Blog

தமிழர் வணிகம்

Tamilar Vanigam
Old Syllabus

தமிழர் வணிகம்

தமிழர் வணிகம்
தமிழ்நாட்டின்‌ தலைசிறந்த துறைமுகமாகப்பூம்புகார்‌ விளங்கியது.
துறைமுக நகரங்கள்‌ பட்டினம் என்றும்‌ பாக்கம்‌ என்றும்‌ குறிக்கப்பட்டன.
“பொன்னொடு வந்து கறியொடு பெயரும்”  – அகநானூறு – 149
“பொன்னுடன் வந்து மிளகுடன் செல்லும் வளம்”
“தம் நாட்டு விளைந்த வெண்ணெல் தந்து
பிற நாட்டு உப்பின் கொள்ளை சாற்றி
நெடு நெறி ஒழுகை நிலவு மணல் நீந்தி
அவண் உறை முனிந்த ஒக்கலொடு புலம் பெயர்ந்து
உமணர் போகலும்”  – நற்றிணை -183
தம் நாட்டில் விளைந்த நெல்லைத் தந்து, பிற நாட்டில் விளைந்த உப்பைப் பண்டமாற்றுச் செய்துகொண்டு
அவரோ வாரார் முல்லையும் பூத்தன
பறியுடைக் கையர் மறியினத் தொழியப்
பாலொடு வந்து கூழொடு பெயரும்
யாடுடை இடைமகன் சென்னிச்
சூடிய வெல்லாம் சிறுபசு முகையே”குறுந்தொகை-221
 ஆடுகளை மேய்க்கும் இடையர்கள் மாலையில் பாலைக் கறந்து கொண்டுவந்து வீடுகளில் கொடுத்துவிட்டு, உணவைப் பெற்றுக்கொண்டு சென்று இரவு நேரத்தில் ஆட்டு மந்தையுடன் தங்குவது வழக்கம்.
வணிகத்தில்‌ நேர்மை
அக்கால வணிகர்கள்‌ நேர்மையாகத்‌ தொழில்‌ செய்தனர்‌ என்பதைத்‌ தமிழ்‌ இலக்கியங்கள்‌ எடுத்துக்காட்டுகின்றன.
“வாணிகம்‌ செய்வார்க்கு வாணிகம்‌ பேணிப்‌
பிறவும்‌ தமபோல்‌ செயின்‌” – திருக்குறள்‌ – 120
என்னும்‌ திருக்குறள்‌ வணிகரின்‌ நேர்மையைப்‌ பற்றிக்‌ கூறுகிறது.
“கொள்வதும்‌ மிகை கொளாது
கொடுப்பதும்‌ குறைபடாது”பட்டினப்பாலை
வணிகர்கள்‌ பொருளை வாங்கும்பொழுது உரிய அளவைவிட அதிகமாக வாங்க மாட்டார்கள்‌. பிறருக்குக்‌ கொடுக்கும்‌ பொழுது அளவைக்‌ குறைத்துக்‌ கொடுக்கமாட்டார்கள்‌.
“நடுவு நின்ற நன்னெஞ்சினோர்” என்று பட்டினப்பாலை பாராட்டுகிறது.
சமன்செய்து சீர்தூக்கும்‌ கோல்போல்‌ அமைந்தொருபால்‌
கோடாமை சான்றோர்க்கு அணி  –  திருக்குறள்‌

“வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு” என்று குறிப்பிடும் நூல் தொல்காப்பியம்

“வண்புகழ் மூவர் தண்பொழில் வரைப்பு” என்று குறிப்பிடும் நூல் தொல்காப்பியம்‌

மூவேந்தர்கள்‌ குறித்த செய்திகள்‌ இடம்பெற்றுள்ள நூல்: வால்மீகி இராமாயணம்‌, மகாபாரதம்‌, அர்த்தசாத்திரம்‌, அசோகர்‌ கல்வெட்டு

கார்மேகக் கவிஞர் இயற்றிய நூல் கொங்கு மண்டலச் சதகம்.

சேலம், கோவை பகுதிகள் கொங்கு நாட்டுப் பகுதிகள் ஆகும்.

சேரர்களின் நாடு குடநாடு எனப்பட்டது.

தலைநகர் – வஞ்சி

பரவல் – மேற்கு மலைத்தொடரில் தோன்றி அரபிக்கடலில் கலக்கும் பேரியாற்றங்கரையில் வரை

சிறப்பு பெயர் – கருவூர்

துறைமுக பட்டினங்கள் – தொண்டி, முசிறி, காந்தளூர்

கொடி – விற்கொடி ஆகும்.

பூ – பனம்பூ

முடியுடைய மூவேந்தர்களில் சேரர்களே பழமையானவர்கள் என்று  சேர, சோழ, பாண்டியர் என்னும் தொடரையே இதற்குச் சான்றாகக் காட்டுவர்.

“போந்தை வேம்பே ஆர்என வரூஉம்
மாபெருஞ் தானையர் மலைந்த பூவும்”
  (புறத்திணை இயல். 5) –தொல்காப்பியம்

போந்தை (பனம் பூ)

சேரனுக்குரிய அடையாளப் பூவான பனம்பூவைப் புகழ்வது போந்தை,

இவர்களின்‌ தலைநகராக வஞ்சி விளங்கியது. சேரர்களின்‌ நாடு குடநாடு – இதனைக்‌ கருவூர்‌ என்றும்‌ அழைப்பர்‌ தொண்டி, முசிறி, காந்தளூர்‌ என்பன சேரநாட்டின்‌ துறைமுகப்‌ பட்டினங்க  சேரர்களின்‌ கொடி விற்கொடி

(வேப்பம்பூ)

பாண்டியனுக்குரிய அடையாளப் பூவான வேப்பம்பூவைப் புகழ்வது வேம்பு,

ஆர் (ஆத்திப்பூ

 சோழனுக்குரிய அடையாளப் பூ ஆத்தி.

கொங்குநாட்டுப் பகுதியில் காவிரி, பவானி, நொய்யல், ஆன்பொருநை (அமராவதி) ஆகிய ஆறுகள் பாய்கின்றன.

ஆன்பொருநை (ஆநிரைகள் நிறைய இவ்வாற்றங்கரைகளில் காணப்பட்டதால் இப்பெயர்) ஆநிரை = ஆ + நிரை; ஆ = பசு; நிரை = படை/கூட்டம்.

செங்குட்டுவனின்‌ கடற்போர்‌ வெற்றியால்‌ அவன்‌ கடல்‌ பிறக்கோட்டிய செங்குட்டுவன்‌ என்று அழைக்கப்பட்டான்‌. கடம்பர்‌ என்னும்‌ கடற்கொள்ளையர்களைச்‌ சேரமன்னர்கள்‌ அடக்கினர்‌. முசிறி சேரர்களின்‌ சிறந்த துறைமுகங்களுள்‌ ஒன்றாக விளங்கியது.

“மீனோடு நெற்குவைஇ

மிசையம்பியின் மனைமறுக்குந்து

கலந்தந்த பொற்பரிசம்

கழித்தோணியால் கரைசேர்க்குந்து”     (புறம்‌ 343) ஏற்றுமதி, இறக்குமதி பற்றி தெரிவிக்கிறது.

“நெல்லும் உப்பும் நேரே ஊரீர்

கொள்ளிரோவெனச் சேரிதொறும் நுவலும்” (அகம், 390: 8-9)

நெல்லே விலையைக்‌ கணக்கிட அடிப்படையாக இருந்தது என்பர்‌. உப்பும்‌ நெல்லும்‌ ஒரே மதிப்புடையனவாக இருந்தன என்பதை, அகப்பாடல்‌ மூலம்‌ அறியலாம்‌.

நீலகிரி மாவட்டம்‌ தேயிலைத்‌ தொழிற்சாலைகள்‌ நிறைந்தது.

கோவன்புத்தூர்‌ என்னும்‌ பெயரே கோயம்புத்தூர்‌ என்று மருவி வழங்கப்பட்டு வருகிறது.

திண்டுக்கல் பகுதி மலர் உற்பத்தியில் முதலிடம் வகிக்கின்றது. எனவே ‌ தமிழ்நாட்டின்‌ ஹாலந்து என்றும்‌ சிறப்பிக்கப்படுகிறது.

தமிழகத்திலேயே மஞ்சள்‌ சந்தை ஈரோட்டில்தான்‌ நடைபெறுகின்றது.

திருப்பூர்‌ மிகச்சிறந்த பின்னலாடை நகரமாக விளங்குகிறது. இந்தியாவின்‌ முதல்‌ ஆயத்த ஆடைப்‌ பூங்காவான நேதாஜி ஆயத்த ஆடை பூங்கா இம்மாவட்டத்தில்‌ அமைந்துள்ளது. தேசிய அளவில்‌ புகழ்பெற்ற காங்கேயம்‌ காளைகள்‌ இம்மாவட்டத்திற்குப்‌ பெருமை சேர்க்கின்றன.

நாமக்கல்‌ முட்டைக்கோழி வளர்ப்பிலும்‌ முட்டை உற்பத்தியிலும்‌ தென்னிந்தியாவிலேயே நாமக்கல்‌ முதன்மையான இடம்‌ வகிக்கின்றது

சேலம்‌ மாங்கனி நகரம்‌ என்னும்‌ சிறப்புப்‌ பெயர்‌ கொண்டது. ஏழைகளின்‌ ஊட்டி என்று அழைக்கப்படும்‌ ஏற்காடு இம்மாவட்டத்தில்‌ அமைந்துள்ளது.

கரூர்‌ ‘வஞ்சிமாநகரம்‌’ என்னும்‌ பெயரும்‌ உண்டு. கிரேக்க அறிஞர்‌ தாலமி, கரூரைத்‌ தமிழகத்தின்‌ முதன்மையான உள்நாட்டு வணிக மையமாகக்‌ குறிப்பிட்டுள்ளார்‌.

தூத்துக்குடி முத்து நகரம்
சிவகாசி குட்டி ஜப்பான்‌
மதுரை தூங்கா நகரம்‌
திருவண்ணாமலை தீப நகரம்
திண்டுக்கல் தமிழ்நாட்டின் ஹாலந்து
திருப்பூர் பின்னலாடை நகரம்
ஈரோடு மஞ்சள் சந்தை
சேலம் மாங்கனி நகரம்
ஏற்காடு ஏழைகளின் ஊட்டி

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories