இரா மீனாட்சி
August 18, 2023
2025-01-16 11:37
இரா மீனாட்சி
இரா மீனாட்சி குறிப்புகள்
-
இவர் திருவாரூரில் பிறந்தவர்
-
பிறப்பு: 1941
-
பெற்றோர்: இராமச்சந்திரன் – மதுரம்
-
சி. சு. செல்லப்பாவின் ‘எழுத்து’ காலத்தில் இருந்து எழுதத் தொடங்கி இன்றுவரை தொடர்ந்து எழுதி வருபவர்
இரா மீனாட்சி கவிதை நூல்கள்
-
நெருஞ்சி
-
சுடுபூக்கள்
-
தீபாவளிப் பகல்
-
செம்மண் மடல்கள்
-
கூழாங்கல்
-
மூங்கில் கண்ணாடி
-
உதய நகரிலிருந்து
-
மறுபயணம்
-
செம்மண் மடல்கள் (தமிழக அரசு பரிசு)
-
வாசனைப்புல்
-
கொடிவிளக்கு
-
ஓவியா
-
இந்தியப் பெண்கள் பேசுகிறார்கள் (ஆங்கிலப் படைப்பு)
கவிதை தொகுதி
-
seeds france
-
duat and dreams
ஆய்வு நூல்கள்
-
அருகி வரும் மாட்டுவண்டி (The technology economy and history of the traditional wooden wheel bullock cart) மற்றும் சிறுபாணன் சென்ற பெருவழி
-
மொழிவளம் பெற (தமிழ்-ஆங்கிலம் கவிதைகள்)
-
பனைமரமும் நாட்டுப்புற மக்களும் (Palmyrah tree and the native people)
-
தமிழக மகளிரின் கலைகளில் ஒன்றான கோலக்கலை பற்றிய ஆய்வு (Kolam – The floor drawing )
-
தமிழில் கடித இலக்கியம்.
-
புனிதச் சமையல் (Sacred cooking)
சிறப்புகள்
-
இவர் எழுதிய “உதய நகரிலிருந்து” எனும் நூல் தமிழ் வளர்ச்சித் துறையின் 2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் புதுக்கவிதை எனும் வகைப்பாட்டில் பரிசு பெற்றிருக்கிறது
-
இவர் எழுதிய செம்மண் மடல்கள் என்னும் நூலும் 2012ஆம் ஆண்டிற்கான சிறந்த நூல் விருதினைப் பெற்றுள்ளது.
-
சிறந்த சித்த மருத்துவச் சேவைக்காக ஸ்ரீபுத்து மகரிஷி அறக்கட்டளை வழங்கிய சித்த மருத்துவச் சேவைச் செம்மல் என்னும் விருதினையும் இவர் பெற்றுள்ளார்.
-
சிறந்த கிராமப்புற இளைஞர் பணிக்கான ஜெர்மன் டாக்டர். ஹேயின்ரிச் அவார்டு – ஜெர்மனி. (1978)
-
சென்னை. சுந்தர்ஜா அறக்கட்டளை – சிறந்த பல்நோக்குச் கல்விச் சிந்தனையாளர் விருது.
-
1999 ஆம் ஆண்டு கோவை அமரர் கவிஞர் தேவமகள் அறக்கட்டளை முதலாமாண்டுச் சிறப்புப் பொற்கிழியும், பாராட்டும்.
-
2005 ஆம் ஆண்டு கவிஞர் சிற்பி இலக்கிய விருது.
-
2007 செப்டம்பர் 22இல் புதுச்சேரி கவிஞர் கல்லாடனார் இலக்கிய விருது.
-
‘உதயநகரிலிருந்து’ நூலுக்காக தமிழக அரசின் 2006-ஆம் ஆண்டு சிறந்த புதுக்கவிதை நூலுக்கான பரிசு பெற்றமை.
-
திருப்பூர்த் தமிழ்ச் சங்க விருது – 2007
-
புதுவை பாரதி விருது – 2010
-
கவிக்கோ விருது – 2010 – கவிக்கோ அப்துல் ரகுமான் அறக்கட்டளை, சென்னை.
-
தமிழக அரசு தமிழ் வளர்ச்சித் துறையின் 2013ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல் விருது
-
ஸ்ரீபுத்து மகரிஷி அறக்கட்டளை வழங்கிய சித்த மருத்துவச் சேவைச் செம்மல் விருது