Samacheer Kalvi 8th Standard Tamil
October 12, 2023 2025-01-11 13:58Samacheer Kalvi 8th Standard Tamil
Samacheer Kalvi 8th Standard Tamil
நிலம் தீ நீர் வளி விசும்போடு ஐந்தும்
கலந்த மயக்கம் உலகம் ஆதலின்
இருதிணை ஐம்பால் இயல்நெறி வழாஅமைத்
திரிவுஇல் சொல்லொடு தழாஅல் வேண்டும் – தொல். 1579
மரபுநிலை திரிதல் செய்யுட்கு இல்லை
மரபுவழிப் பட்ட சொல்லின் ஆன – தொல். 1580
மரபு நிலை திரியின் பிறிது பிறிதாகும் – தொல். 1581
– தொல்காப்பியர்
தொல்காப்பியத்தின் ஆசிரியர் தொல்காப்பியர்.
தமிழில் நமக்குக் கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல் தொல்காப்பியம் ஆகும்.
இந்நூல் எழுத்து, சாெல், பொருள் என்னும் மூன்று அதிகாரங்களைக் கொண்டுள்ளது.
ஒவ்வொரு அதிகாரமும் ஒன்பது இயல்களைக் கொண்டது.
பொருளதிகாரத்தின் மரபியலில் உள்ள மூன்று நூற்பாக்கள் (91, 92, 93) இங்குத் தரப்பட்டுள்ளன.
செந்தமிழ் அந்தணர் என்று அழைக்கப்படும் இரா.இளங்குமரனார் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றியவர். நூலாசிரியர், இதழாசிரியர், உரையாசிரியர், தொகுப்பாசிரியர் எனப் பன்முகத் திறன் பெற்றவர். இலக்கண வரலாறு, தமிழிசை இயக்கம், தனித்தமிழ் இயக்கம் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.தேவநேயம் என்னும் நூலைத் தொகுத்துள்ளார். திருச்சிக்கு அருகில் அல்லூரில் திருவள்ளுவர் தவச்சாலையும், பாவாணர் நூலகமும் அமைத்துள்ளார். இவரது “தமிழின் தனிப்பெருஞ் சிறப்புகள்” என்னும் நூலிலிருந்து செய்திகள் தொகுத்து தரப்பட்டுள்ளன.
நன்செய், புன்செய் நிலம்
- நன்செய் நிலம் – நிறைந்த நீர்வளத்தோடு பயிர்கள் விளையும் நிலம்
- புன்செய் நிலம் – குறைந்த நீரால் பயிர்கள் விளையும் நிலம்
அமெரிக்காவில் பூஜேசவுண்ட் என்னுமிடத்தைச் சுற்றி வாழ்ந்தவர்கள் சுகுவாமிஷ் பழங்குடியினர். அவர்களின் தலைவராக விளங்கியவர் சியாட்டல்.இயற்கை வளங்கள் சிதையாமல் காக்கப்படவேண்டும் என்பதை வலியுறுத்தி அமெரிக்கக் குடியரசுத்தலைவருக்குக் கடிதம் ஒன்று எழுதினார்நாங்கள் பூமியைத் தாயாகவும் வானத்தைத் தந்தையாகவும் கருதக்கூடியவர்கள்.
காடர்கள்
தமிழ்நாடு, கேரள மாநிலங்களின் எல்லைக்கு அருகேயுள்ள பரம்பிக்குளம், ஆனைமலை போன்ற பகுதிகளில் காடர்கள் என்னும் பழங்குடியினர் வாழ்ந்து வருகின்றனர். ஆல்அலப்பு பேசும் மொழி இனமக்கள் ஆவர். காடர்கள் கதைகளை தொகுத்தவர்கள் மனிஷ் சாண்டி, மாதுரி ரமேஷ்
தலைக்குள் ஓர் உலகம்
மூளையின் இடது பாதிதான் பேச, எழுத, கணக்கிட தர்க்கரீதியில் சிந்திக்க உதவுகிறது. அறிவாற்றல், பிரச்சினைகளை அலசுதல், சதுரங்கம் போன்ற விளையாட்டுகளில் சிறப்பது இவற்றையெல்லாம் இடதுபகுதி பார்த்துக் கொள்கிறது. நம் மொழி அறிவும் இடது பகுதியைச் சார்ந்ததே.
மூளையின் வலப்பாகச் செயல் கவிதை எழுதுவது, படம் போடுவது, நடனம் ஆடுவது, நடிப்பது போன்ற கலை தொடர்பானவை எல்லாம் வலது பாதியில்தான். வலது பாதி சரியில்லையெனில் வீட்டுக்குப் போக வழி தெரியாமல் திண்டாடுவோம்.
கையை ஆட்டு, பரதநாட்டியம் ஆடு அடி, மூக்கைத் தொடு இவையெல்லாம் மேலிடத்திலிருந்து ஆணை வந்து செயல்படும் செய்கைகள்.
தும்மல், இருமல், சூடான பாத்திரத்தைத் தொட்டால் உடனே கையை விலக்கிக் கொள்வது மேலிடத்துக்குத் தகவல் போய் ஆணை வருவதற்குக் காத்திருக்க முடியாது. இந்த மாதிரி தன்னிச்சையான செயல்களுக்காகத்தான் முதுகுத்தண்டின் குறுக்கு இணைப்புகள் இருக்கின்றன.
நம் புலன்களிலிருந்து (கண், காது, தொண்டை) வரும் செய்திகளை மூளை தற்காலிகமாக ஓரிடத்தில் போட்டுவைத்துக் கொள்கிறது. அதிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட சில செய்திகள் குறுகிய கால நினைவுக்கு அனுப்பப்படுகின்றன
சுமார் தொண்ணூறு நிமிடங்களுக்கு ஒருமுறை நாம் எல்லோரும் மனநிலை மாறுகிறோம் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.
சராசரி மனிதன் தனது வாழ்நாளில் இருபது வருடம் தூங்குகிறான்.
சுஜாதாவின் இயற்பெயர் ரங்கராஜன் என்பதாகும். இவர் சிறுகதைகள், புதினங்கள், நாடகங்கள், அறிவியல் புனைவுக்கதைகள், திரைப்படக் கதை வசனம் எனப் பலதுறைகளில் பணியாற்றியுள்ளார். மின்னணு வாக்கு எந்திரம் உருவாக்கும் பணியில் இவர் முக்கியப் பங்கு ஆற்றியுள்ளார். என் இனிய எந்திரா, மீண்டும் ஜீனோ, ஸ்ரீரங்கத்துத் தேவதைகள், தூண்டில் கதைகள் உள்ளிட்ட பலநூல்களை எழுதியுள்ளார்.
கல்வி அழகே அழகு
கற்றோர்க்குக் கல்வி நலனே கலனல்லால்
மற்றோர் அணிகலம் வேண்டாவாம் – முற்ற
முழுமணிப் பூணுக்குப் பூண்வேண்டா யாரே
அழகுக்கு அழகுசெய் வார் – குமரகுருபரர்
குமரகுருபரர் பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்.இவர் தமிழ் மொழிக்கு பெருமை சேர்க்கும் பல சிற்றிலக்கியங்களை படைத்துள்ளார்.கந்தர் கலிவெண்பா, கயிலைக் கலம்பகம், சகலகலாவல்லி மாலை, மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் ஆகியன அவற்றுள் சிலவாகும். மக்களின் வாழ்வுக்கு தேவையான நீதிகளை சுட்டிக் காட்டுவதால் இந்நூல் நீதிநெறி விளக்கம் எனப் பெயர் பெற்றது.நீதிநெறி விளக்கத்தில் 102 வெண்பாக்கள் உள்ளது. இந்நூலின் பதின்மூன்றாம் பாடல் நமக்கு பாடப்பகுதியாகத் தரப்பட்டுள்ளது.
நீதிநெறி விளக்கத்தில்:
ஒளிரும் மணிகளால் செய்யப்பட்ட அணிகலனுக்கு மேலும் அழகூட்ட வேறு அணிகலன்கள் தேவையில்லை.கல்வி கற்றவர்க்கு அவர் கற்ற கல்வியே அழகு தரும். ஆகையால் அழகு சேர்க்கும் பிற அணிகலன்கள் அவருக்குத் தேவையில்லை.
அறியாமையை நீக்கி அறிவை விளக்குவது கல்வி. அக்கல்விப் பயிற்சிக்குரிய பருவம் இளமை என்பதை விளக்க வேண்டுவதில்லை. இது பற்றியே இளமையில் கல் என்னும் முதுமொழி பிறந்தது
“கல்வி என்பது வருவாய் தேடும் வழிமுறை அன்று. அது மெய்ம்மையைத் தேடவும், அறநெறியைப் பயிலவும் மனித ஆன்மாவுக்குப் பயிற்சி அளிக்கும் ஒரு நெறிமுறை ஆகும்” என்று கல்வி குறித்து விஜயலட்சுமி பண்டிட் கூறுகிறார். ஐ. நா. அவையின் முதல் பெண் தலைவர்.
ஏடன்று கல்வி, சிலர் எழுதும் பேசும் இயலன்று கல்வி, பலர்க் கெட்டா தென்னும் வீடன்று கல்வி, ஒரு தேர்வு தந்த விளைவன்று கல்வி, அது வளர்ச்சி வாயில் என கூறியவர் குலோத்துங்கள்.
அன்புடைமை
ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும்
பண்புடைமை என்னும் வழக்கு.
எல்லாரிடமும் அன்புள்ளவனாக வாழ்வது. உலகத்தோடு ஒத்து வாழும் குடும்பத்தில் பிறந்திருத்தல் இவை இரண்டும் பண்புடைமை என்னும் நல்ல வழிகளாகும். ஆன்ற குடிப்பிறத்தல் என்றால், சிறந்த குடி.
ஆலங்குடி சோமு திரைப்படப் பாடல் ஆசிரியராக புகழ் பெற்றவர். சிவகங்கை மாவட்டத்திலுள் ஆலங்குடி என்னும் ஊரில் பிறந்தவர்.
தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது பெற்றவர்.
வளம் பெருகுக:
ஆசிரியர் பெயர் அறிய முடியாத நூல்களுள் ஒன்று தகடூர் யாத்திரை. தகடூர் இன்று தர்மபுரி என்று அழைக்கப்படுகிறது. இந்நூல் முழுமையாகக் கிடைக்கவில்லை. இந்நூலின் சில பாடல்கள் புறத்திரட்டு என்னும் தொகுப்பு நூலில் கிடைக்கின்றன.
மழைச்சோறு:
பழந்தமிழர் வழிபாட்டு மரபுகள் என்னும் நூலில் உள்ள கொங்கு நாட்டு மழைச்சோற்று வழிபாடு என்னும் கட்டுரையிலிருந்து இப்பாடல் எடுக்கப்பட்டுள்ளது.இந்நூலின் பதிப்பாசிரியர் அ.கெளரன்
காலம் உடன் வரும்:
கன்னிவாடி சீரங்கராயன் சிவக்குமார் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த கன்னிவாடியில் பிறந்தவர்.
சிறந்த சிறுகதை, புதின எழுத்தாளர், நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியுள்ளார்.
சிறந்த சிறுகதைக்கான இலக்கியச் சிந்தனை விருது பெற்றவர்.
கன்னிவாடி, குணச்சித்திரங்கள், உப்புகடலைக் குடிக்கும் பூனை முதலிய நூல்களை எழுதியுள்ளார்.
விடுதலைத் திருநாள்
மீ.இராேசேந்திரன் என்னும் இயற்பெயர் மீரா கல்லூரி பேராசிரியராகப் பணியாற்றினார்
“அன்னம் விடு தூது” என்னும் இதழை நடத்தியவர்.
ஊசிகள், குக்கூ, மூன்றும் ஆறும், வா இந்தப் பக்கம், கோடையும் வசந்தமும் இவரது படைப்புகளாகும்
இவர் எழுதிய “கோடையும் வசந்தமும்” என்னும் நூலிலிருந்து ஒரு கவிதை இங்குத் தரப்பட்டுள்ளது.
300 ஆண்டுகள் நம்மை அடிமைப்படுத்திய அந்நியரின் ஆட்சியை இருண்ட ஆட்சி என்று மீரா குறிப்பிடுகிறார்
இன்பம் தரும் இந்த விடுதலைத் திருநாளைக் கொண்டாட வாய்ப்பளித்த, நம் தாய்நாட்டை தமிழால் வணங்குவோம் என்று கவிஞர் மீரா கூறுகிறார்.
பாரத ரத்னா எம்.ஜி. இராமச்சந்திரன்
எம்.ஜி.ஆருக்கு அழியாத புகழைத் தேடித் தந்த திட்டம் சத்துணவுத் திட்டம்.
காமராஜர் அறிமுகப்படுத்திய மதிய உணவுத்திட்டத்தை விரிவுபடுத்தியவர்.
எம்.ஜி.ஆரின் சமூக நலத்திட்டங்கள்
- ஏழைகளுக்கான வீட்டுவசதித் திட்டம்
- ஆதரவற்ற மகளிருக்குத் திருமண உதவித் திட்டம்
- தாய் சேய் நல இல்லங்கள்
- பற்பொடி வழங்கும் திட்டம்
- உழவர்களின் கடன் தள்ளுபடி
- நலிவடைந்த பிரிவைச் சேரந்த மாணவர்ககுப் பாடநூல் வழங்கும் திட்டம்
- முதியோர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம்
- வேலைவாய்ப்பு அற்றவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம்
எம்.ஜி.ஆரின் பெற்றோர் கேரள மாநிலத்தைத் சேர்ந்தவர்கள்.
எம்.ஜி.ஆர் இலங்கையில் உள்ள கண்டியில் 17.01.1917-ல் பிறந்தார்.
எம்.ஜி.ஆரின் பெற்றோர் கோபாலன் – சத்தியபாமா ஆவார்கள்.
1988-ம் ஆண்டு எம்.ஜி.ஆர் அவர்களின் இறப்பிற்கு பின்பு இந்திய அரசு பாரதரத்னா விருதினை வழங்கியது.
சென்னை பல்கலைக்கழகம் எம்.ஜி.ஆருக்கு டாக்டர் பட்டம் வழங்கியது.
தமிழக அரசு எம்.ஜி.ஆரின் நினைவினை போற்றும் வகையில் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக் கழகத்தை நிறுவியுள்ளது.
ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டை மதுரை மாநகரில் எம்.ஜி.ஆர் சிறப்பாக நடத்தினார்.
தஞ்சையில் ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தமிழ் பல்கலைக்கழகத்தை நிறுவினார்.
தந்தைப் பெரியார் உருவாக்கிய எழுத்துச் சீர்திருத்தங்கள் சிலவற்றை நடைமுறைப்படுத்தி தமிழ் எழுத்து முறையை எளிமைப்படுத்தினார்.
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா 2017 – 2018 தமிழக அரசால் கொண்டாடப்பட்டது.
எம்.ஜி.ஆர் பெயர் சூட்டப்பட்டுள்ள பேருந்து நிலையங்கள் சென்னை, மதுரை, திருநெல்வேலி.
இந்திய அரசு, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு மாற்றம் செய்த பெயர் புரட்சித்தலைவர் டாக்டர். எம்.ஜி.இராமச்சந்திரன் ரயில் நிலையம்.
மெய்ஞ்ஞான ஒளியே:
கருத்துகளைக் கட்டோடு அறுத்தவருக்கு
உள்ளிருக்கும் மெய்ஞ்ஞான ஒளியே பராபரமே!
காசை விரும்பிக் கலங்கிநின்று உன்பாத
ஆசை விரும்பாது அலைந்தேன் பராபரமே!
அறிவை அறிவோருக்கு ஆனந்த வெள்ளமதாய்க்
கரையறவே பொங்கும் கடலே பராபரமே!
அடக்கத் தாம்மாய ஐம்பொறியைக் கட்டிப்
படிக்கப் படிப்பு எனக்குப் பகராய் பராபரமே!
குணங்குடி மஸ்தான் சாகிபுவின் இயற்பெயர் சுல்தான் அப்துல்காதர். இவர் இளம் வயதிலேயே முற்றும் துறந்தவராக வாழ்ந்தார். சதுரகிரி, புறாமலை, நாகமலை முதலிய மலைப் பகுதிகளில் தவம் இயற்றி ஞானம் பெற்றார். எக்காளக் கண்ணி, மனோன்மணிக் கண்ணி, நந்தீசுவரக் கண்ணி முதலான நூல்களை இயற்றியுள்ளார். நம் பாடப்பகுதி குணங்குடியார் பாடற்கோவை என்னும் தொகுப்பில் இருந்து எடுக்கப்பட்டது.
மேலான பொருளையும் தம் தீய எண்ணங்களையும் அடியோடு அழித்தவர்கள், மனதில் உள்ளே இருக்கும் உண்மையான அறிவு ஒளி ஆனவனே! உன் திருவடிகளின் மேல் பற்று வைக்காமல் பணத்தின் மீது ஆசை வைத்தால் நான் மனம் கலங்கி அலைகின்றேன். நீ உண்மை அறிவினை உணர்ந்தவர்களின் உள்ளத்திற்குள் இன்பப்பொருக்காய் கரை கடந்து பொங்கும் கடலாக விளங்கி நிற்கின்றாள் மேலானபொருளே! ஐம்பொறிகளை அடக்கி ஆள்வது மிகவும் அரியசெயலாகும். அப்பொறிகளின் இயல்பை உணர்ந்து நல்வழிப்படுத்தும் அறிவினை எனக்குத் தந்து அருள்செய்வாயாக.
அயோத்திதாசர்
அயோத்திதாசர் 20.05.1845-ல் சென்னையில் பிறந்தார்.
அயோத்திதாசரின் இயற்பெயர் காத்தவராயன்.
அயோத்திதாசரின் ஆசிரியர் பண்டிதர்.
அயோத்திதாசர் தென்னிந்திய சமூகச்சீர்திருத்தத்தின் தந்தை என்று போற்றப்படுகிறார்.
தந்தை பெரியாருக்கும் அண்ணல் அம்பேத்கரும் முன்னோடியாகத் திகழ்ந்தவர் அயோத்திதாசர் ஆவார்.
சென்னையில் 1907-ல் ஒரு பைசாத்தமிழன் என்ற வார இதழை தொடங்கினார்.
அயோத்திதாசர் பதிப்பித்த நூல்கள் போகர் எழுநூறு, அகத்தியர் இருநூறு, சிமிட்டு இரத்தினச் சுருக்கம், பாலவாகடம்.
அயோத்திதாசர் எழுதிய நூல்கள் புத்தரது ஆதிவேதம், இந்திரர் தேச சரித்திரம், விவாக விளக்கம், புத்தர் சரித்திரப்பா முதலியன. திருவள்ளுவர், ஒளவையார்
ஆகியோரின் படைப்புகளுக் பெளத்தக் கோட்பாடுகளின் அடிப்படையில் புதிய விளக்கங்களை எழுதியுள்ளார்.
என் பகுத்தறிவுப் பிரச்சாரத்திற்கும் சீர்திருத்தக் கருத்துகளுக்கும் முன்னோடிகளாகத் திகழ்ந்தவர்கள் பண்டிதமணி அயோத்திதாசரும்,
தங்கவயல் அப்பாதுரையாரும் ஆவார்கள். – தந்தை பெரியார்
அயோத்திதாசரின் தமது கொள்கைகளை வலியுறுத்தவும், ஒடுக்கப்பட்டோர் உரிமைகளை பாதுகாக்கவும் 1892-ல் திராவிட மகாஜன சங்கம் என்ற அமைப்பினை தோற்றுவித்தார்.
- அயோத்திதாசரின் கொள்கைகளை வலியுறுத்தவும்
- ஒடுக்கபட்டோர் நலன் பாதுகாக்கவும்
- சாலைகள் அமைக்கவும்,
- கால்வாய்களை பராமரிக்கவும்,
- குடிகளின் பாதுகாப்புக் காவல்துறையினை நியமதித்தல்,
- பொது மருத்துவமனைகள் அமைத்தல்,
- சிறார்கள் தோறும் கல்விகூடங்கள் ஏற்படுத்துதல்
ஆகியவற்றிற்காக திராவிட மகாஜன சங்கம் போராடியது
கல்வியோடு கற்க வேண்டியவைகளாக அயோத்திதாசர் கூறுவது
- கைத்தொழில்
- வேளாண்மை
- தையல்
- மரம் வளர்த்தல்
சென்னை தாம்பரத்தில் உள்ள சித்த ஆராய்ச்சி மையத்துடன் இணைந்த மருத்துவமனைக்கு அயோத்திதாச, பண்டிதர் மருத்துவமனை என்று பெயர்சூட்டப்பட்டுள்ளது.
புதுமைபித்தனின்:
- சிறுகதை மன்னன் என்று போற்றப்படும் புதுமைபித்தனின் இயற்பெயர் சொ. விருத்தாச்சலம்.
- சிறுகதைகளில் புதுப்புது உத்திகளைக் கையாண்டவர் என்று இவரைத் திறனாய்வாளர்கள் போற்றுகின்றனர்.
- நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளைப் படைத்துள்ளார்,
- சில திரைப்படங்களுக்கு கதை, உரையாடலும் எழுதியுள்ளார்.
- கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும், சாபவிமோசனம், பொன்னகரம், ஒரு நாள் கழித்து போன்றவை இவரது சிறுகதைகளுள் புகழ் பெற்றவை
மகாணி, வீசம் முற்காலத்தில் வழக்கிலிருந்து அளவைப் பெயர்கள் ஆகும்.
அணா, சல்லி, துட்டு என்பது அக்காலத்தில் வழக்கதில் இருந்த நாணயப் பெயர்கள் ஆகும். பதினாறு அணாக்கள் கொண்டது ஒரு ரூபாய். அரை ரூபாயை எட்டணா என்றும், கால் ரூபாயை நாலணா என்றும் கூறுகின்றன
உயிர்க்குணங்கள்
இறையரசனின் இயற்பெயர் சேசுராசா என்பதாகும்.
கல்லூரி ஒன்றில் தமிழப்பேராசிரியராகப் பணிபுரிந்தார்
ஆண்டாள் இயற்றிய திருப்பாவையைத் தழுவி, கன்னிப்பாவை என்னும் நூலை எழுதியுள்ளார்.
மார்கழி மாதம் பொழுது விடியும் முன்பே, பெண்கள் தூக்கத்திலிருந்து எழுந்து பிற பெண்களை எழுப்பிக்கொண்டு, ஆற்றுக்குச் சென்று நீராடி இறைவனை வழிபடும் வழக்கம் பாவை நோன்பு ஆகும்.
திருமாலை வழிபடச் செல்லும் பெண்கள் பிற பெண்கள் எழுப்புவதாக ஆண்டாள் பாடிய நூல் திருப்பாவை ஆகும். ஆண்டாள் இந்நூலை பாடியுள்ளார்.
சிவபெருமானை வழிபடச் செல்லும் பெண்கள் பிற பெண்களை எழுப்புவதாகப் பாடப்பட்ட நூல் திருவெம்பாவை ஆகும். இந்நூலை பாடியவர் மாணிக்கவாசகர்.
பால் மனம்
கோமகளின் இயற்பெயர் இராஜலட்சுமி;
சிறுகதைகள், குறும்புதினங்கள், வானொலி, தொலைக்காட்சி நாடகங்கள் முதலியவற்றை எழுதியுள்ளார்.
இவரது அன்னை பூமி என்னும் புதினம் தமிழ்நாடு அரசின் விருதினைப் பெற்றது.
தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தமிழ் அன்னை விருதினையும் பெற்றுள்ளார்.
உயிர் அழுதாய், நிலாக்கால நட்சித்திரங்கள், அன்பின் சிதறல் உள்ளிட்ட பல நூல்களை எழுதியுள்ளார்.
பால் மனம் எனும் இக்கதை அ.வெண்ணிலா தொகுத்த மீதமிருக்கும் சொற்கள் எனும் நூலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது.
க. சச்சிதானந்தன்
(தமிழ்ப்பசி)
பொருள் : எனக்குப் பாராட்டி அளிக்கப்படும் பொற்குவியல்களும் வியந்து போற்றும் புகழுரைகளும் வேண்டா; அரசனின் மணிமுடியும் கண்டாரைக் கவர்ந்திழுக்கும் மாரனின் அழகும் வேண்டா. எனக்கு, என்றும் இளமை குறையாத தமிழும், தமிழுக்கு உயிராக விளங்கும் கம்பன் கவிதைகளும் வேண்டும். கனிச்சுவைமிக்க நூல்களை அள்ளிக் கற்றல் வேண்டும். அவற்றைப் படித்துத் தமிழ்ப்பசி ஆறிடல் வேண்டும்.
சொற்பொருள் : குவை- குவியல் ; மாரன் – மன்மதன்.
இயற்பெயர் :க.சச்சிதானந்தன்
ஊர் :இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பருத்தித்துறை
பணி :ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றினார்.
புலமை :தமிழ், ஆங்கிலம், சமற்கிருதம் ஆகிய மும்மொழிகளில் ஆழ்ந்த புலமை பெற்றிருந்தார்.
படைப்புகள் :ஆனந்தத்தேன் (கவிதைத்தொகுதி – 1954); அன்னபூரணி (புதினம்); யாழ்ப்பாணக் காவியம்.
சிறப்பு :மகாவித்துவான் நவநீதகிருட்டின பாரதியாரின் மாணவர். இவர்தம் பாடல்களில் கம்பனின் மிடுக்கையும் பாரதியின் சினப்போக்கையும் ஒருமித்துக் காணலாம்.
வாய்மையும் அறமும் பிறர்துயர் களையும்
வண்மையும் தியாகமும் இணைதீர்
தூய்மையும் ஒழுங்கின் கலியினில் வளர்ந்து
துலங்கிடத் தீமையும் துயரும்
சேய்மையுற் றகலத் தோன்றிய கருணைச்
செங்கதி ரவனெனத் தகைய
தாய்மையன் பிறனை யீன்றபா ரதத்தாய்
தாள்மலர் பணிவதே தவமாம். – அசலாம்பிகை அம்மையார்
பொருள் : உண்மை, அறம், பிறர் துன்பம் நீக்கும் திறன், தியாகம், இணையற்ற ஒழுக்கம் ஆகியவற்றை இக்கலிகாலத்தில் வளர்ந்து விளங்கச் செய்பவன்; தீமை, துன்பம் இவற்றை அகன்றோடச் செய்யும் கருணைக் கதிரவன் போன்றவன்; தாய்மையுள்ளம் கொண்டவன்; இத்தகைய தன்மைகள் கொண்ட மகாத்மா காந்தியை ஈன்றெடுத்த பாரதத்தாயின் மலரடிகளைப் போற்றி வணங்குவதே பெரும்பேறாகும்.
சொற்பொருள் : வாய்மை – உண்மை; களையும் – நீக்கும்; வண்மை – வள்ளல் தன்மை; துலங்குதல் – விளங்குதல்; சேய்மை – தொலைவு; தவம் – பெரும்பேறு.
பிரித்தறிதல் : தாய்மையன் பிறனை – தாய்மை + அன்பின் + தனை.
ஆசிரியர் குறிப்பு
பெயர் : அசலாம்பிகை அம்மையார்
பிறந்த ஊர் : திண்டிவனத்திற்கு அருகில் உள்ள இரட்டணை.
இயற்றிய நூல்கள் : ஆத்திசூடி வெண்பா, திலகர் புராணம், குழந்தை சுவாமிகள் பதிகம்.
சிறப்பு : அசலாம்பிகை அம்மையார் சிறந்த பேச்சாளர். இவரை இக்கால ஒளவையார் என்று திரு.வி.க. பாராட்டுவார். இவர் பலகாலம் திருப்பாதிரிப்புலியூரில் (கடலூர்) வாழ்ந்தார். இறுதிக்காலத்தில் சில ஆண்டு வடலூரில் வாழ்ந்தார். அப்போது, நானூற்று ஒன்பது பாடல்களைக்கொண்ட இராமலிங்க சுவாமிகள் சரிதம் என்னும் செய்யுள் நூலை இயற்றினார்.
நூல் குறிப்பு : காந்திபுராணம், ஈராயிரத்து முப்பத்து நான்கு பாடல்களைக் கொண்டது. இந்நூல் காந்தியடிகளைப் பாட்டுடைத் தலைவராகக்கொண்டு பாடப்பெற்றது.
உலகிலேயே அதிக அளவு மழைபெறும் இடம் சிரபுஞ்சி – அசாம்.
அக்டோபர் முதல் வாரத்தை அரசு வனவிலங்கு வாரமாகக் கொண்டாடி வருகிறது.
வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டம் 1972ஆம் ஆண்டு இயற்றப்பட்டது. இச்சட்டம், வனவிலங்குகளை வேட்டையாடுவதனைத் தடுக்கிறது.
நமது நாட்டில் 17 வனவிலங்குப் பாதுகாப்பு இடங்களும், 66 தேசிய வனவிலங்குப் பூங்காக்களும், 368 புகலிடங்களும் அமைந்துள்ளன.
ஒவ்வோராண்டும் அக்டோபர்த் திங்கள் நான்காம் நாள் உலக வனவிலங்கு நாள் கொண்டாடப்படு வருகிறது.
அருங்காட்சியகம் என்பது அரிதான பழம்பொருள்களைத் தொகுத்து வைத்துள்ள இடமாகும்.
கி.பி. 1851ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது சென்னை எழும்பூரில் அருங்காட்சியகம்.
தமிழ்நாட்டின் தேசியப் பறவை – மரகதப் புறா
வில்லிபாரதம்
வான்பெற்ற நதிகமழ்தாள் வணங்கப் பெற்றேன்
மதிபெற்ற திருவுளத்தால் மதிக்கப் பெற்றேன்
தேன்பெற்ற துழாய் அலங்கல் களப மார்பும்
திருப்புயமும் தைவந்து தீண்டப் பெற்றேன்
ஊன்பெற்ற பகழியினால் அழிந்து வீழ்ந்தும்
உணர்வுடன்நின் திருநாமம் உரைக்கப் பெற்றேன்
யான்பெற்ற பெருந்தவப்பே(று) என்னை அன்றி
இருநிலத்தில் பிறந்தோரில் யார்பெற் றாரே. – வில்லிபுத்தூரார்
பொருள்: “அன்று உலகினை அளப்பதற்கு நீ திருவடியைத் தூக்கியபோது, நான்முகன் உன் திருவடியைத் தன் கமண்டல நீரால் வழிபாடு செய்தான். அதுவே ஆகாய கங்கையாகியது. அத்தகைய திருவடிமலரை யான் வணங்கும் பேறுபெற்றேன். குளிர்ச்சியான மதியினைத் தோற்றுவித்த உன் திருவுள்ளத்தால் ஒருபொருளாகக் கருதப்பெற்று யான் உயர்வுபெற்றேன். தேன்கமழும் துளசி மாலையும் சந்தனமும் அணியப்பெற்ற நின் திருத்தோள்களால் என்னைத் தழுவியதனால் பேரின்பம் கொண்டேன். அருச்சுனனுடைய கூரிய அம்பினால் துளைக்கப்பெற்று வலிமையிழந்து நான் வாடினாலும் உணர்வு உடையவனாகி உன்னுடைய திருப்பெயரை உரைக்கும் பேறுபேற்றேன். நான் பெற்ற பெரும்பேறு இவ்வுலகில் யார்தாம் பெற்றார் ?” எனக் கூறிக் கன்னன், கண்ணனைப் போற்றி வணங்கினான்.
சொற்பொருள்: வான்பெற்ற நதி – கங்கையாறு; துழாய் அலங்கல் – துளசிமாலை; களபம் – சந்தனம்; புயம் – தோள்; தைவந்து – தொட்டுத்தடவி; ஊன் – தசை; பகழி – அம்பு; நாமம் – பெயர்; இருநிலம் – பெரிய உலகம்.
ஆசிரியர் குறிப்பு
பெயர் : வில்லிபுத்தூரார்
தந்தையார் : வீரராகவர்
ஆதரித்தவர் : வக்கபாகையை ஆண்ட வரபதி ஆட்கொண்டான்
காலம் : பதினான்காம் நூற்றாண்டு
நூல் குறிப்பு : வில்லிபாரதம் பத்துப் பருவம் கொண்டது. நாலாயிரத்து முந்நூற்றைம்பது விருத்தப் பாடலால் ஆனது. இப்பாடல், வில்லிபாரதத்தில் எட்டாம் பருவமாகிய கன்னபருவத்தில் இடம்பெற்றுள்ளது.
வ. சுப. மா., எனச் சுருக்கமாக அழைக்கப்படும் வயிரவன்கோவில் சுப்பிரமணியனார் மகனார் மாணிக்கம் என்பார் பல்லாண்டுகளாகத் தமிழுக்கு நிலைத்த தொண்டாற்றியவர்.
முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் – வருகைப் பருவம்
உலகு குளிர எமது மதியில் ஒழுகும் அமுத கிரணமே
உருகும் அடியர் இதய நெகிழ உணர்வில் எழுநல் உதயமே
கலையும் நிறையும் அறிவு முதிர முதிரு மதுர நறவமே
கழுவு துகளர் முழுக நெடிய கருணை பெருகு சலதியே
அலகில் புவனம் முடியும் வெளியில் அளியும் ஒளியின் நிலயமே
அறிவுள் அறிவை அறியும் அவரும் அறிய அரிய பிரமமே
மலையின் மகள்கண் மணியை அனைய மதலை வருக வருகவே
வளமை தழுவு பருதி புரியின் மருவு குமரன் வருகவே. – குமரகுருபரர்
பொருள் : உலகம் குளிரும்படி எமது அறிவில் ஒளிவீசும் முழுநிலவே! அடியார்களின் உள்ளம் நெகிழ அவர் அறிவில் தோன்றும் கதிரவனே ! நூல்களால் நிறைந்த அறிவுணர்வும் முதிருமாறு விளைந்துள்ள இனிய தேனே! குற்றமற்ற ஞானியர் விரும்பும் கருணைக் கடலே! அளவிலா உலகங்கள் அனைத்தும் முடிகின்ற வெளியிடத்துத் தோன்றும் ஒளியின் இருப்பிடமே! அறிவின் உள்ளுணர்வை அறியவல்ல ஞானிகளும் அறிவதற்கு அரிதான முழுமுதற் பொருளே! மலைமகளின் கண்மணியொத்த முத்துக்குமரப் பெருமானே! வளங்கள் பொருந்திய வைத்தீசுவரன் கோவிலில் எழுந்தருளியுள்ள குமர வள்ளலே! வருக வருகவே!
சொற்பொருள் : மதி – அறிவு; அமுதகிரணம் – குளிர்ச்சியான ஒளி; உதயம் – கதிரவன்; மதுரம் – இனிமை; நறவம் – தேன்; கழுவு துகளர் – குற்றமற்றவர்; சலதி – கடல்; அலகு இல் – அளவில்லாத; புவனம் – உலகம்; மதலை – குழந்தை; பருதிபுரி – கதிரவன் வழிபட்ட இடம் (வைத்தீசுவரன் கோவில்).
ஆசிரியர் குறிப்பு
பெயர் : குமரகுருபரர்
பெற்றோர் : சண்முகசிகாமணிக் கவிராயர் – சிவகாம சுந்தரியம்மை
ஊர் : திருவைகுண்டம்
இயற்றிய நூல்கள் : கந்தர் கலிவெண்பா, மீனாட்சி அம்மை பிள்ளைத்தமிழ், மதுரைக் கலம்பகம், சகலகலாவல்லி மாலை, திருவாரூர் மும்மணிக்கோவை, நீதிநெறி விளக்கம் முதலியன.
சிறப்பு : தமிழ்,வடமொழி, இந்துத்தானி ஆகிய மொழிகளில் புலமை மிக்கவர். திருப்பனந்தாளிலும் காசியிலும் தம்பெயரால் மடம் நிறுவி உள்ளார்.
இறப்பு : காசியில் இறைவனது திருவடியடைந்தார்.
காலம் : பதினேழாம் நூற்றாண்டு.
நூற்குறிப்பு : தொண்ணூற்றாறு சிற்றிலக்கிய வகைகள் ஒன்று பிள்ளைத்தமிழ். இறைவனையோ நல்லாரையோ பாட்டுடைத் தலைவராகக்கொண்டு அவரைக் குழந்தையாகக் கருதிப் பாடப்பெறுவது பிள்ளைத்தமிழ். பத்துப் பருவங்கள் அமைத்துப் பருவத்திற்குப் பத்துப் பாடலென நூறு பாடலால் பாட்டுடைத் தலைவரின் செயற்கரிய செயல்களை எடுத்து இயம்புவது பிள்ளைத்தமிழ்.
இஃது ஆண்பாற் பிள்ளைத்தமிழ், பெண்பாற் பிள்ளைத்தமிழ் என இருவகைப்படும். பத்துப் பருவங்களில் காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி ஆகிய ஏழு பருவங்களும் இருபாற் பிள்ளைத்தமிழுக்கும் பொதுவானவை. இறுதி மூன்று பருவங்களான சிற்றில், சிறுபறை, சிறுதேர் ஆண்பாலுக்கும், அம்மானை, கழங்கு (நீராடல்), ஊசல் என்பன பெண்பாலுக்கும் உரியன.
புள்ளிருக்குவேளூரில் (வைத்தீசுவரன் கோவில்) எழுந்தருளியிருக்கும் முருகப்பெருமானின் பெயர் முத்துக்குமாரசுவாமி. அவர்மீது பாடப்பட்டமையால் இது முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் எனப் பெயர் பெற்றது.
நூலின் ஆறாவது பருவம் வருகை; குழந்தையின் பதின்மூன்றாம் திங்களில் நிகழ்வது. தளர்நடையிட்டு வரும் குழந்தையின் சிறப்புகளை எடுத்துக்கூறி, அருகில் வருக வருக என வாய்குளிர, மனங்குளிர அழைக்கும் பாடல்களைக் கொண்டதாய் இப்பருவம் அமைந்துள்ளது.
தொல்காப்பியம் “எள்ளல், இளமை, அறியாமை, மடமை”ஆகிய நான்கு காரணங்களால் நகைச்சுவை தோன்றும் என்கிறது.
நகல்வல்லர் அல்லார்க்கு மாயிரு ஞாலம்
பகலும்பாற் பட்டன் றிருள். – குறள், 999
என நகைச்சுவையுணர்வு இல்லாதவர்க்குப் பகலும் இருளாகத் தோன்றும் என்கின்றார் வள்ளுவர்.
“அயலான் வீட்டில் அறையில் நடப்பதை
எட்டிப் பார்க்கா திருப்ப தற்கே
இயற்கை யன்னை இப்பெண் கட்கெல்லாம்
குட்டைக் கழுத்தைக் கொடுத்தான்; உனக்கோ
கறையொன் றில்லாக் கலாப மயிலே!
நிமிர்ந்து நிற்க நீள் கழுத்து அளித்தான்.”
கவிஞர் பாரதிதாசன் மயிலின் கழுத்து நீண்டு இருப்பதனை நகைச்சுவையாக விளக்குகிறார். “பெண்களின் கழுத்து நீண்டிருந்தால், அண்டைவீட்டு அறையிலே நடப்பதனை ஆர்வத்தோடு பார்ப்பார்களாம்; மயில் அப்படிப் பார்க்காதாம்” எனக் கூறுகிறார்.
நாஞ்சில் நாட்டுக் கவிஞர் தேசிக விநாயகனாரின், “மருமக்கள்வழி மான்மியம்” ஒரு நகைச்சுவைக் களஞ்சியம்.
சேரமான் கணைக்கால் இரும்பொறைக்கும் – சோழன் கோச்செங்கணானுக்கும் நடைபெற்ற போரில், சேரமான் கணைக்கால் இரும்பொறை தோல்வியுறுகின்றான்.
