Blog

Samacheer Kalvi 6th Standard Tamil

Old Syllabus

Samacheer Kalvi 6th Standard Tamil

1. விளைவுக்கு
 நீர்
2. அறிவுக்கு
தோள்
3. இளமைக்கு
பால்
4. புலவர்க்கு
வேல்
உலக உயிர்களை ஓரறிவு முதல் ஆறறிவு வரை வகைப்படுத்தியவர் தொல்காப்பியர்
“தினையளவு போதாச் சிறுபுல்நீர் நீண்ட
பனையளவு காட்டும்”   – திருவள்ளுவமாலை
திருவள்ளுவமாலை என்ற நூலை எழுதியவர் கபிலர்
தொலைவில் உள்ள பொருளின் உருவத்தை அருகில் தோன்றச் செய்ய முடியும் என்ற கருத்தை நிறுவியவர் கலீலியோ
“நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்”. – தொல்காப்பியம்
நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் ஐந்தும் கலந்தது இவ்வுலகம் என தொல்காப்பியர் தமது தொல்காப்பியம் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.
“கடல் நீர் முகந்த கமஞ் சூல் எழிலி”- கார் நாற்பது
கடல் நீர் ஆவியாகி மேகமாகும். பின்னர் மேகம் குளிர்ந்து மழையாகப் பொழியும்.பழந்தமிழ் இலக்கியங்களான முல்லைப்பாட்டு, பரிபாடல், திருக்குறள், கார்நாற்பது திருப்பாவை முதலிய நூல்களில் இந்த அறிவியல் செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது.
சுறாமீன் தாக்கியதால் ஏற்பட்ட புண்ணை, நரம்பினால் தைத்த செய்தி பற்றி நற்றிணை கூறுகிறது.
“கோட்சுறா எறிந்தெனச் சுருங்கிய
நரம்பின் முடிமுதிர் பரதவர்” – நற்றிணை
திரவப் பொருள்களை எவ்வளவு அழுத்தினாலும் அவற்றின் அளவைச் சுருக்க முடியாது என்ற அறிவியல் கருத்தினை
“ஆழ அமுக்கி முகக்கினும் ஆழ்கடல்நீர்
நாழி முகவாது நால் நாழி”
என்ற பாடலின் மூலம் ஔவையார் கூறியுள்ளார்.
தமிழில் பயின்ற அறிவியல் அறிஞர்கள்
  • முன்னாள் குடியரசுத் தலைவர் மேதகு டாக்டர் ஆ. ப. ஜெ. அப்துல்கலாம்
  • இஸ்ரோ அறிவியல் அறிஞர் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை.
  • இஸ்ரோவின் தலைவர் டாக்டர் கை. சிவன்.
 கழுத்தில் சூடுவது – தார்
கதிரவனின் மற்றொரு பெயர் – ஞாயிறு
‘சென்னி’ என்பது சோழனைக் குறிக்கும் பெயர்
“திகிரி” என்பது குறிக்கும் பொருள் சக்கரம்
“நாம” என்னும் சாெல் உயர்த்தும் பொருள் அச்சம்
பறவைகள் இடம் பெயர்தலை வலசைபோதல் என்பர் .
காக்கைகுருவி எங்கள் சாதி – என்று பாரதியார் பாடினார்.
பறவையியல் ஆய்வாளர்களுக்கு முன்னோடி- டாக்டர் சலீம் அலி. ‘இந்தியாவின்‌ பறவை மனிதர்‌’ என்றும் அழைக்கப்படுகிறார்‌.
தன் வாழ்க்கை வரலாற்று நூலுக்குச் “சிட்டுக்குருவியின் வீழ்ச்சி” (The fall of sparrow) என்று பெயரிட்டுள்ளார்.
மனிதன்‌ இல்லாத உலகில்‌ பறவைகள்‌ வாழமுடியும்‌!
பறவைகள்‌ இல்லாத உலகில்‌ மனிதன்‌ வாழமுடியாது! – என்கிறார்‌ சலீம் அலி.
 சத்திமுத்தப்புலவர்‌நாராய்‌, நாராய்‌, செங்கால்‌ நாராய்‌” என்னும்‌ பாடலை எழுதியுள்ளார்‌.  அப்பாடலில்‌ உள்ள “தென்திசைக்‌ குமரிஆடி வடதிசைக்கு ஏகுவீர்‌ ஆயின்‌” என்னும்‌ அடிகள்‌ பறவைகள்‌ வலசை வந்த செய்தியைக்‌ குறிப்பிடுகின்றன.
பறவை பற்றிய படிப்பு ஆர்னித்தாலஜி.
உலகச் சிட்டுக் குருவிகள் நாள் – மார்ச் 20
மிக நீண்டதொலைவு பறக்கும் பறவை ஆர்டிக் ஆலா.
பொருத்தமான திருக்குறள்
2016 ஆம் ஆண்டு ரியோ நகரில் மாற்றுத்திறனாளிகள் ஒலிம்பிக் போட்டி நடைபெற்றது. அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் கலந்துகொண்டார். உயரம் தாண்டுதல் போட்டியில் அவர் தங்கப் பதக்கம் பெற்றார். செய்தியாளர்கள் அவருடைய தாயிடம் நேர்காணல் செய்தனர் . “என் மகனின் வெற்றி எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. அவனைப் பெற்ற பொழுதைவிட இப்போது அதிகமாக மகிழ்கிறேன்” என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.
“ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்”
தம்மை ஒத்த அலைநீளத்தில் சிந்திப்பவர் என்று மேதகு அப்துல் கலாம் அவர்களால் பாராட்டப் பெற்றவர் நெல்லை சு.முத்து. இவர் அறிவியல் அறிஞர் மற்றும் கவிஞர். விக்ரம் சாராபாய் விண்வெளி மையம், சதீஷ்தவான் விண்வெளி மையம், இந்திய விண்வெளி மையம் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.அறிவியல் கவிதைகள், கட்டுரைகள் பலவற்றைப் படைத்துள்ளார்.
“வானை அளப்போம் கடல் மீனை அளப்போம் சந்திர மண்டலத்து இயல் கண்டு தெளிவோம்”. – என்று பாரதியார் பாடினார்.

 

1997-ஆம் ஆண்டு மே மாதம் சதுரங்கப் போட்டி ஒன்று நடைபெற்றது. அதில் உலகச் சதுரங்க வெற்றியாளர் கேரி கேஸ்புரோவ் என்பவர் கலந்து கொண்டார்.ஐ.பி.எம். என்னும் நிறுவனம் உருவாக்கிய டீப் புளூ (Deep blue) என்னும் மீத்திறன் கணினி (Super Computer) அவருடன் போட்டியிட்டது. போட்டியில் டீப் புளூவே வெற்றி வாகை சூடியது”.

சோபியா ரோபோவுக்கு குடியுரிமை வழங்கிய நாடு சவுதி அரேபியா

“இராமன் விளைவு” கண்டுபிடிப்பை வெளியிட்ட பிப்ரவரி 28 ஆம் நாளை நாம் ஆண்டு தோறும் “ தேசிய அறிவியல் நாள்” எனக் கொண்டாடி மகிழ்கிறோம்

 

மருந்து என்னும் பொருள் தரும் சொல் ஒளடதம்

 

1. காமராஜர் பிறந்த நாள் கல்வி வளர்ச்சி நாள்.

2. டாக்டர் எஸ்.இராதாகிருஷ்ணன் பிறந்த நாள் ஆசிரியர் தினம்.

3. அப்துல்கலாம் பிறந்த நாள் மாணவர் தினம்.

4. விவேகானந்தர் பிறந்த நாள் தேசிய இளைஞர் தினம்.

5. ஜவஹர்லால் நேரு பிறந்த நாள் குழந்தைகள் தினம்.

 

தாராபாரதியின் இயற்பெயர் இராதாகிருஷ்ணன்.

கவிஞாயிறு என்னும் அடைமொழி பெற்றவர்.

புதிய விடியல்கள், இது எங்கள் கிழக்கு, விரல் நுனி வெளிச்சங்கள் முதலானவை இவர் இயற்றிய நூல்களாகும்.

இப்பாடல் தாராபாரதியின் கவிதைகள் என்னும் தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.

 

கலீல் கிப்ரான் லெபனான் நாட்டைச் சேர்ந்தவர். கவிஞர்,

புதின ஆசிரியர், கட்டுரையாசிரியர், ஓவியர் எனப் பன்முக ஆற்றல் பெற்றவர்.

இப்பாடப்பகுதி கவிஞர் புவியரசு மொழிபெயர்த்த தீர்க்கதரிசி என்னும் நூலில் இடம் பெற்றுள்ளது.

 

மணிமேகலை கையில் இருந்த அமுதசுரபியில் உணவு இட்ட பெண் ஆதிரை.

மணிமேகலா தெய்வம் மணிமேகலையை அழைத்துச் சென்ற தீவு மணிபல்லவத்தீவு.

கோமுகி என்து ஒரு பொய்கையின் பெயர். ‘கோ’ என்றால் பசு. முகி என்றால் முகம். பசுவின் முகம் போன்று அமைந்து இருப்பதால் இப்பொய்கை கோமுகி என்னும் பெயரைப் பெற்றது.

தமக்கென முயலா நோன்றாள்‌ – பிறர்க்ககன

மூயலுநர்‌ உண்மையானே  (புறநானூற்று-182)

உலகம் வாழ்கிறது எதனால் என்று தெரிந்துகொள்வோம். தனக்கென முயலாமல் பிறருக்கு உதவுதற்காக முயலும் மிகப்பெருந் தாளாண்மை உடையவர் உலகில் வாழ்வதால்தான்

 

வள்ளலார்‌

“வாடிய பயிரைக்‌ கண்ட போதெல்லாம்‌ வாடி னேன்‌”- வள்ளலார்‌.

வடலூரில்‌ சத்திய தருமச்சாலையைத்‌ தொடங்கி எல்லாருக்கும்‌ உணவளித்தார்‌. 

 

அன்னை தெரசா

வாழ்க்கை என்பது நீ சாகும்‌ வரை அல்ல

மற்றவர்‌ மனதில்‌ நீ வாழும்‌ வரை – அன்னை தெரசா

மக்களுக்குச்‌ செய்யும்‌ பணியே இறைவனுக்குச்‌ செய்யும்‌ பணி என்று வாழ்ந்தார்‌. அதனால்‌ அமைதிக்கான நோபல்‌ பரிசு அவரைத்‌ தேடி வந்தது.

 

கைலாஸ்‌ சத்யார்த்தி

குழந்தைகளைப்‌ பாதுகாப்போம்‌ என்னும்‌ இயக்கத்தைத்‌ தொடங்கினார்‌

 குழந்தைகளைத்‌ தொழிலாளர்களாக மாற்றுவது மனிதத்‌ தன்மைக்கு எதிரான குற்றம்‌. உலகத்தைக்‌ குழந்தைகளின்‌ கண்‌ கொண்டு பாருங்கள்‌. உலகம்‌ அழகானது. – கைலாஷ்‌ சத்யார்த்தி.

அன்னை தெரசாவிற்கு அடுத்து அமைதிக்கான நோபல்‌ பறிசு பெற்ற இந்தியர்‌ கைலாஷ்‌ சத்யார்த்தி.

1. வள்ளலார் பசிப்பிணி போக்கியவர்
2. கைலாஷ் சத்யார்த்தி குழந்தைகள் உரிமைக்குப் பாடுபட்டவர்
3. அன்னை தெராசா நோயாளிகளிடம் அன்பு காட்டியவர்

அர்ச்சுனன்‌ வில்‌ வித்தையில்‌ சிறந்தவன்‌ ஆவான்‌.

“தர்மம்‌ தலைகாக்கும்‌” என்பது பழமொழி.

சிறந்த நிர்வாகி எனப்‌ பாரிவேந்தனை அனைவரும்‌ பாராட்டினர்‌.

“எண்ணித்‌ துணிக கர்மம்‌” என்பது வள்ளுவர்‌ வாக்கு.

 

கல்லைத்தான்‌ மண்ணைத்தான்‌ காய்ச்சித்தான்‌

குடிக்கத்தான்‌ கற்பித்‌ தானா ?

இல்லைத்தான்‌ பொன்னைத்தான்‌ எனக்குத்தான்‌

கொடுத்துத்தான்‌ இரட்சித்‌ தானா ?

அல்லைத்தான்‌ சொல்லித்தான்‌ ஆரைத்தான்‌

நோவத்தான்‌ ஐயோ எங்கும்‌

பல்லைத்தான்‌ திறக்கத்தான்‌ பதுமத்தான்‌

புவியில்தான்‌ பண்ணி னானே.

 

வணக்கம்வரும்‌ சிலநேரம்‌ குமர கண்ட

வலிப்புவரும்‌ சிலநேரம்‌ வலியச்‌ செய்யக்‌

கணக்குவரும்‌ சிலநேரம்‌ வேட்டை நாய்போல்‌

கடிக்கவரும்‌ சிலநேரம்‌ கயவர்க்‌ கெல்லாம்‌

இணக்கவரும்‌ படிதமிழைப்‌ பாடிப்‌ பாடி

எத்தனைநாள்‌ திரிந்துதிரிந்து உழல்வேன்‌ ஐயா!

குணக்கடலே அருட்கடலே அசுர ரான

குரைகடலை வென்றபரங்‌ குன்று ளானே !                             – இராமச்சந்திரக்‌ கவிராயர்‌

துன்பத்தையும்‌ நகைச்சுவையோடு சொல்வதில்‌ வல்லவர்‌ இராமச்சந்திரக்கவிராயர்‌.

புலவர்‌ பலர்‌, அவ்வப்போது பாடிய பல பாடல்கள்‌ தொகுக்கப்படாமல்‌ இருந்தன. அவற்றைத்‌ “தனிப்பாடல்‌ திரட்டு” என்னும்‌ பெயரில்‌ தொகுத்துள்ளனர்‌. பெரும்பாலான பாடல்கள்‌ இருநூறுமுதல்‌ முந்நூறு ஆண்டுகளுக்குள்‌ பாடப்பட்டவை.

அ. புலவரின்‌ வறுமையைப்‌ பாடியவர்‌ – இராமச்சந்திரக்கவிராயர்

ஆ. பகுத்தறிவுக்‌ கவிராயர்‌ – உடுமலை நாராயணகவி

இ. “ஊரும்‌ பேரும்‌’ என்னும்‌ நூலின்‌ ஆசிரியர்‌ – ரா. பி. சேதுப்பிள்ளை

 

மரமும்‌ பழைய குடையும்‌ – அழகிய சொக்கநாதப்‌ புலவர்‌ திருநெல்வேலி மாவட்டத்தில்‌ உள்ள தச்சநல்லூரில்‌ பிறந்தவர்‌.

தனிப்பாடல்‌ திரட்டில்‌ இடம்பெற்றுள்ள சிலேடைப்பாடல்‌ ஒன்று. ஒரு சொல்லோ தொடரோ இருபொருள்‌ தருமாறு பாடுவது சிலேடை எனப்படும்‌. இதனை, “இரட்டுறமொழிதல்‌” எனவும்‌ கூறுவர்‌. இரண்டு + உற + மொழிதல்‌ – இரட்டுறமொழிதல்‌

கடுவெளிச்‌ சித்தர்‌ இவர்‌, உருவ வழிபாடு செய்யாமல்‌ வெட்டவெளியையே கடவுளாக வழிபட்டவர்‌;

 

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories