மு மேத்தா
August 19, 2023
2025-01-16 11:34
மு மேத்தா
மு மேத்தா
குறிப்பு
இயற்பெயர்: முகமது மேத்தா
ஊர்: பெரியகுளம்
இவர் கல்லூரிப் பேராசரியர்
மு மேத்தா கவிதை நூல்கள்
-
கண்ணீர்ப் பூக்கள் (முதல் கவிதை தொகுப்பு)
-
ஊர்வலம் (தமிழக அரசு பரிசு)
-
அவர்கள் வருகிறார்கள்
-
நடந்த நாடகங்கள்
-
முகத்துக்கு முகம்
-
கலைஞருக்கும் தமிழ் என்று பெயர்
-
கனவுக் குதிரைகள்
-
காத்திருந்த காற்று
-
திருவிழாவில் ஒரு தெருப்பாடகன்
-
இதயத்தில் நாற்காலி
-
என் பிள்ளைத்தமிழ்
-
ஒற்றைத் தீக்குச்சி
-
மனிதனைத் தேடி
-
ஒருவானம் இரு சிறகு
-
மனச்சிறகு
-
கனவுகளின் கையெழுத்து
-
கம்பன் கவியரங்கில்
-
என்னுடைய போதி மரங்கள்
-
திருவிழாவில் தெருப்பாடல்கள்
-
நந்தவன நாட்கள்
-
ஆகாயத்தில் அடுத்த வீடு (சாகித்திய அகாடமி விருது)
-
நாயகம் ஒரு காவியம் (கடைசி படைப்பு)
-
காற்றை மிரட்டிய சருகுகள்
நாவல்
சிறுகதைகள்
-
அவளும் நட்சதிரம் தான்
-
கிழித்த கோடு
-
பக்கம் பார்த்து பேசுகிறேன்
-
கதைக் கவிதை
-
வெளிச்சம் வெளியே இல்லை
கட்டுரை
-
நாணும் என் கவிதையும்
-
திறந்த புத்தகம்
உரைநடை நூல்கள்
-
மேத்தாவின் முன்னுரைகள்
-
நினைத்தது நெகிழ்ந்தது
-
ஆங்காங்கே அம்புகள்
கவியரங்கக் கவிதை
மு மேத்தா சிறப்புகள்
-
இவர் எழுதிய நூலான “ஆகாயத்துக்கு அடுத்த வீடு” என்ற கவிதை நூலுக்கு 2006-ஆம் ஆண்டு சாகித்திய அகாதமி விருது பெற்றார்.
-
இவரது முதற் கவிதைத்தொகுப்பு கண்ணீர்ப் பூக்கள்.
-
சமூக விமர்சனத் தொனியில் அமைந்த “தேச பிதாவுக்கு ஒரு தெருப் பாடகனின் அஞ்சலி” என்ற கவிதை மு.மேத்தாவுக்கு புகழ் தேடித் தந்த கவிதை ஆகும்.
-
இவருடைய நூல்களுள் “ஊர்வலம்” தமிழக அரசின் முதற்பரிசினைப் பெற்ற கவிதை நூலாகும்.
-
இவரது “சோழ நிலா” என்னும் வரலாற்று நாவல் ஆனந்த விகடன் இதழ் நிகழ்த்திய பொன்விழா இலக்கியப் போட்டியில் முதல் பரிசு பெற்றது ஆகும்.
-
கவிஞர் வாலியின் ‘அவதார புருஷன்’ எழுதுவதற்கு விதை போட்டது மு.மேத்தா எழுதிய ‘நாயகம் ஒரு காவியம்’ என்கிற நூல்தான். ”அவதார புருஷர் அவதரிக்க நாயகம் காரணம்” என்றார் வாலி.
-
‘மரபுக்கும் புதுமைக்கும் நான் பாலமாக இருப்பேன்’ என்று கூறியவர்.
-
1975-ல் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது. மு.மேத்தா ’இந்தியா இந்திரா 75′ என்னும் தலைப்பில் நூல் ஒன்றை வெளியிட்டார்.
-
மு.மேத்தா தன் பெரும்படைப்பாக எழுத எண்ணியது = நாயகம் ஒரு காவியம்.
-
‘சிறந்த கவிதைகளுக்கு அடையாளம் அவை வாசகனின் நினைவில் திரும்பத் திரும்ப என்ற வகையில் எழுதப்பட்டதுதான் மு.மேத்தாவின் கவிதைகள் வரவேண்டும்’ என்கிறார் தமிழண்ணல்.
-
“கவிதை உலகில் தனக்கென்று ஒரு தனி முத்திரையைப் பதித்து, ஆரவாரம் இல்லாமல் அமைதியாக, இனிமையாக உலவிக் கொண்டிருந்தவர் மேத்தா’ என டாக்டர் பொற்கோ குறிப்பிட்டுள்ளார்.
-
‘மேத்தாவின் கவிதை நடை எல்லோரையும் மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டும். சமூக பிரக்ஞையைப் படம் பிடிக்கும். உயிர்த் துடிப்பும், கொந்தளிப்பும் கொண்டவை’ என்கிறார் பேராசிரியர் அ.சா.ஞானசம்பந்தம்.