Blog

கலைகள்

45
Old Syllabus

கலைகள்

கலைகள்

தமிழ்நாட்டின் மாநில மரம் பனை

மூங்கிலில் மூன்று வகை உள்ளது

  • கூல் மூங்கில்
  • மலை மூங்கில்
  • கூட்டு மூங்கில்

1. பானை ஓடுகள் கிடைத்துள்ள இடம் சிந்துசமவெளி

2. முதுமக்கள் தாழிகள் கிடைத்துள்ள தமிழக இடம் ஆதிச்சநல்லூர்

3. மிகவும் பழமையான கைவினைக் கலைகளில் ஒன்று மண்பாண்டக் கலை

4. பானை செய்யும் சக்கரத்திற்கு திருவை என்று பெயர்

5. பானை செய்தலை பானைவனைதல் என்று சொல்வது மரபு

6. மண்பாண்டக்கலையின் இன்னொரு வளர்ச்சி நிலை சுடுமண் சிற்பக்கலை

1. சிந்துசமவெளி பானைஓடுகள்
2. ஆதிச்சநல்லூர் முதுமக்கள் தாழிகள்
3. செம்பியன் கண்டியூர் கலையழகு மண்கலங்கள்
4. கீழடி சுடுமண் பொருள்கள்

முற்காலத்தில்‌ பாய்மரக்கப்பல்களில்‌ பயன்பட்டதுகூடப்‌ பாய்தான்‌. இதனைப்‌ புறநானூறு “கூம்பொடு மீப்பாய்‌ களையாது” என்னும்‌ அடியால்‌ குறிப்பிடுகிறது.

பிரம்பு என்பது கொடிவகையைச்‌ சேர்ந்த தாவரம்‌. இதன்‌ தாவரவியல்‌ பெயர்‌ கலாமஸ்‌ ரொடாங்‌ என்பதாகும்‌. இது நீர்நிறைந்த வாய்க்கால்‌ வரப்புகளிலும்‌, மண்குகைகளிலும்‌ செழித்து வளரும்‌. தமிழகத்தில்‌ இப்போது இஃது அருகிவிட்டது. நமது தேவைக்காக அசாம்‌, அந்தமான்‌, மலேசியா ஆகிய இடங்களிலிருந்து தருவிக்கப்படுகிறது.

 

“நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்

பாணன் சூடான் பாடினி அணியாள்”       – – புறநானூறு

இசைக்கருவிகளை இசைத்துப்‌ பாடல்‌ பாடுவோர்‌ பாணர்‌ எனப்பட்டனர்‌.

  1. விலங்குகளின் தோலால் மூடப்பட்டுச் செய்யப்படும் கருவிகள் தோல்கருவிகள் எனப்படும்.               (எ.கா.) முழவு, முரசு
  1. நரம்பு அல்லது தந்திகளை உடையவை நரம்புக்கருவிகள் எனப்படும்.                                                            (எ.கா.) யாழ், வீணை
  1. காற்றைப் பயன்படுத்தி இசைக்கப்படுபவை காற்றுக்கருவிகள் எனப்படும்.                                               (எ.கா.) குழல், சங்கு
  1. ஒன்றோடு ஒன்று மோதி இசைக்கப்படுபவை கஞ்சக்கருவிகள் எனப்படும்.                                                  (எ.கா.) சாலரா, சேகண்டை

 

உடுக்கை:

உடுக்கையின் வேறு பெயர்கள் பெரிய உடுக்கையைத் தவண்டை என்பர். சிறு உடுக்கையைக் குடுகுடுப்பை என்பர்.

“தண்டுடுக்கை தாளந்தக்கை சாரநடம்‌ பயில்வார்”‌     – சம்பந்தர்‌ தேவாரம்‌

குடமுழா:

ஐந்து முகங்களை உடைய முரசு வகையைச்‌ சேர்ந்தது குடமுழா ஒரு பெரிய குடத்தின்‌ வடிவில்‌ ஐந்து வட்டவடிவ வாய்களுடன்‌ அமைந்திருக்கும்‌. நடுவில்‌ இருக்கும்‌ வாய்‌ மற்றவற்றைவிடப்‌ பெரியதாக இருக்கும்‌. ஒவ்வொரு வாயும்‌ தோலால்‌ மூடப்பட்டிருக்கும்‌. ஒவ்வொரு வாயிலிருந்தும்‌ ஒரு தனி வகையான இசை பிறக்கும்‌. இதன்‌ காரணமாக இதனைப்‌ பஞ்சமகா சப்தம்‌ என்றும்‌ அழைப்பர்‌.

குழல்:

புல்லாங்குழல் செய்ய பயன்படும் மரங்கள் சிலவற்றை மூங்கில், சந்தனம், செங்காலி, கருங்காலி. புல்லாங்குழலுக்கு 7 துளைகள் உண்டு.

கொன்றைக்குழல், முல்லைக்குழல், ஆம்பல்குழல் எனப் பலவகையான குழல்கள் இருந்ததாகச் சிலப்பதிகாரம் கூறுகிறது.

குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்

மழலைச்சொல் கேளா தவர். – – திருக்குறள்‌

 

கொம்பு இசைக்கருவியின் வகைகள்

ஊதுகொம்பு, எக்காளம், சிங்கநாதம், துத்தரி

சங்கு:

வலமாகச்‌ சுழிந்து இருக்கும்‌ சங்கை வலம்புரிச்சங்கு என்பர்‌. சங்கின்‌ ஒலியைச்‌ சங்கநாதம்‌ என்பர்‌. இலக்கியங்களில்‌ இதனைப்‌ பணிலம்‌ என்றும்‌ குறிப்பிட்டுள்ளனர்.

“சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்

பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்” – – திருப்பாவை.

சாலரா:

சாலரா இதனை இக்காலத்தில்‌ ‘ஜால்ரா’ என்பர்‌. இதனைப்‌ பாண்டில்‌ எனவும்‌ அழைப்பர்‌

சேகண்டை:

வட்டவடிவமான மணி வகையைச் சேர்ந்தது சேகண்டி. இதனைக் குச்சியாலோ அல்லது இரும்புத் துண்டாலோ அடித்து ஒலி எழுப்புவர்.

இது தேவைக்கு ஏற்பப் பல அளவுகளில் உருவாக்கப்படும். இதனைச் சேமங்கலம் என்றும் அழைப்பர். இதனைக் கோவில் வழிபாட்டின் போதும் இறுதி ஊர்வலத்தின் போதும் இசைப்பர்.

திமிலை:

பலா மரத்தினால் செய்யப்பட்டு விலங்குத் தோலினால் கட்டப்படும் கருவி திமிலை ஆகும். மணற்கடி காரவடிவத்தில் இக்கருவி அமைந்திருக்கும். இதனைப் பாணி என்னும் பெயரால் அழைப்பர்.

“சங்கொடு தாரை காளம்‌ தழங்கொலி முழங்கு பேரி

வெங்குரல்‌ பம்பை கண்டை வியன்துடி திமிலை தட்டி”  – பெரியபுராணம்‌

பறை:

பறை விலங்குத்‌ தோலால்‌ இழுத்துக்‌ கட்டப்பட்ட கருவி பறையாகும்‌. பழங்காலத்தில்‌ செய்திகளைத்‌ தெரிவிக்கக்‌ கோட்பறையை முழக்கினர்‌. பகைவர்களின்‌ ஆநிரையைக்‌ கவரச்‌ செல்லும்போது ஆகோட்பறையை முழக்குவர்‌. இக்காலத்தில்‌ இது தப்பு என்னும்‌ பெயரில்‌ வழங்கப்படுகிறது. இதனை முழக்கிக்கொண்டு ஆடும்‌ ஆட்டம்‌ தப்பாட்டம்‌ என்று அழைக்கப்படுகிறது.

மத்தளம்:

மத்து என்பது ஓசையின்‌ பெயர்‌. இசைக்கருவிகளுக்கு எல்லாம்‌ தளம்‌ அடிப்படை ஆகும்‌. மத்து + தளம்‌ – மத்தளம்‌ என்று ஆகியது என்கிறார்‌ அடியார்க்கு நல்லார்‌. மத்தளத்தின்‌ நடுப்பகுதி பெருத்தும்‌ கடைப்பகுதி சிறுத்தும்‌ காணப்படும்‌. மரத்தால்‌ செய்யப்பட்டிருக்கும்‌ இதன்‌ வாய்ப்பகுதி வளையங்களில்‌ தோல்‌ இழுத்துக்‌ கட்டப்பட்டிருக்கும்‌. இக்கருவி இரண்டுகைகளாலும்‌ இசைக்கப்படுகிறது. ஆகவே இதனை முதற்கருவி என்பர்‌

“மத்தளம் கொட்டவ ரிசங்கம் நின்றூத

முத்துடைத் தாமநி ரைதாழ்ந்த பந்தற்கீழ்” – நாச்சியார் திருமொழி

முரசு:

தமிழர்கள்‌ போர்த்‌ துணையாகக்‌ கொண்ட கருவிகளுள்‌ முதன்மையானது முரசு ஆகும்‌. படைமுரசு, கொடைமுரசு, மணமுரசு என்று மூன்று வகையான முரசுகள்‌ பழந்தமிழ்‌ நாட்டில்‌ புழக்கத்தில்‌ இருந்தன. தமிழ்‌ மக்களிடம்‌ முப்பத்தாறு வகையான முரசுகள்‌ வழக்கத்தில்‌ இருந்ததாகச்‌ சிலப்பதிகாரம்‌ குறிப்பிடுகிறது. மாக்கண்‌ முரசம்‌ என்று மதுரைக்‌ காஞ்சி குறிப்பிடுகிறது.

முழவு:

மண்ணமை முழவு – பொருநாராற்றுப்படை

காலத்தை அறிவிக்க நாழிகை முழவு, காலை முழவு ஆகியவை பயன்படுத்தப்பட்டன.

“கலைஉணக்‌ கிழிந்த முழவுமருள்‌ பெரும்பழம்”‌ – புறநானூறு

யாழ்‌ வகை

பேரியாழ்‌, செங்கோட்டியாழ்‌ போன்றவை மிகப்‌ பழமையானவை. யாழின்‌ வகைக்கு ஏற்ப அதில்‌ இருக்கும்‌ நரம்புகளின்‌ எண்ணிக்கை வேறுபடுகிறது.

1. பேரியாழ் 21 நரம்புகளை கொண்டது
2. மகரயாழ் 19 நரம்புகளை கொண்டது
3. சகோடயாழ் 14 நரம்புகளை கொண்டது

யாழின்‌ வடிவமே மெல்லமெல்ல மாற்றமடைந்து பிற்காலத்தில்‌ வீணையாக உருமாறியது என்பர்‌.

வீணை:

வீணை யாழ்‌ போன்ற அமைப்பையுடைய நரம்புக்கருவி வீணையாகும்‌. இஃது ஏழு நரம்புகளைக்‌ கொண்டது. பரிவாதினி என்னும் வீணை பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலத்தில் வழக்கத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.

1. குடமுழா பஞ்சமகா சப்தம்
2. சங்கு பணிலம்
3. சாலரா பாண்டில்
4. சேகண்டி சேமங்கலம்
5. திமிலை பாணி
1. மண்ணமை முழவு பொருநாராற்றுப்படை
2. மாக்கண் முரசம் மதுரைக்காஞ்சி
3. பரிவாதினி மகேந்திரவர்மன்

காகிதத்தில்‌ உருவங்கள்‌  செய்யும்‌ கலையை ஜப்பானியர்‌ ‘ஒரிகாமி’ என்று கூறுவர்‌.

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories