரிய படகுகளில் முன்பக்கத்தை குதிரை தலையை போன்று வடிவமைப்பதாகும்

இத்தாலி நாட்டைச்‌ சேர்ந்த மார்க்கோபோலோ கடற்பயணி.
இரும்பு ஆணிகள்‌ துருப்பிடித்துவிடும்‌ என்பதால்‌ மரத்தினாலான ஆணிகளையே பயன்படுத்தினர்‌. இந்த ஆணிகளைத்‌ தொகுதி என்பர்‌.
“ஆங்கிலேயர்‌ கட்டிய கப்பல்களைப்‌ பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பழுது பார்க்க வேண்டும்‌. ஆனால்‌ தமிழர்‌ கட்டிய கப்பல்களை ஐம்பது ஆண்டுகள்‌ ஆனாலும்‌ பழுது பார்க்க வேண்டிய அவசியமில்லை” என்று வாக்கர்‌ என்னும்‌ ஆங்கிலேயர்‌ கூறியுள்ளார்‌.

“நளியிரு முந்நீர்‌ நாவாய்‌ ஒட்டி
வளி தொழில்‌ ஆண்ட உரவோன்‌ மருக “  – (பாடல்‌ 66) என்னும்‌ புறப்பாடல்‌ அடிகளில்‌ வெண்ணிக்குயத்தியார்‌ குறிப்பிடுகிறார்‌.

கடலில்‌ செல்லும்‌ கப்பல்களுக்குத்‌ துறைமுகம்‌ இருக்கும்‌ இடத்தைக்‌ காட்டுவதற்காக அமைக்கப்படுவது கலங்கரை விளக்கம்‌ ஆகும்‌.
கலங்கரை விளக்கம் பெயர் காரணம் 
கடலில் செல்லும் கப்பல்களுக்குத் துறைமுகம் இருக்கும் இடத்தைக் காட்டுவதற்காக அமைக்கப்படுவது கலங்கரை விளக்கம் ஆகும்.
உயரமான கோபுரத்தின் உச்சியில் ஒளிவீசும் விளக்கினை கொண்டாதாக இஃது அமைக்கப்படும்
கலம் என்றால் கப்பல், கரைதல் என்றால் அழைத்தல் அழைக்கும் விளக்கு என்னும் பொருளில் இது கலங்கரை விளக்கம் எனப்படும்.
தமிழர்கள் பயன்படுத்திய பாய்மரங்கள்
  • பெரிய பாய்மரம்
  • திருக்கைத்திப்பாய்மரம்
  • காணப்பாய்மரம்
  • கோசுப்பாய்மரம்
கப்பல் செலுத்துபவர்களுக்கு வழங்கும் வேறு பெயர்கள்
  • மாலுமி
  • மீகான்
  • நீகான்
  • கப்பலோட்டி
கப்பல் உறுப்புகள் சிலவற்றின் பெயர்கள்‌
  • ஏரா
  • பருமல்
  • வங்கு
  • கூம்பு
  • பாய்மரம்
  • சுக்கான்
கப்பலைச்‌ செலுத்துவதற்கும்‌ உரிய திசையில்‌ திருப்புவதற்கும்‌ பயன்படும்‌ முதன்மையான கருவி சுக்கான்‌ எனப்படும்.‌‌

“கலம் தந்த பொற்பரிசம்
கழித் தோணியான், கரை சேர்க்குந்து”(பாடல்‌ 343) என்று புறநானூறு கூறுகிறது.

பெரிய கப்பல்கள்‌ துறைமுகத்தில்‌ கொண்டு கரைக்கு அருகில்‌ வர இயலாது. எனவே கப்பலில்‌ வரும்‌ பொருள்களைத்‌ தோணிகள்‌ மூலம்‌ கரைக்குக்‌ கொண்டு வந்தனர்‌.
பழந்தமிழர்கள்‌ ஆமைகளை வழிகாட்டிகளாகப்‌ பயன்படுத்திக்‌ கடல் ‌பயணம்‌ செய்து இருக்கலாம்‌ என்னும்‌ கருத்தும்‌ உள்ளது.
கடல் ஆமைகள் இனப்பெருக்கத்துக்காகத் தகுந்த இடம் தேடி நீண்ட தூரம் பயணம் செய்கின்றன.
அவை செல்லும் வழியைச் செயற்கைக்கோள்கள் மூலம் தற்போது ஆராய்ந்துள்ளனர். அவ்வழியில் உள்ள நாடுகளுடன் தமிழர்கள் வாணிகத் தொடர்பு கொண்டு இருந்ததை அறிய முடிகிறது.
எனவே பழந்தமிழர்கள் ஆமைகளை வழிகாட்டிகளாகப் பயன்படுத்திக் கடல் பயணம் செய்து இருக்கலாம் என்னும் கருத்தும் உள்ளது.
பண்டைத் தமிழரின் கப்பல் செலுத்தும் முறை
  • காற்றின் திசையை அறிந்து கப்பல்களைச் செலுத்தும் முறையைத் தமிழர்கள் நன்கு அறிந்திருந்தனர்.
  • கடலில் காற்று வீசும் திசை, கடல் நீரோட்டங்களின் திசை ஆகியவற்றைத் தமிழர்கள் நன்கு அறிந்து அவற்றுக்கேற்ப உரிய காலத்தில் சரியான திசையில் கப்பலைச் செலுத்தினர் .
  • திசைகாட்டும் கருவி மற்றும் விண்மீன்களின் நிலையை வைத்தும் திசையை அறிந்து கப்பலைச் செலுத்தினர்.
  • கப்பல் ஓட்டும் மாலுமிகள் சிறந்த வானியல் அறிவையும் பெற்றிருந்தனர்.
  • கோள்களின் நிலையை வைத்துப் புயல், மழை போன்றவை தோன்றும் காலங்களையும் கடல் நீர் பொங்கும் காலத்தையும் அறிந்து தகுந்த காலத்தில் கப்பல்களைச் செலுத்தினர்.
கப்பல் பாதுகாப்பானதாக அமையத் தமிழர்கள் கையாண்ட வழிமுறைகள்
  • கப்பல்கள் தண்ணீரிலேயே இருப்பவை என்பதால் தண்ணீரால் பாதிப்பு ஏற்படாத மரங்களையே பயன்படுத்தினர்.
  • நீர் மட்ட வைப்பிற்கு வேம்ப், இலுப்பை, புன்னை, நாவல் மரங்களையும் பக்கங்களுக்கு தேக்கு, வெண் தேக்கு மரங்களையும் பயன்படுத்தினர்.
  • சுழி உடைய மரங்களைத் தவிர்த்தனர்.
  • மரங்களையும், பலகைகளையும் ஒன்றோடு ஒன்று இணைக்க தேங்காய் நார் (அ) பஞ்சு ஆகியவற்றில் ஒன்றை வைத்து நன்றாக இறுக்கி ஆணிகளை அறைந்தனர்.
  • சுண்ணாம்பையும் சணலையும் கலந்து அரைத்து அதில் எண்ணெய் கலந்து கப்பலின் அடிப்பகுதியில் பூசினர். இதனால் கப்பல் பழுதடையாமல் நீண்ட காலம் உழைத்தன.
  • இரும்பு துருப்பிடிக்கும் என்பதால் மர ஆணிகளைப் பயன்படுத்தினர்.

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories