கலாப்ரியா
August 19, 2023 2025-01-16 11:32கலாப்ரியா
கலாப்ரியா
கலாப்ரியா
ஆசிரியர் குறிப்பு
-
இயற்பெயர்: தி.சு.சோமசுந்தரம்
-
பெற்றோர்: கந்தசாமி, சண்முகவடிவு
-
ஊர்: திருநெல்வேலி
-
இவர் குற்றாலத்தில் மூன்று முறை கவிதைப் பட்டறைகள் நடத்தியவர்
-
“நிறைய புதுக்கவிதைகள் பழசும் இல்லாத புதுசும் இல்லாத அலி கவிதைகளாக இருக்கின்றன. ஆனால் கலாப்ப்ரியாவின் கவிதைகள் ஆண்பிள்ளைக் கவிதைகள் அல்லது பெண் பிள்ளைக்கவிதைகள்” என தி.ஜானகிராமனால் பாராட்டப்பட்டவர்.
கலாப்ரியா கவிதை நூல்கள்
-
வெள்ளம்
-
தீர்த்தயாத்திரை
-
மற்றாங்கே
-
எட்டயபுரம்
-
சுயம்வரம் மற்றும் கவிதைகள்
-
உலகெல்லாம் சூரியன்
-
கலாப்ரியா கவிதைகள்
-
அனிச்சம்
-
வனம் புகுதல்
-
எல்லாம் கலந்த காற்று
-
நான் நீ மீன்
-
உளமுற்ற தீ
-
தண்ணீர்ச் சிறகுகள்
-
தூண்டில் மிதவையின் குற்ற உணர்ச்சி
-
சொந்த ஊர் மழை
-
பணிக்கால ஊஞ்சல்
-
பேனாவுக்குள் அலையாடும் கடல்
-
சொல் உளி
-
மௌனத்தின் வயது
-
சங்க காலத்து வெயில்
கட்டுரை நூல்கள்
-
நினைவின் தாழ்வாரங்கள்
-
ஓடும் நதி
-
உருள் பெருந்தேர்
-
சுவரொட்டி
-
காற்றின் பாடல்
-
மறைந்து திரியும் நீரோடை
-
மையத்தை பிரிகிற நீர் வட்டங்கள்
-
என் உள்ளம் அழகான வெள்ளித்திரை
-
சில செய்திகள் சில படிமங்கள்
-
போகின்ற பாதையெல்லாம் பூமுகம் காணுகின்றேன்
-
பாடலென்றும் புதியது
-
அன்பெனும் தனி ஊசல்
-
கல்லில் வடித்த சொல் போலே
நாவல்
-
வேனல்
-
பெயரிடப்படாத படம்
-
பேரரவி
-
மாக்காளை
சிறுகதைகள்
-
வானில் விழுந்த கோடுகள்
கலாப்ரியா சிறப்புகள்
-
அறிஞர் அண்ணாவின் இரங்கல் கூட்டத்திற்காக முதன்முதலில் கவிதை (இரங்கற்பா) எழுதிய சோமசுந்தரம், வண்ணநிலவனின் கையெழுத்து இதழான பொருநையில் கவிதை எழுதும் போது தனக்குத் தானே ‘கலாப்ரியா’ என்று பெயர் சூட்டிக்கொண்டார்.
விருதுகள்
-
தமிழக அரசின் கலைமாமணி விருது
-
கவிஞர் சிற்பி இலக்கியவிருது
-
ஜஸ்டிஸ் வி. ஆர். கிருஷ்ணய்யர் விருது, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம், நெல்லை
-
சிறந்த கட்டுரைத் தொகுப்பு – நினைவின் தாழ்வாரங்கள் – விகடன் விருது, மற்றும் சுஜாதா விருது (2010)
-
கண்ணதாசன் இலக்கியவிருது – கோவை – 2012
-
திருப்பூர் தமிழ்ச்சங்க விருது
-
கவிஞர் தேவமகள் இலக்கிய விருது
-
கவிதைக்கணம் வாழ்நாள் சாதனையாளர் விருது
-
கலைஞர் மு.கருணாநி பொற்கிழி விருது – 2017
-
திருச்சி எஸ்.ஆர்.வி பள்ளி வழங்கும் “அறிஞர் போற்றுதும்” விருது -2017
-
அந்திமழை பதிப்பகம் வழங்கும் ‘கலைஞன் போற்றுதும் விருது -2017
-
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் சார்பில் பட்டயம் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் அடங்கிய மனோன்மணியம் சுந்தரனார் விருது
-
கோவை விஜயா பதிப்பக வாசகர் வட்டம் வழங்கும் பட்டயம் மற்றும் ஒரு லட்சம் அடங்கிய “ஜெயகாந்தன் விருது” – 2018
-
அமெரிக்கவாழ் தமிழர்களின் ‘விளக்கு’ அமைப்பு வழங்கும் பட்டயம் மற்றும் ஒரு லட்சம் அடங்கிய ‘புதுமைப்பித்தன் நினைவு விருது – 2019
-
பாலகுமாரன் அறக்கட்டளை சென்னை, வழங்கும் பட்டயம் மற்றும் ஐம்பதினாயிரம் அடங்கிய பாலகுமாரன் இலக்கிய விருது 2020
-
தமிழரசி அறக்கட்டளை சீரோ டிகிரி பதிப்பகம் வழங்கும் ஒண்ணரை லட்சம் மதிப்புள்ள வாழ்நாள் சாதனையாளர் விருது 2022.
“கொப்புகள் விளக்கி
கொத்துக் கொத்தாய்
கருவேலங்காய்
பறித்துபோடும் மேய்பனை
ஒரு நாளும்
சிராய்பதில்லை
கருவமுட்டுகள்”
· “குழைந்தைகள் வரைந்தது
பறவைகளை மட்டுமே
வானம்
தானாக உருவானது”