Samacheer Kalvi 9th Standard
December 30, 2023 2025-04-14 12:24Samacheer Kalvi 9th Standard
Samacheer Kalvi 9th Standard
சங்க இலக்கியத்தில் காணப்படும் கடற்கலனுக்குரிய சொல் கிரேக்க மொழியிலும் மாற்றம் பெற்றுள்ளது.
தமிழ் | கிரேக்கம் |
எறிதிரை | எறுதிரான் |
கலன் | கலயுகோய் |
நீர் | நீரியோஸ்/நீரிய |
நாவாய் | நாயு |
தோணி | தோணீஸ் |
- திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் – ராபர்ட் கால்டுவெல்
- மொழிபெயர்ப்பும் ஒலிபெயர்ப்பும், தமிழ்நடைக் கையேடு – மணவை முஸ்தபா
- மாணவர்களுக்கான தமிழ் – என். சொக்கன்
- உலகத் தாய்மொழி நாள் (பிப்ரவரி 21)
நீரின்று அமையாது உலகு:
உலக சுற்றுச்சூழல் நாள் – ஜூன்-5
மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் – இளங்கோவடிகள்
நீரின்று அமையாது உலகு – திருவள்ளுவர்
மழை உழவுக்கு உதவுகிறது. விதைத்த விதை ஆயிரமாகப் பெருகிறது. நிலமும், மரமும் உயிர்கள் நோயின்றி வாழ வேண்டும் என்ற நோக்கில் வளர்கின்றன – மாங்குடி மருதனார்
உணவெனப்படுவது நிலத்தோடு நீரே – (புறநானூறு 18)
மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்
காடும் உடையது அரண் – திருவள்ளுவர்
குள்ளக் குளிரக் குடைந்து நீராடி – ஆண்டாள்
தெய்வச்சிலைகளைக் குளி(ர்)க்க வைப்பதை திருமஞ்சனம் ஆடல்.
பிள்ளைத்தமிழில் சிற்றிலக்கியத்தில் – நீராடல் பருவம்.
கல்லணை
கரிகாலனின் விரிவான வேளாண்மைத் திட்டத்திற்கு சான்று கல்லணை.
கல்லணையின் நீளம் – 1080 அடி
கல்லணையின் அகலம் – 40 அடி முதல் 60 அடி
கல்லணையின் உயரம் – 15 முதல் 18 அடி
இந்திய நீர் பாசனத்தின் தந்தை சர் ஆர்தர் காட்டன் என்ற ஆங்கிலப் பொறியாளர்.
1829-ல் காவிரிப் பாசனப் பகுதிக்கு தனிப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.
கல்லணைக்கு கிராண்ட் அணைக்கட் என்ற பெயரை சூட்டியனார்
கல்லணையின் கட்டுமான உத்திகளை கொண்டு 1873-ல் கேதாவரி ஆற்றின் குறுக்கே தெளலீஸ்வரம் அணையைக் கட்டினார்.
முல்லைப் பெரியாறு அணை
தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகியவற்றின் விவசாயத்திற்கும் குடிநீருக்கும் உதவும் முல்லைப் பெரியாறு அணையைக் கட்டியவர் ஜான் பென்னி குவிக்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் வைகை வடிநிலப் பரப்பில் மழை பொய்த்துப் பஞ்சம் ஏற்பட்டதால் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர். மேற்குத் தொடர்ச்சி மலையில் பெய்யும் மழைநீர் பெரியாற்றில் ஓடி வீணாகக் கடலில் கலப்பதை அறிந்த இவர், அங்கு ஓர் அணை கட்ட முடிவு செய்தார். கட்டுமானத்தின் போது இடையில் கூடுதல் நிதி ஒதுக்க ஆங்கிலேய அரசு மறுத்தபோது தனது சொத்துகளை விற்று அணையைக் கட்டி முடித்தார். அவருக்கு நன்றி செலுத்தும் விதமாக அப்பகுதி மக்கள் தம் குழந்தைகளுக்குப் பென்னி குவிக் எனப் பெயர் சூட்டும் வழக்கம் இன்றும் உள்ளது.
நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருகிற நாடுகல்
- அமெரிக்கா
- இந்தியா
- பாகிஸ்தான்
- சீனா
நீர்நிலைப் பெயர்கள் | விளக்கம் |
அகழி | கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண் |
அருவி | மலைமுகட்டுத் தேக்கநீர் குத்திட்டுக் குதிப்பது |
ஆழிக்கிணறு | கடலருகே தோண்டிக் கட்டிய கிணறு |
ஆறு | இரு கரைகளுக்கிடையே ஓடும் நீர்ப்பரப்பு |
இலஞ்சி | பலவகைக்கும் பயன்படும் நீர்த்தேக்கம் |
உறைக்கிணறு | மணற்பாங்கான இடத்தில் தோண்டிச் சுடுமண் வளையமிட்ட கிணறு |
ஊருணி | மக்கள் பருகுநீர் உள்ள நீர்நிலை |
ஊற்று | அடியிலிருந்து நீர் ஊறுவது |
எரி | வேளாண்மைப் பாசன நீர்த்தேக்கம். |
கட்டுக்கிணறு | சரளை நிலத்தில் தோண்டி கல், செங்கற்களால் அகச்சுவர் கட்டிய கிணறு |
கடல் | அலைகளைக் கொண்ட உப்புநீர்ப் பெரும்பரப்பு |
கண்மாய் | பாண்டி மண்டலத்தில் ஏரிக்கு வழங்கப்படும் பெயர் |
குண்டம் | சிறியதாய் அமைந்த குளிக்கும் நீர்நிலை |
குண்டு | குளிப்பதற்கேற்ற சிறுகுளம் |
குமிழிஊற்று | அடிநிலத்து நீர், நிலமட்டத்திற்குக் கொப்புளித்து வரும் ஊற்று |
கூவல் | உவர்மண் நிலத்தில் தோண்டப்படும் நீர்நிலை |
கேணி | அகலமும் ஆழமும் உள்ள பெருங்கிணறு |
புனற்குளம் | நீர்வரத்து மடையின்றி மழைநீரையே கொண்டுள்ள குளிக்கும் நீர்நிலை |
பூட்டைக் கிணறு | கமலை நீர்பாய்ச்சும் அமைப்புள்ள கிணறு |
பட்ட மரம்:
- கவிஞர் தமிழ் ஒளி (1924–1965) புதுவையில் பிறந்தவர்.
- இயற்பெயர் விஜயரங்கம்
- பாரதியாரின் வழித்தோன்றலாகவும் பாரதிதானின் மாணவராகவும் விளங்கியவர்.
- மக்களுக்காகப் பல படைப்புகளை உருவாக்கியவர்.
- நிலைபெற்ற சிலை, வீராயி, கவிஞனின் காதல், மே தின வருக, கண்ணப்பன் கிளிகள், குருவிப்பட்டி, தமிழர் சமுதாயம், மாதவி காவியம் முதலானவை இவரின் படைப்புகளுள் குறிப்பிடத்தக்கவை.
அறிவை விரிவு செய்
- அழகின் சிரிப்பு – பாவேந்தர் பாரதிதாசன்
- தண்ணீர் தண்ணீர் – கோமல் சுவாமிநாதன்
- தண்ணீர் தேசம் – வைரமுத்து
- வாய்க்கால் மீன்கள் – வெ. இறையன்பு
- மழைக்காலமும் குயிலோசையும் – மா. கிருஷ்ணன்
“மொட்டைக் கிளையொடு
நின்று தினம்பெரு
மூச்சு விடும்மரமே !” – -கவிஞர் தமிழ்ஒளி
பட்டிமண்டபம் என்ற சொல் பயின்று வரும் இலக்கியங்கள் அடிகள்.
பட்டிமண்டபம் என்பதுதான் இலக்கியவழக்கு. ஆனால் இன்று நடைமுறையில் பலரும் பட்டிமன்றம் என்றே குறிப்பிடுகிறார்கள்
சிலப்பதிகாரம் “மகத தன்நாட்டு வாளவாய் வேந்தன், பகைப்புறத்துக் கொடுத்த பட்டிமண்டபம்” (காதை 5, அடி 102)
மணிமேகலை “பட்டிமண்டபத்துப் பாங்கு அறிந்து ஏறுமின்” (காதை 1, அடி 16)
திருவாசகம் “பட்டிமண்டபம் ஏற்றினை, ஏற்றினை; எட்டினோடு இரண்டும் அறியேனையே” (சதகம் 41)
கம்பராமாயணம் “பன்ன அரும் கலைதெரி பட்டிமண்டபம்” (பாலகாண்டம், நகரப் படலம் 154)
அறிவை விரிவு செய்
- தமிழர் நாகரிகமும் பண்பாடும் – அ. தட்சிணாமூர்த்தி
- தமிழக வரலாறும் தமிழர் பண்பாடும் – மா. இராசமாணிக்கனார்
- தமிழ்ச் செவ்வியல் இலக்கியத்தில் பறவை கள் – க. ரத்னம்
- தொல்லியல் நோக்கில் சங்க காலம் – கா. ராஜன்
- தமிழர் சால்பு – சு. வித்யானந்தன