Blog

வாணிதாசன்

vanidasan
Old Syllabus

வாணிதாசன்

வாணிதாசன்

 

இயற்பெயர்
எத்திராசலு (எ) அரங்கசாமி
பெற்றோர்
அரங்க திருக்காமு – துளசியம்மாள்
ஊர்
புதுவையை அடுத்த வில்லியனூர்
காலம்
22.07.1915 –  07.08.1974
துணைவியார்
ஆதிலட்சுமி
தாய்மொழி = தெலுங்கு
வாணிதாசன் குறிப்பு
  • இவர் பாவேந்தர் பாரதிதாசனிடம் தொடக்கக்கல்வி பயின்றவர்.
  • இவரின் பாடல்கள் சாகித்திய அகாதெமி வெளியிட்ட “தமிழ்க் கவிதைக் களஞ்சியம்” என்ற நூலிலும், தென்மொழிகள் புத்தக வெளியீட்டுக் கழகம் வெளியிட்ட “புதுதமிழ்க் கவிமலர்கள்” என்ற நூலிலும் மற்றும் பற்பல தொகுப்பு நூல்களிலும் இடம் பெற்றுள்ளன.
  • உருசியம், ஆங்கிலம் முதலிய மொழிகளில் இவர் பாடல்கள் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன
  • தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மொழிகளில் வல்லுநர்
  • இவர், “தமிழ்-பிரெஞ்ச் கையகர முதலி” என்ற நூலை வெளியிட்டார்.
  • பிரெஞ்ச் குடியரசு தலைவர் இவருக்கு “செவாலியர்” என்ற விருதினை வழங்கி உள்ளார்
  • இவரின் முதல் பாடல் = பாரதி நாள் இன்றடா! பாட்டிசைத்து ஆடடா!
  • தான் வாழ்ந்த வீட்டிற்கு “புரட்சி அகம்” எனப் பெயரிட்டார்
  • இவரது ‘விதவைக்கொரு செய்தி’ என்ற கவிதை ‘திராவிட நாடு’ இதழில் வெளிவந்து இவருக்குப் பெரும் புகழைப் பெற்றுத் தந்தது.
  • இவர் எல்லப்ப் வாத்தியார், முத்துக்குமார சுவாமி பிள்ளை, பாரதிதாசன் மற்றும் முடியரசன் ஆகியோரிடம் தமிழ் கற்றவர்.
  • 1950 ஆம் ஆண்டு பாரதிதாசன் நடத்திய “அழகின் சிரிப்பு” என்ற கவியரங்கு நிகழ்ச்சியில் முடியரசன் முதல் பரிசையும், வாணிதாசன் 2-வது பரிசையும் வென்றனர்.
வாணிதாசன் சிறப்பு
  • பாரதிதாசன் பரம்பரையில் மூத்தவர்
  • பாவேந்தர் பரிசு பெற்றுள்ளார்
  • மயிலை சிவமுத்து = தமிழ்நாட்டுத் தாகூர்
  • மயிலை சிவமுத்து = தமிழ்நாட்டிற்கு பாரதிதாசரும் வாணிதாசரும் இரு கண்மணிகளாக இருந்து இக்காலத்துக்கு வேண்டிய வகையில் பாட்டின் மூலமாக செய்துவரும் தொண்டு பெரிதும் பாராட்டத்தக்கது
  • மயிலை சிவமுத்து = பாரதியார், பாரதிதாசன் ஆகிய இந்த இருவரினும் விஞ்சிய வகையில் பாடி வருகிறார்
  • மயிலை சிவமுத்து = இவருடைய பாடல்களை உலகப் பெருங்கவிஞருள் ஒருவரான ரவீந்திரநாத் தாகூரின் பாடல்களுக்கு நிகராக கருதலாம்
  • மயிலை சிவமுத்து = மடமையில் துயிலும் மக்கள் விழிகளைத் திறந்து பார்த்துப் புத்தம் புதுவாழ்வு பெற்று வாழ நம் தமிழ்நாட்டுத் தாகூராகிய வாணிதாசனார் பல்லாண்டு வாழ்வாராக
  • சிலேடை, இடக்கரடக்கல் அமைத்துப் பாடுவாதில் வல்லவர்
  • குற்றியலுகரத்தின் ஒலியை உவமையாக கையாண்ட முதல் கவிஞர் இவரே
  • இவர் பெயரால் சேலிய மேட்டில் ஓர் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது
  • திரு.வி.க = “திருவாணிதாசர் ஒரு பெரும் உலகக் கவிஞர் ஆதல் வேண்டும் என்பது எனது வேட்கை” என்றார்
  • மா.இராமலிங்கம் = இயற்கையை பாடுவதில் இவரை மிஞ்ச தற்கால கவிஞர்கள் யாரும் இல்லை
  • கண்ணதாசன் = தோழர் வாணிதாசனாரது கவிதைகளை படிக்கும் பொது சில சமயங்களில் பாரதிதாசனுக்கும் முன்னாலே போகிறார் என்ற எண்ணம் தட்டும்.
  • கண்ணதாசன் = இவரின் பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தல் “நோபல் பரிசு” கிடைக்கும்
  • பாராதிதாசன் கூறியது,
எல்லாரும் நல்லார் என்(று) எண்ணுவார் இன்றமிழ்
வல்ல கவிவாணி தாசனார்  – அல்லும்
பகலும் தமிழர் தம் பண்பாடு பற்றிப்
புகழும் பாட்(டு) ஒவ்வொன்றும் பொன்
  • திருநாவுக்கரசு = தமிழகத்தின் மறுமலர்ச்சிக் கவிஞர்களுள் முதிர்ந்த அறிவும், கனிந்த அனுபவமும் பெற்று விளங்குபவர் கவிஞர் திரு வாணிதாசன் ஆவார்.
  • உருசியம்‌, ஆங்கிலம்‌ முதலிய மொழிகளில்‌ இவர்தம்‌ பாடல்கள்‌ மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
வாணிதாசன் சிறப்பு பெயர்கள்
  • கவிஞரேறு
  • பாவலர் மணி
  • தமிழ்நாட்டுத் தாகூர் (மயிலை சிவமுத்து)
  • தமிழ்நாட்டு வோர்ட்ஸ்வொர்த்
புனைப்பெயர்
  • ரமி
வாணிதாசன் பாடல் வரிகள்

*. கற்பிப்போர்‌ கண்கொடுப்‌ போரே! – அந்தக்‌

கணக்காயர்‌ உரையினில்‌ இருசெவி சேரே!

நற்பெயர்‌ எடுத்திட வேண்டும்‌! – நாளும்‌

‘நன்றாகப்‌ படித்துநீ முன்னேற வேண்டும்‌! *

சொற்பொருள்‌: பதுமை – உருவம்‌; மெய்ப்பொருள்‌ – நிலையான பொருள்‌; கணக்காயர்‌ – ஆசிரியர்‌.

நூல்‌ குறிப்பு : கவிஞர்‌ வாணிதாசன்‌ தமிழ்‌ உலகிற்குப்‌ புனைந்து அளித்துள்ள  “குழந்தை இலக்கியம்‌” என்னும்‌ பாடல்‌ தொகுப்பிலிருந்து “மெய்ப்பொருள்‌ கல்வி” என்னும்‌ தலைப்பின்கீழ்‌ இடம்பெற்றுள்ள பாடல்‌, பாடப்பகுதியாக அமைக்கப்பட்டுள்ளது.

Leave your thought here

Your email address will not be published. Required fields are marked *

Categories