காமராசர்
August 11, 2023 2025-07-30 9:49காமராசர்
பெருந்தலைவர் காமராசர்
இயற்பெயர் | காமராசர் |
பெற்றோர் | குமாரசாமி நாடார் , சிவகாமி |
ஊர் | விருதுநகர் |
காலம் | 15.07.1903 – 02.10.1975 |
காமராசர் தமிழ் எழுத்துக்களை திண்ணைப் பள்ளியில் கற்றார். தமிழ்ப் பாடத்தை ஓர் ஆண்டு கற்றார். காமராசருக்கு 12ம் வயதில் பள்ளிக்குச் செல்ல இயலாநிலை ஏற்பட்டது. காமராசா் பள்ளி செல்லாத போதும் நாள்தோறும் செய்தித்தாள்களைப் படித்தும், அரசியல் கூட்டங்களில் தலைவர்களின் . சொற்பொழிவுகளைக். கேட்டும் தம்முடைய அரசியல் அறிவை வளர்த்துக் கொண்டார். காமராசர் மெய்கண்டான் புத்தகச்சாலை நூல்நிலையத்திற்குச் சென்று இலெனின், கரிபால்டி, நெப்போலியன் ஆகியோரின் வாழ்க்கை வரலாறுகளைப் படித்துத் திறமையாகப் பேசவும், வாதம் செய்யவும் தொடங்கினார்.
கல்விக் கண் திறந்தவர் என்று தந்தை பெரியாரால் மனதாரப் பாராட்டப்பட்ட மறைந்த முன்னாள் முதல்வர் காமராசர் ஆவார். இவரை அனைவரும் KINGMAKER என்று அழைக்கின்றனர்
காமராசரின் சிறப்புப் பெயர்கள்: தன்னலமற்ற தலைவா், பெருந்தலைவர், கருப்புக் காந்தி,படிக்காத மேதை, ஏழைப்பங்காளர், கர்மவீரர், தலைவர்களை உருவாக்குபவர்.
காமராசரின் கல்விப்பணிகள் அனைவருக்கும் இலவசக் கட்டாயக் கல்விக்கான சட்டத்தை இயற்றித் தீவிரமாக நடைமுறைப்படுத்தினார். மாணவர்கள் பசியின்றிப் படிக்க மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார். பள்ளிகளில் ஏற்றத்தாழ்வின்றிக் குழந்தைகள் கல்வி கற்கச் சீருடைத் திட்டத்தை அறிமுகம் செய்தார்.
காமராசர் உள்நாட்டு விமானநிலையம் சென்னையில் அமைந்துள்ளது. மதுரைப் பல்கலைக்கழகத்திற்கு மதுரை காமராசர் பல்கலைக்கழகம் எனப் பெயர் சூட்டப்பட்டது. சென்னை மெரினா கடற்கரையில் சிலை நிறுவப்பட்டது
காமராசருக்குச் செய்யப்பட்ட சிறப்புகள்:
- நடுவண் அரசு 1976இல் பாரதரத்னா விருது (இந்திய மாமணி) விருது வழங்கியது.
- நடுவணரசு காமராசரின் ஆளுயர வெண்கலச் சிலையை நாடாளுமன்றத்தில் நிறுவியது.
- கன்னியாகுமரியில் காமராசருக்கு மணிமண்டபம் 02.10.2000 ஆம் ஆண்டுஅமைக்கப்பட்டது. ஆண்டு தோறும் காமராசர் பிறந்தநாளான ஜூலை பதினைந்தாம் நாள் கல்வி வளர்ச்சி நாளாகக் கொண்டாடப்படுகிறது.
- காமராசரின் கல்விப்பணியைச் சிறப்பிக்கும் வகையில் தமிழக அரசு மதுரை பல்கலைக்கழகத்தின் பெயரை மதுரை காமராசா் பல்கலைக்கழகம் என்று மாற்றியது.
அரசியல் வாழ்க்கை
- இளமையில் தேசிய இயக்கமான காங்கிரசில் சேந்து, அதன் தொண்டராகத் தம் அரசியல் வாழ்வினைத் தொடங்கினார்.
- சைமன்குழு எதிர்ப்பு, உப்புச்சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் போராட்டங்களில் பங்கு கொண்டார். காமராசர் சிறையில் 11 ஆண்டுகள் இருந்தார்
- காமராசரின் அரசியல் குரு – சத்தியமூர்த்தி
- சத்தியமூர்த்தி காமராசரின் தன்னலமற்ற உழைப்பைக் கண்டு காங்கிரஸ் கட்சியின் செயலாளராக நியமித்தார்
- காமராசா சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு – 1937
- காமராசர் தமிழ்நாட்டுக் காங்கிரசுக் கட்சியின் தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு -1939
- காமராசர் 12 ஆண்டுகள் காங்கிரஸ் தலைவராகப் பதவி வகித்தார்
- 1945ல் பிரகாசம், 1947-இல் ஓமந்தூர் இராமசாமி மற்றும் 1949-இல் குமாரசாமி ஆகியோர் முதலமைச்சராகப் பதவி ஏற்பதற்குக் காமராசர் காரணமாக இருந்தவா்.
- நேருவின் மறைவுக்குப்பின் லால்பகதூர் சாஸ்திரியையும், லால்பகதூர் சாஸ்திரி மறைவுக்குப்பின் இந்திராகாந்தியையும் முதன்மைஅமைச்சராகஆக்கினார். இதனால் தலைவாகளை உருவாக்குபவா் (கிங் மேக்கர்) என அழைக்கப்பட்டார்
- 1954 – 1963 வரை காமராசர் முதலமைச்சராக இருந்தார்
ஆட்சி சிறப்புகள்
- காமராசர் முதலமைச்சராக இருந்த காலத்தில் இரண்டாவது, மூன்றாவது ஐந்தாண்டூ திட்டங்கள் நிறைவேற்றப்பட்டன
- காமராசா் ஆட்சிக்காலத்தில் கிண்டி, அம்பத்தூர், இராணிப்பேட்டை போன்ற ஊர்களில் பெரிய தொழிற்பேட்டைகள் அமைக்கப்பட்டன
- வேளாண்மைக்கென பாசன வசதிகளும், அணைகளும் அமைக்கப்பட்டன
- தமிழகத்தில் கூட்டுறவுச் சங்கங்கள் இல்லாத சிற்றூர்களே இல்லை என்னும் நிலை உருவானது
நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத் தொழிற்சாலை, இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலை, கிண்டி அறுவைச் சிகிச்சைக் கருவித் தொழிற்சாலை, சர்க்கரை ஆலை, சோடா உப்புத் தொழிற்சாலை, சிமெண்ட் தொழிற்சாலை, பெரம்பூர் தொடர்வண்டிப் பெட்டித் தொழிற்சாலை, மேட்டூர் காகிதத் தொழிற்சாலை முதலியவை தொடங்கப்பெற்றன.
கல்வி சாதனைகள்
- காமராசர் ஆட்சிக்காலத்தில் கட்டாயக்கல்வி நடைமுறைப்படுத்தப்பட்டது
- காமராசரின் . நோக்கம் – தெரு தோறும் தொடக்கப்பள்ளி, ஊர்தோறும் உயர்நிலைப்பள்ளி.
- பள்ளி வேலைநாட்களை 180-லிருந்து 200 ஆக உயர்த்தினார்
- தொடக்கப்பள்ளிகளில் மதிய உணவுத்திட்டம் காமராசர் தொடங்கினார்
- பள்ளிச் சீரமைப்பு மாநாடுகள் நடத்தப்பட்டுப் பள்ளிகளுக்கான அடிப்படைப் பொருள்களும் கருவிகளும் பெறப்பட்டன
- காமராசர் ஈராண்டூகளில் நூற்று முப்பத்து மூன்று மாநாடுகள் கூட்டினார்
- தொழில்நுட்பக் கல்லூரிகள், உடற்பயிற்சிக் கல்லூரிகளும், ஆசிரியா் பயிற்சிக் கல்லூரிகளும் காமராசர் ஆட்சியில் திறக்கப்பட்டன
- காமராசர் காலத்தில் மருத்துவக்கல்லூரி முதலான தொழில் கல்லூரிகளில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு வட்டியில்லா கடனளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது
- சமுதாய அமைப்பின் அடித்தளத்தில் உள்ளவர்களை கைதூக்கிவிட முற்போக்கு நடவடிக்கைகள் பல எடூத்தவர் காமராசர்
- தஞ்சாவூர் பண்ணையாள் பாதுகாப்புச் சட்டத்தைத் திருத்தி சாகுபடி செய்யும் தொழிலாளிக்கு 6 விழுக்காடூ பங்கு கிடைக்க வழிவகை செய்தவர் காமராசர்
- நிலச்சீர்திருத்தம் காமராசரால் கொண்டு வரப்பட்டது
- நில உச்ச வரம்பு 30 ஏக்கர் என குறைக்கப்பட்டு நில முதலாளிகளிடமிருந்து உபரி நிலங்கள் பெறப்பட்டு
- நிலமில்லாதோருக்கு அவை பிரித்தளிக்கப்பட்டது
- காமராசர் ஆட்சிக்காலத்தில் மீனவா்,. கருப்புக்கட்டி காய்ச்சுபவர், கைத்தறியாளா், குயவர் முதலிய சிறுதொழிலாளர் நலத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன.
காமராசரின் மக்கள் நலத்திட்டங்கள் – ஓய்வூதியம், நகாப்புற வீடுகட்டும் திட்டம், இலவச மருத்துவ வசதி காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்த மூத்த தலைவர்கள் அமைச்சா் பதிவியிலிருந்து விலகிக் கட்சிப் பணியில் ஈடுபட வேண்டும் என காமராசர் வலியுறுத்திய திட்டத்திற்கு காமராசர் திட்டம் என்று பெயா்
காமராசர் திட்டத்தின்படி அமைச்சர் பதவியிலிருந்து விலகியவர்கள் காமராசர், மொரார்ஜி தேசாய், லால்பகதூர் சாஸ்திரி. காமராசர் அகில இந்திய காங்கிரசு தலைவராக புவனேசுவர் நகரில் 1963-ஆம் ஆண்டில் கூடிய காங்கிரசு மாநாட்டில் பதவியேற்றார். இந்தியப்பிரதமர் நேரு 1964-ஆம் ஆண்டில் காலமானார். இந்திராகாந்தி பிரதமர் ஆவதற்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்கியவர் காமராசர்.
இந்திய அரசமைப்பு சட்டத்தின் கீழ் உருவான மதராஸ் மாகாண முதல் சட்டமன்றத்தில் (1952-1957). இராஜாஜி அரசு கொண்டுவந்த அடிப்படைக் கல்வி திட்டம் விமர்சிக்கப்பட்டது. எதிர்க்கட்சிகளுடன் ஆளும் காங்கிரசு கட்சியைச் சேர்ந்த ஒரு பகுதியினர் உட்பட இத்திட்டத்தை கடுமையாக எதிர்த்தனர். இத்திட்டம் சாதி அடிப்படையிலான படிநிலை மேலாதிக்கத்தை மீண்டும் கொண்டு வரும் என்று விமர்சித்தனர்.
பின்னர் முதலமைச்சராகப் பதவி ஏற்ற காமராஜர் அமைச்சரவையில் 1954 அரசின் கல்வி அமைச்சர் சி.சுப்பிரமணியம் இத்திட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார்.
அதேசமயம், இராஜாஜி ஆட்சியின் போது கொண்டு வரப்பட்ட நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களை பாதுகாக்கும் நிலச் சட்டங்கள் தொடரப்பட்டன.
“சென்னை மாகாண தலைவர் சி.இராஜாஜி தனது முதல் நிதி நிலை அறிக்கையை 1937இல் மதராஸ் சட்டமன்றம், செனட் அவை, மதராஸ் பல்கலைக்கழக சேப்பாக்கம் வளாகத்தில் தாக்கல் செய்தார்”.