ந.பிச்சமூர்த்தி
August 16, 2023 2025-01-16 11:23ந.பிச்சமூர்த்தி
ந.பிச்சமூர்த்தி
இயற்பெயர்: ந.வேங்கட மகாலிங்கம்
புனைப்பெயர்: ந.பிச்சமூர்த்தி
-
புதிய படைப்புச் சூழலில் மரபுக்கவிதையின் யாப்புப் பிடியிலிருந்து விடுபட்ட கவிதைகள் புதுக்கவிதைகள் எனப்பட்டன.
-
பாரதியாரின் வசன கவிதையைத் தொடர்ந்து படைக்கும் முயற்சியில் ந.பிச்சமூர்த்தி ஈடுபட்டார்.
- பாரதிக்குப்பின் கவிதை மரபில் திருப்பம் விளைவித்தவை இவரது படைப்புகள்
-
எனவே அவர் புதுக்கவிதையின் தந்தை என போற்றப்படுகிறார்.
-
ந.பிச்சமூர்த்தி தொடக்க காலத்தில் வழக்குரைஞராகவும், இந்து சமய அறநிலையப் பாதுகாப்புத்துறை அலுவலராகவும் பணியாற்றியுள்ளார்.
-
ஹனுமான், நவ இந்தியா ஆகிய இதழ்களின் துணை ஆசிரியர்
-
இவரின் முதல் சிறுகதை – ஸயன்ஸூக்பலி என்பதாகும்
-
1932-ல் கலைமகள் இதழ் வழங்கிய பரிசை பெற்றவர்
-
பிக்ஷூ, ரேவதி என்னும் புனைப்பெயரில் படைப்புகளை வெளியிட்டவர்.
-
ந.பிச்சமூர்த்தி ஹனுமான், நவ இந்தியா ஆகிய இதழ்களின் துணை ஆசியராக பணியாற்றி உள்ளார்.
-
இயற்கையும் வாழ்க்கை அனுபவங்களையும் இணைத்து, அறிவுத் தெளிவுடன் நல்வாழ்க்கைக்கான மெய்யியல் உண்மையும் காணும் முயற்சிகளே பிச்சமூத்தியின் கவிதைகள் – “புதுக்கவிதை தோற்றமும் வளர்ச்சியும்” என்னும் நூலில் வல்லிக்கண்ணன் ந.பிச்சமூர்த்தியினை குறிப்பிட்டுள்ளார்.
தொழில் :
1924-1938 வரை வழக்குரைஞர்
1938-1954 வரை கோவில் நிர்வாக அலுவலர்.
படைப்பு :
கதைகள் மரபு கவிதைகள், புதுக்கவிதைகள் ஓரங்க நாடகங்கள்.
புதுக்கவிதைக்குத் தோற்றுவாய் செய்ததால் புதுக்கவிதையின் பிதாமகர் எனப் போற்றப்படுகிறார்.
தமிழ்ப் புதுக்கவிதை இயக்கத்தை தோற்றுவித்தவர்.
தமிழில் வந்த முதல் கவிதை தொகுதி இவருடையது – புதுக்குரல்கள் என்ற கவிதைத் தொகுதி.
இவருடைய முதல் கவிதை – நடுத்தெரு நாராயணன்
இவருடைய முதல் சிறுகதை – சயன்சுக்குப் பலி
இவருடைய முதல் வசனக்கவிதை – காதல் (1934)
1933 – “முள்ளும் ரோஜாவும்” என்ற சிறுகதை கலைமகள் பத்திரிக்கை நடத்திய சிறுகதை போட்டியில் பரிசு பெற்றது.
ஒளியின் அழைப்பு – பாடல் வரிகள்
பிறவி இருளைத் துளைத்துசூழலின் நிழலை வெறுத்து முகமுயர்த்திஎப்படி விண்ணின்று வழியும் ஒளியமுதைத் தேடிப் போகிறதுரவியின் கோடானுகோடி விரல்களின் அழைப்பிற்கு இணங்கிஎப்படி உடலை நெளித்து நீட்டி, வளைத் து வளருகிறதுஎப்படி அமிருதத்தை நம்பி, ஒளியை வேண்டிபெருமரத்துடன் சிறு கமுகு போட்டியிடுகிறதுஅதுவே வாழ்க்கைப் போர்முண்டி மோதும் துணிவே இன்பம்உயிரின் முயற்சியே வாழ்வின் மலர்ச்சி. |
கமுகு மரம், தான் தோன்றிய இடத்தில் இருந்த பெருமரத்தின் நிழல் என்னும் இருளைத் துளைத்து நின்றது.
கமுகு மரம் விண்ணிலிருந்து வரும் கதிரவன் உயிர்ப்பைத் (அமுதை) தேடியது.
கமுகு மரம் பெருமரத்தின் நிழலை வெறுத்து, உச்சி கிளையை மேல் உயர்த்தி நின்றது.
அமுதத்தை நம்பி, ஒளியை வேண்டிக் கமுகு மரம் பெருமரத்துடன் போட்டி போடக் காரணம் ஆகும்.
இதுவே வாழ்க்கைப் போர்
கமுகு மரம் பெருமரத்துடன் முட்டி மோதி துணிச்சல், முயற்சி, நம்பிக்கைக் கொண்டு தன்முனைப்போடு கூடிய போட்டியில் போராணி வென்றது.
பெரு மரத்தை விஞ்சி வளர்ச்சி பெற்றி நடை போடுகிறது.
அதுபோலவே வாழ்க்கைப் போரில் செயல்பட்டால் வெற்றி பெறலாம் என்கின்ற வழியைக் கழுகமரம் வாயிலாக ஆசிரியர் உணர்த்துகிறார்.
ந.பிச்சமூர்த்தி புதுக்கவிதைக்கு குறிப்பிடும் வேறு பெயர்கள்
-
இலகு கவிதை
-
கட்டற்ற கவிதை
-
விலங்குகள் இலாக் கவிதை
-
கட்டுக்குள் அடங்காக் கவிதை
ந.பிச்சமூர்த்தி படைத்த இலக்கிய வகைமைகள்
-
புதுக்கவிதை
-
சிறுகதை
-
ஓரங்க நாடகங்கள்
-
மரபுக்கவிதை
நீயன்றி மண்ணுண்டோ, விண்ணுண்டோ,
ஒளியுண்டோ, நிலவுமுண்டோ,
நீருண்டோ, என்னிடம் வாழ்த்துப் பொருளுமுண்டோ ?
கதிரவா கனிந்து வருவாய்!
கரும்பு மனமும் இனிப்பாம் உயிரும்
நின்னடி படைத்து விட்டோம்
கதிரவா! ஏற்று மகிழ்வாய்
உயர்ந்தவா, உயிரின் முதலே! * – ந. பிச்சமூர்த்தி
பொருள் : நீயில்லாமல் மண்ணும் விண்ணும் ஒளியும் நிலவும் நீருமில்லை. எல்லாமே உன்னிடமிருந்து பிறந்தவை. எனவே, உன்னைப் புகழ்ந்து போற்ற எம்மிடம் எப்பொருளும் இல்லை. கரும்புபோலும் இனிய மனத்துடனும் இனிதான உயிர்ப்புடனும் உனது திருவடிகளைப் பணிந்து படைத்துவிட்டோம். அனைத்திலும் உயர்ந்த நீ, இவற்றை ஏற்று மகிழ்ந்து அருள் புரிவாயாக!
சொற்பொருள் : திரு – செல்வம்; நிவேதனம் – படையலமுது; கனகம் – பொன்; புரவி – குதிரை; கோ – அரசன்; கடுகி – விரைந்து.