மருதகாசி
August 15, 2023 2025-01-11 13:56மருதகாசி
மருதகாசி
அ. மருதகாசி
ஆசிரியர் குறிப்பு
இயற்பெயர் |
அ. மருதகாசி |
பெற்றோர் |
அய்யம்பெருமாள் உடையார் – மிளகாயி அம்மாள் |
ஊர் |
அரியலூர் மாவட்டம் மேலக்குடிகாடு |
காலம் |
13.02.1920 – 29.11.1989 |
துணைவியார் |
தனக்கோடி அம்மாள் |
“திரைக்கவித் திலகம்” கவிஞர் மருதகாசி.
* நெத்தி வேர்வை சிந்தினோமே முத்துமுத்தாக – அது
நெல்மணியாய் விளைஞ்சிருக்குக்-கொத்துக்கொத்தாக
பக்குவமாய் அறுத்துஅதைக் கட்டுக்கட்டாக. – அடிச்சுப்
பதருநீக்கிக் குவிச்சு வைப்போம் முட்டுமுட்டாக! – (ஏர்முனை)
வளர்ந்துவிட்ட பருவப்பெண் போல்உனக்கு வெட்கமா? – தலை
வளைஞ்சு சும்மா பாக்கிறியே தரையின்பக்கமா – இது
வளர்த்துவிட்ட தாய்க்குத் தரும்ஆசை முத்தமா? – என்
மனைக்கு வரக்காத் திருக்கும் நீஎன் சொத்தம்மா – (ஏர்முனை)
பொருள் : உழவுத்தொழிலுக்கு இணையான தொழில் உலகில் இல்லை என்பதனால், நம் வாழ்வில் பஞ்சமில்லை. கதிரவனாலே மழை பொழிந்து நிலத்தில் பயிர்களும் பூத்துக் காய்த்து உள்ளன. நம் உழைப்பால் நாடும் நலம் பெறுகிறது. முத்து முத்தாக வியர்வை சிந்தியதனால் கொத்துக்கொத்தாக நெல்மணிகள் விளைந்துள்ளன. நெற்பயிரானது பருவப்பெண்ணைப்போலத் தரையின் பக்கம் தலை சாய்ந்துள்ளது. இது தன்னை வளர்த்துவிட்ட நிலமகளுக்கு நெற்கதிர் தரும் ஆசை முத்தமாக அமைந்துள்ளது. நெற்கதிர்களை அறுத்துக் கட்டுக்கட்டி அடித்துத் தூற்றிப் பதர் நீக்கி வீட்டில் சேர்த்து வைப்போம். இந்த நெற்கதிர்கள் வீடு வந்து சேரவிருக்கின்றன. அவை என் செல்வமாகும்.
சொற்பொருள்: மாரி – மழை; சேமம் – நலம்; தேசம் – நாடு; முட்டு – குவியல்; நெத்தி – நெற்றி.