Blog

உடுமலை நாராயணகவி

2
Old Syllabus

உடுமலை நாராயணகவி

உடுமலை நாராயணகவி

ஆசிரியர் குறிப்பு

புலவர் உடுமலை நாராயணகவி
பிறப்பு திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பூவிளைவாடி என்னும் பூளவாடிச் சிற்றூர்
பெற்றோர் கிருஷ்ணசாமி – முத்தம்மாள்
இயற்பெயர் நாராயணசாமி (நாராயணகவி என்று பெயர் சூட்டிக்கொண்டு கவிஞர் இனமென்று தன்னை அடையாளம் காட்டிக் கொண்டவர்.)
காலம் 25.09.1899 முதல் 23.05.1981
சிறப்பு பெயர் பகுத்தறிவுக் கவிராயர், நாராயணகவி என தமிழ் மக்களால் அழைக்கப்படுபவர்

 

  • இவர் திரைப்படப் பாடல் ஆசிரியரும், நாடக எழுத்தாளரும் ஆவார்.
  • பாமர மக்களிடையே விழிப்புணர்வு எற்படுத்தும் வகையில் சமுதாய பாடல்களை எழுதிச் சீர்திருத்தக் கருத்துக்களை பரப்பியவர்.
  • விடுதலைப் போராட்டத்தின் போது தேசிய உணர்வு மிக்க பாடல்களை எழுதி மேடை தோறும் முழங்கியவர்
  • முத்துசாமிக் கவிராயரின் மாணவர்; ஆரம்ப காலத்தில் நாடகங்களுக்குப் பாடல் எழுதினார். இவருடைய பாட்டுகள் நாட்டுப்புற இயலின் எளிமையையும், தமிழ் இலக்கியச் செழுமையையும் கொண்டிருந்தன.
  • ஆரம்பத்தில் ஆன்மீகப் பாடல்களை எழுதிய நாராயணகவி, மகாகவி பாரதியாரின் நட்புக்குப்பின் பாமர மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சமுதாயப் பாடல்களை எழுதி அதன் மூலம் சீர்திருத்தக் கருத்துக்களைப் பரப்பியவர்.
  • கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணனுக்கு `கிந்தனார்’ கதாகாலட்சேபம் எழுதியதால் கலைவாணரின் குருவாக விளங்கியவர்.
  • ஏறத்தாழ பத்தாயிரம் பாடல்களை எழுதியுள்ள நாராயணகவி இயல்பாகவே இனிமையான சுபாவம் கொண்டவர்.
  • நேர்மையும், சொல்திறமையும் மிக்கவர். எவ்வகையிலும் தலை வணங்காத உறுதி உடையவர். பிறருக்கு உதவுகின்ற மனம் படைத்தவர். திரையுலகில் தமக்கென ஒரு மதிப்பையும் புகழையும் வைத்திருந்தவர்.

பாடல் எழுதிய திரைப்படங்கள்

  • அறிஞர் அண்ணா எழுதிய வேலைக்காரி, ஓர் இரவு, நல்லதம்பி போன்ற படங்களுக்கும் கலைஞர் மு. கருணாநிதி கதை வசனம் எழுதிய பராசக்தி, மனோகரா திரைப்படங்களுக்கும், பிரபாவதி, காவேரி, சொர்க்கவாசல், தூக்குத்தூக்கி, தெய்வப்பிறவி, மாங்கல்யபாக்கியம், சித்தி, எங்கள் வீட்டு மகாலட்சுமி, ரத்தக் கண்ணீர், ஆதிபராசக்தி, தேவதாஸ் போன்ற படங்களுக்குப் பாடல்கள் எழுதியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறப்புகள்

23.5.1981 இல் மறைந்தார்.இந்திய அரசு உடுமலை நாராயணகவி நினைவைப் போற்றும் வகையில் 31.12.2008 இல் இந்திய அஞ்சல் துறை அஞ்சல்தலை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு இவர் வாழ்ந்த திருப்பூர் மாவட்டம்உடுமலைப்பேட்டையில் உடுமலை நாராயணகவி நினைவைப் போற்றும் வகையில் மணிமண்டபம் அமைத்துள்ளது. இங்கு உடுமலை நாராயணகவியின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அவரது வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.

கவிராயரின் பாடல்கள் மக்கள் மனங்களை ஈர்த்து அவர்களின் உள்ளங்களில் தனியிடத்தைப் பெற்றன. ‘கலைமாமணிஎன்னும் பட்டம் பெற்றார்.

விடுதலைப் போரில் ஈடுபாடு

மதுரையில் நாராயணசாமி பல நாடகங்களுக்கு உரையாடல்களும் பாடல்களும் எழுதினார். அதே சமயத்தில் தேசத்தில் சுதந்திர வேள்வித்தீ கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியிருந்தது. தன் பங்காக ஏராளமான தேசிய உணர்வுப் பாடல்களை எழுதி அன்றைய மேடைகள் தோறும் முழங்க வைத்தார்.

அந்தக்‌ காலம்‌ இந்தக்‌ காலம்‌

நெனச்சதை எல்லாம்‌ எழுதி வச்சது

அந்தக்‌ காலம்‌ – எதையும்‌

நேரில்‌ பார்த்தே நிச்சயிப்பது

இந்தக்‌ காலம்‌ ஆமா… இந்தக்‌ காலம்‌

பாடல்

ஒன்றல்ல இரண்டல்ல தம்பி சொல்ல

ஒப்புமை இல்லாத அற்புதம் தமிழ்நாட்டில்

(ஒன்றல்ல இரண்டல்ல தம்பி…)

தென்றல் தரும் இனிய தேன்மண மும்கமழும்

செங்கனியும் பொன்கதிரும் தந்துதவும் நன்செய்வளம்

(ஒன்றல்ல இரண்டல்ல தம்பி…)

பகைவென்ற திறம்பாடும் பரணிவகை – செழும்

பரிபாடல் கலம்பகங்கள் எட்டுத்தொகை – வான்

புகழ்கொண்ட குறளோடு அகம்புறமும் – செம்

பொருள்கண்ட தமிழ்ச்சங்க இலக்கியப் பெருஞ்செல்வம்

(ஒன்றல்ல இரண்டல்ல தம்பி…)

முல்லைக்குத் தேர்கொடுத்தான் வேள்பாரி – வான்

முகிலினும் புகழ்படைத்த உபகாரி – கவிச்

சொல்லுக்குத் தலைகொடுத்தான் அருள்மீறி – இந்த

வள்ளலாம் குமணன்போல் வாழ்ந்தவர் வரலாறு

(ஒன்றல்ல இரண்டல்ல தம்பி…)

 

‘ஒன்றல்ல இரண்டல்ல’ – பாடலில் இடம் பெற்றுள்ள வள்ளல்கள் 

  • முல்லைக்குத் தேர் தந்த வள்ளல் வேள்பாரி.
  • புலவரின் சொல்லுக்குத் தன் தலையையே தரத் துணிந்தவன் குமண வள்ளல்.

தமிழுக்கு வளம் சேர்க்கும் இலக்கிய வகைகளாகக் கவிஞர் கூறுவன

  • பகைவரை வென்று பாடுவது பரணி இலக்கியம்.
  • பரிபாடல் கலம்பக நூல்கள், எட்டுத்தொகை, திருக்குறள், சங்க இலக்கியங்கள் – ஆகியன தமிழுக்கு வளம் சேர்க்கும் இலக்கிய வகைகளாகக் கவிஞர்  கூறுகிறார்

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories