Blog

Samacheer Kalvi 7th Standard Tamil

Old Syllabus

Samacheer Kalvi 7th Standard Tamil

ராஜமார்த்தாண்டன் கவிஞர், இதழாளர், கவிதைத் திறனாய்வாளர் எனப் பன்முகத் திறன்கள் பெற்றவர்.
கொல்லிப்பாவை என்னும் சிற்றிதழை நடத்தியவர்.

மகாவித்துவான்‌ மீனாட்சிசுந்தரனார்‌, தமிழகத்திலுள்ள பல்வேறு கோவில்களுக்கு நடைப்பயணம்‌ மேற்‌ கொண்டு அக்கோவில்களைப்‌ பற்றித்‌ தலபுராணங்கள்‌ பல இயற்றியுள்ளார்‌.

மூன்றாவது என்பது சுண்ணாம்பைக்‌ குறிக்கும்‌ ஒரு சொல்லாகும்‌. (வெற்றிலை + பாக்கு + சுண்ணாம்பு).

நோய்க்கு மருந்து இலக்கியம்‌” என்றார்‌ மகாவித்துவான்‌ மீனாட்சிசுந்தரனார்‌

“நாளை என்‌ தாய்மொழி சாகுமானால்‌ – இன்றே நான்‌ இறந்து விடுவேன்‌” என்றான்‌ ரஷ்யக்‌ கவிஞன்‌ ரசூல்‌ கம்சதேவ்‌.

கோவூர்கிழார்

கோவூர்கிழார்‌ உறையூருக்கு அருகிலுள்ள கோவூரில்‌, வேளாளர்‌ மரபில்‌ பிறந்தார்‌;

நலங்கிள்ளி என்ற மன்னன்‌ உறையூரைத்‌ தலைநகராகக்‌ கொண்டு சோழநாட்டை ஆண்டு வந்தான்‌.

சோழர்‌ மரபில்‌ தோன்றிய நலங்கிள்ளிக்கும்‌ நெடுங்கிள்ளிக்கும்‌ நெடுங்காலம்‌ பகைமை இருந்து வந்தது.

பனம்பூ மாலையணிந்த சேரனும்‌, வேப்பம்பூ மாலையணிந்த பாண்டியனும்‌, சோழருக்குரிய ஆத்திமாலையணிந்தவனே

உறையூருக்கு அருகில்‌ ஆவூர்க்கோட்டை போர்‌ மூண்டது. கோவூர்கிழாரின்‌ அறிவுரையைக்‌ கேட்ட நெடுங்கிள்ளி உறையூர்க்கோட்டையை நலங்கிள்ளியிடம்‌ ஒப்படைத்துவிட்டு வெளியேறினான்‌.

கிள்ளிவளவன்‌ புகார்‌ நகரைத்‌ தலைநகராகக்‌ கொண்டு சோழநாட்டை ஆண்டு வந்தான்‌. கடையேழு வள்ளல்களுள்‌ ஒருவரான மலையமான்‌ திருமுடிக்காரிக்கும்‌, கிள்ளிவளவனுக்கும்‌ பெரும்பகை இருந்தது. மலையமானை அடக்கமுடியாத சோழன்‌ கிள்ளிவளவன்‌, அவன்‌ பிள்ளைகள்‌ இருவரையும்‌ கவர்ந்து சிறை வைத்தான்‌. முன்னோர்‌ பெருமையை நினைவூட்டினார்‌ கோவூரார்‌. அதனால்‌, கிள்ளி வளவன்‌ தான்‌ செய்யவிருந்த பெரும்பிழையைத்‌ தவிர்த்தான்‌. சிறுவர்‌ இருவரையும்‌ யானையின்‌ முன்னிருந்து விடுவித்த கோவூர்கிழார்‌, பிள்ளைகளை மலையமான்‌ திருமுடிக்காரியிடம்‌ ஒப்புவித்து மகிழ்ந்தார்‌.

நெடுங்கிள்ளி, தனது கோட்டையை நலங்கிள்ளியிடம்‌ ஒப்படைத்தான்‌; யானையின்‌ காலில்‌ அகப்பட்டு இறக்க இருந்த திருமுடிக்காரியின்‌ பிள்ளைகள்‌ காப்பாற்றப்பட்டார்கள்‌; ஒற்றரெனச்‌ சிறையில்‌ அடைபட்ட இளந்தத்தனார்‌ விடுதலை பெற்று மகிழ்ந்தார்‌. கோவூர்கிழார்போல்‌ சொல்லும்‌ திறனும்‌ அதனைக்‌ கேட்டு ஏற்றுச்‌ செயல்படும்‌ பண்பும்‌ மன்னர்க்கு இருந்ததால்‌ மக்கள்‌ நலமுற்றனர்‌.

1962 திசம்பர்‌ 22ஆம்‌ நாளன்று இராமானுஜத்தின்‌ 75ஆவது பிறந்த நாளை முன்னிட்டு நடுவணரசு பதினைந்து காசு அஞ்சல்தலை இருபத்தைந்து இலட்சம்‌ வெளியிட்டது. வெளியிட்ட அன்றே அத்தனை அஞ்சல்தலைகளும்‌ விற்றுத்‌ தீர்ந்துவிட்டன.

1971ஆம்‌ ஆண்டு, பேராசிரியர்‌ இராமானுஜம்‌ அனைத்துலக நினைவுக்குழு சென்னையில்‌ அமைக்கப்பட்டது.

சென்னையில்‌, 1972ஆம்‌ ஆண்டு அக்டோபர்‌ 3ஆம்‌ நாள்‌ அன்றைய தமிழக முதலமைச்சரால்‌ இராமானுஜம்‌ கணித அறிவியல்‌ நிறுவனம்‌ திறந்து வைக்கப்பட்டது.

அவர்‌ பணியாற்றிய சென்னைத்‌ துறைமுகம்‌ சார்பில்‌ புதிதாக வாங்கிய குடிநீர்க்கப்பலுக்குச்‌, சீனிவாச இராமானுஜம்‌ எனப்‌ பெயர்‌ சூட்டப்பட்டது.

அமெரிக்காவின்‌ விசுகன்சீன்‌ பல்கலைக்கழகப்‌ பேராசிரியர்கள்‌ ரிச்சர்ட்டும்‌ ஆஸ்கேயும்‌ இணைந்து 1984இல்‌ அவரது மார்பளவு வெண்கலச்‌ சிலையை

இந்தியாவிற்குக்‌ கொண்டு வந்து வழங்கினர்‌.

கணிதக்‌ குறிப்புகள்‌ அடங்கிய 3 குறிப்பேடுகளையும்‌ ஆராய்ச்சிக்‌ கட்டுரைகளையும்‌ விட்டுச்‌ சென்றுள்ளார்‌. அவருடைய குறிப்பேடுகளில்‌ 3000 முதல்‌ 4000 தேற்றங்களை 1957ஆம்‌ ஆண்டு “டாடா” அடிப்படை ஆராய்ச்சி நிலையம்‌, அப்படியே ஒளிப்படம்‌ எடுத்து நூலாக வெளியிட்டுள்ளது.

பசி ருசியறியாது என்பதனை மெய்ப்பிக்கும்‌ வகையில்‌ மருதுபாண்டி பழைய சோற்றினைச்‌ சுவைத்துச்‌ சாப்பிட்டார்‌;

“பழைய சோற்றுக்கா இவ்வளவு பெரிய பரிசு.” என்று வியந்தாள்‌ கிழவி. அந்த ஊர்தான்‌ சிவகங்கைக்கு அருகில்‌, பழஞ்சோற்றுக்‌ குருநாதனேந்தல்‌

என்னும்‌ பெயரில்‌ இன்றும்‌ வழங்கி வருகிறது.

“காலத்தினாற்‌ செய்த நன்றி சிறிதெனினும்‌

ஞாலத்தின்‌ மாணப்‌ பெரிது.”

திருவாரூர்‌ நான்மணிமாலை (இறைவன்‌ மண்‌ சுமந்ததற்கு இரங்கல்‌ )

என்பணிந்த தென்கமலை ஈசனார்‌ பூங்கோயில்‌

முன்பணிந்த தெய்வ முனிவோர்கள்‌ – அன்புஎன்னாம்‌

புண்சுமந்தோம்‌ நந்தி புடைத்தென்னார்‌ புண்ணியனார்‌

மண்சுமந்தார்‌ என்றுருகு வார்‌.                                                     – குமரகுருபரர்‌

 

பொருள்‌ : எலும்பை மாலையாக அணிந்தவரும்‌ திருவாரூரில்‌ எழுந்தருளி உள்ளவருமான சிவபெருமானைத்‌ தெய்வத்தன்மையுள்ள முனிவர்கள்‌ வணங்கியபோது, நந்தியால்‌ அடிபட்டதற்கு அவர்கள்‌ வருந்தவில்லை. வந்தி என்னும்‌ பெயருடைய கிழவிக்காக மண்சுமந்து பாண்டியனிடம்‌ இறைவன்‌ அடிபட்டார்‌ என்பதனை நினைத்து அவர்கள்‌ மனம்‌ வருந்தினார்கள்‌. அவர்களின்‌ அன்பு மிகவும்‌ உயர்ந்தது.

சொற்பொருள்‌ : என்பணிந்த (என்பு – அணிந்த) – எலும்பை மாலையாக அணிந்த; தென்கமலை – தெற்கில்‌ உள்ள திருவாரூர்‌; பூங்கோயில்‌ – திருவாரூர்க்கோவிலின்‌ பெயர்‌; புண்ணியனார்‌ – இறைவர்‌; மண்‌ சுமந்தார்‌ – வந்தி என்னும்‌ கிழவிக்காக இறைவன்‌ மண்‌ சுமந்தார்‌; உருகுவார்‌ – வருந்துவார்‌.

நூல்‌ குறிப்பு

திருவாரூர்‌ + நான்கு + மணிமாலை = திருவாரூர்‌ நான்மணிமாலை. இது, திருவாரூரில்‌ எழுந்தருளியுள்ள தியாகராசர்மீது பாடப்பெற்ற நான்மணிமாலை எனப்‌ பொருள்படும்‌. நான்மணிமாலை என்பது, தமிழில்‌ வழங்கும்‌ தொண்ணாற்றாறு சிற்றிலக்கிய வகைகளுள்‌ ஒன்று. முத்து, பவளம்‌, மரகதம்‌, மாணிக்கம்‌ என்னும்‌ நால்வகையான மணிகளால்‌ ஆன மாலையைப்‌ போன்று நால்வகையான பாடல்களால்‌ (வெண்பா, கட்டளைக்‌ கலித்துறை, ஆசிரிய விருத்தம்‌, ஆசிரியப்பா) ஆன நாற்பது செய்யுளைக்‌ கொண்டது.

அம்மானை

வீரன்நெடு வெள்வேல்‌ வியன்செந்தில்‌ எம்பெருமான்‌

பாரில்‌உயி ரெல்லாம்‌ படைத்தனன்காண்‌ அம்மானை,

பாரில்‌உயி ரெல்லாம்‌ படைத்தனனே யாமாகில்‌

ஆரணங்கள்‌ நான்கும்‌ அறிவனோ அம்மானை,

அறிந்து சிறைஅயனுக்‌ காக்கினன்காண்‌ அம்மானை.         – சுவாமிநாத தேசிகர்‌

 

பொருள்‌ : ஒளிபொருந்திய நெடிய வேலை ஏந்திய வீரனும்‌ பெருமை பொருந்திய திருச்செந்தூரில்‌ விளங்குபவனும்‌ ஆகிய முருகப்பெருமான்‌, உலகிலுள்ள உயிர்களை எல்லாம்‌ படைத்தனன்‌. உலகிலுள்ள உயிர்களை எல்லாம்‌ படைத்தவனே ஆனாலும்‌, அவன்‌ நான்கு மறைகளையும்‌ அறிவானோ ? அவன்‌, இவற்றை யெல்லாம்‌ அறிந்தே நான்முகனைச்‌ சிறையிலிட்டனன்‌.

சிறப்பு நயம்‌ : அம்மானை – ஒருவகைக்‌ காய்‌ விளையாட்டு. இது பெண்கள்‌ விளையாடுதற்குரியது.

ஆசிரியர்‌ குறிப்பு : திருச்செந்திற்கலம்பகம்‌ என்னும்‌ இந்நூலை இயற்றியவர்‌ ஈசான தேசிகர்‌ என்னும்‌ சுவாமிநாத தேசிகர்‌ ஆவார்‌. ஈசான தேசிகர்‌ என்பது, அவரது சிறப்புப்‌ பெயராகும்‌. தாண்டவமூர்த்தி என்பார்க்கு மகனாகப்‌ பிறந்தார்‌. இவர்‌ மயிலேறும்‌ பெருமாள்‌ என்பாரிடம்‌ கல்வி கற்றார்‌. இவர்‌, திருவாவடுதுறை ஞானதேசிகராகிய அம்பலவாண தேசிகமூர்த்திக்குத்‌ தொண்டராய்‌ இருந்தார்‌; ஏறத்தாழ நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர்‌.

நூல்‌ குறிப்பு : திருச்செந்திற்கலம்பகம்‌ என்னும்‌ இந்நூல்‌, தொண்ணூற்றாறு சிற்றிலக்கிய வகைகளுள்‌ ஒன்று. கலம்பகம்‌ = கலம்‌ + பகம்‌ எனப்‌ பிரியும்‌.  கலம்‌ – பன்னிரண்டு; பகம்‌ – ஆறு எனப்‌ பதினெண்‌ உறுப்புகளைக்‌ கொண்டது.

 

மேழி பிடிக்கும்கை வேல்வேந்தர் நோக்கும்கை

ஆழி தரித்தே அருளும்கை – சூழ்வினையை

நீக்கும்கை என்றும் நினைக்கும்கை நீடூழி காராளர்‌

காக்கும்கை காராளர்‌ கை.                                            – கம்பர்

பொருள்‌ : உழவ! நின்‌ கைகள்‌, ஏர்‌ பிடித்து உழவு செய்கின்ற கைகளாம்‌; வேற்படையைக்‌ கையிலே பிடித்துள்ள மன்னர்களும்‌ ஆர்வத்தோடு நோக்குகின்ற கைகளாம்‌; மோதிரம்‌ அணிந்துள்ள உன்‌ கைகள்‌, வருபவர்க்கு எல்லாம்‌ வரையாது வழங்கும்‌ கைகளாம்‌. ஏழை மக்களின்‌ வறுமைத்‌ துன்பமாகிய பசிப்பிணியைப்‌ போக்கும்‌ கைகளாம்‌; என்றும்‌ உழும்‌ தொழிலே உலகில்‌ நிலையானது; வேளாண்‌ செய்வோரின்‌ கைகளே என்றென்றும்‌ உயிர்களுக்கு அடைக்கலம்‌ அளிக்கின்ற கைகளாம்‌.

சொற்பொருள்‌:

மேழி – கலப்பை, ஏர்‌; வேந்தர்‌ – மன்னர்‌; ஆழி – மோதிரம்‌; சூழ்வினை – உண்டாகும்‌ வறுமைத்‌ துன்பம்‌; காராளர்‌ – கார் மேகங்களை ஆள்பவர் உழவர்‌

பஞ்சகவ்வியம்‌: கோமயம்‌, சாணம்‌, பால்‌, தயிர்‌, நெய்‌ ஆகிய ஐந்து பொருள்களைக்‌ கலந்து செய்வதே பஞ்சகவ்வியம்.

போலி:

ஒரு சொல்லில்‌, முதலிலுள்ள எழுத்தோ இடையில்‌ உள்ள எழுத்தோ, இறுதியிலுள்ள எழுத்தோ மாறுபட்டாலும்‌ பொருள்‌ மாறுபடாது இருப்பின்‌, அது போலி எனப்படும்‌. இப்போலி, முதற்போலி, இடைப்போலி, இறுதிப்போலி என மூவகைப்படும்‌. இறுதிப்‌ போலியைக்‌ கடைப்போலி எனவும்‌ கூறுவர்‌.

ஒரு சொல்லின்‌ முதலெழுத்து மாறினாலும்‌ பொருள்‌ மாறுபடாது வருவது முதற்போலியாகும்‌. (எ.கா) மஞ்சு – மைஞ்சு; மயல்‌ – மையல்‌.

ஒருசொல்லின்‌ இடையெழுத்து மாறினாலும்‌ பொருள்‌ மாறுபடாது இருப்பது, இடைப்போலி எனப்படும்‌. (௭.கா.) முரசு – முரைசு; இலஞ்சி – இலைஞ்சி.

ஒருசொல்லில்‌ ஈற்றெழுத்து மாறினாலும்‌ பொருள்‌ மாறுபடாது இருப்பது, இறுதிப்போலி (கடைப்போலி) என்பர்‌. (எ.கா.) அறம்‌ – அறன்‌; பந்தல்‌ – பந்தர்‌.

அஞ்சு என்னும்‌ சொல்லில்‌ உள்ள அனைத்து எழுத்துகளும்‌ மாறியுள்ளன. இருப்பினும்‌, பொருள்‌ மாறவில்லை. எனவே, இது முற்றுப்போலி எனப்படும்‌.

புனல்‌ விழா

காவிரி ஆற்றின்‌ இரு கரைகளிலும்‌ வாழ்ந்த சோழநாட்டு மக்கள்‌, அவ்வாற்றில்‌ புதுவெள்ளம்‌ வரும்பொழுது புனல்விழாக்‌ கொண்டாடி மகிழ்வர்‌. விழா நடைபெறும்‌ அன்று ஆற்றலும்‌ ஆண்மை மிக்க இளைஞர்‌ பலர்‌ அவ்வாற்று நீரில்‌ குதித்து எதிர்த்து நீந்தி ஆண்மைதோன்ற ஆடி மகிழ்வர்‌. அவர்கள்‌ அவ்வாறு ஆடி மகிழ்வதை அந்நாட்டு அரசன்‌ முதல்‌ அவ்வூர்‌ மக்கள்‌ வரை அனைவரும்‌, ஆற்றின்‌ கரைக்கண்‌ அமைந்த அரண்மிக்க அழகிய இடங்களில்‌ இருந்து கண்டு மகிழ்வர்‌. இவ்வாறு புனல்விழா நடைபெறும்‌ இடங்களில்‌ ஒன்று காவிரிப்பூம்பட்டினத்திற்கு அண்மையில்‌ உள்ள கழார்ப்‌ பெருந்துறை. இத்துறையில்‌ பாயும்‌ காவிரி ஆறு ஆற்றலோடு கரைகளை மோதி அழிக்கும்‌. ஆற்றுப்புனல்‌ மோதி மோதிக்‌ கரைகளை அழிப்பினும்‌, அழிவுறாமல்‌ வானுற வளர்ந்த மருத மரங்கள்‌ நிறைந்தது அத்துறை. இத்துறைக்குச்‌ சேரநாட்டுத்‌ தலைவன்‌ ஆட்டனத்தி புனல்‌ ஆடி புகழ்‌ சேர்த்தான்‌. – புலவர்‌ கா. கோவிந்தன்‌, சங்கத்தமிழ்ப்‌ புலவர்வரிசை

மதுரையில்‌ உள்ள தமுக்கம்‌ மைதானம்‌ யானைப்போர்‌ காண்பதற்கான திடலாகும்‌.

ஏறுதழுவியவரையே மகளிர்‌ விரும்பி மணந்தனர்

சோழநாட்டின்‌ பழைய தலைநகரமான உறந்தையூரில்‌ வீரக்கோழிகள்‌ சிறந்திருந்தமையால்‌ கோழியூர்‌ என்னும்‌ பெயரும்‌ அதற்கமைந்தது.

கர்ண மகாராசா ஒரு சிற்றரசன்தான்‌. அவனுக்கு அந்த நாட்டைக்‌ கொடையாகக்‌ கொடுத்தவன்‌ துரியோதனன்‌.

அணி

அணி என்றால்‌ அழகு என்பது பொருள்‌.

ஒரு பொருளின்‌ இயல்பை உள்ளது உள்ளவாறு கூறுவது இயல்பு நவிற்சியணி.

“தோயும்‌ வெண்டயிர்‌ மத்தொலி துள்ளவும்‌

ஆய வெள்வளை வாய்விட்‌ டரற்றவும்‌

தேயும்‌ நுண்ணிடை சென்று வணங்கவும்‌

ஆய மங்கையர்‌ அங்கை வருந்துவார்‌”.

இப்பாடலில்‌ தயிர்‌ கடையும்‌ ஆய மங்கையரின்‌ தன்மை உள்ளவாறே அழகுபடச்‌ சொல்லப்படுவதனைக்‌ காணலாம்‌.

 

ஒருபொருளின்‌ தன்மையை மிகைப்படுத்திக்‌ கூறுவது உயர்வு நவிற்சியணி.

உயரமான மலையை ‘விண்ணைத்‌ தொடும்‌ மலை’ என வருணித்தல்‌; உயரமான வைக்கோல்‌ போரை ‘வானை முட்டும்‌ வைக்கோல்போர்‌’ என உயர்த்திக்‌ கூறுதல்‌.

 

Categories